மராட்டிய மாநிலத்தின் பண்டாரா மாவட்டத்தைச் சேர்ந்த கயர்லாஞ்சியில் ஏழை தலித் பூட்மாங்கே குடும்பத்தினர் 2006ஆம் ஆண்டு சாதி இந்துக்களால் கொடூரமாக வேட்டையாடப்பட்ட  கதையை வாசகர்கள் மறந்திருக்க முடியாது. 

 

 இந்தக் கிராமத்தில் பூட்மாங்கே குடும்பத்தினருக்கு வறண்டு போன ஐந்து ஏக்கர் நிலம் இருக்கிறது.  இதில் தங்களுக்குத் தேவைப்படும் வசதியோடு ஒரு வீடு கட்ட அந்த தலித் குடும்பம் விரும்புகிறது. ஒரு தலித் படோபமாக வீடு கட்டுவதா என்று சாதி இந்துக்கள் அதை வன்மத்துடன் எதிர்க்கின்றனர். மேலும் இரண்டு ஏக்கர் நிலத்தை கிராமத்தின் பொதுப்பாதைக்கு தேவை என்று வஞ்சகமாக எடுத்துக் கொள்கின்றனர். இந்த அநீதியை அந்தக் குடும்பத்தின் தாயான சுலேகாவின் உறவினர், அருகாமை கிராமத்தில் இருப்பவர், போலீசிடம் எடுத்துச் செல்வதற்கு உதவுகிறார். ஆனால் போலீசு இந்தப் புகார் எதையும் பதிவு செய்ய மறுக்கிறது.


 ஒரு தலித் குடும்பத்தினருக்கு இவ்வளவு திமிரா என்று  சினமடைந்த சாதிவெறிக் கும்பல் அந்த உறவினரைப் போட்டு அடித்ததோடு சுலேகாவையும் அவளது இளவயது மகளான பிரியங்காவையும் நிர்வாணமாக்கி கும்பலாக பாலியல் வன்முறை செய்து அருகாமை ஓடையில் கொன்று போடுகிறது. மேலும் சுலேகாவின் இருமகன்களான ரோஷனும், சுதீரும் அடித்துக் கொல்லப்படுகிறார்கள். குடும்பத் தலைவரான பையாலால் பூட்மாங்கே மட்டும் இந்தக் கொடூரத் தாக்குதலிருந்து தப்பிக்கிறார்.


 சில நாட்களுக்குப் பிறகு இந்த சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கும் வண்ணம் பத்திரிகைகளில் வெளிவந்தது. ஆரம்பத்தில் இந்த சம்பவம் சுரேகாவிற்கும் அவரது உறவினருக்கும் உள்ள தவறான உறவால் ஆத்திரமடைந்த கிராமத்தினர் அவர்களைக் கொன்றுவிட்டனர் என்று போலீசு உண்மையை மறுத்து வழக்குப் பதிவு செய்தது. இதை எதிர்த்து பல்வேறு ஜனநாயக அமைப்புகளும், தலித் மக்களும் போராடினர். அப்படி நடந்த போராட்டத்தின்போது கூட ஒரு தலித் இளைஞர் போலீசால் சுட்டுக் கொல்லப்பட்டார். பலர் போலீசின் தடியடியால் காயமடைந்தனர். இந்த இழப்புகளுக்குப் பின்னர்தான் மாநில அரசு சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிட்டது.


 அந்த விசாரணை முடிந்து இரண்டு ஆண்டுகள் வழக்கு நடைபெற்ற பிறகு பண்டாரா மாவட்ட செசன்சு நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. குற்றம் சாட்டப்பட்ட பதினோரு பேரில் எட்டு பேரைக் குற்றவாளிகள் என்று அறிவித்திருக்கும் நீதிபதி, மீதி மூன்று பேர் குற்றமிழைத்ததற்குச் சாட்சிகள் இல்லை என்று விடுதலை செய்திருக்கிறார். ஆனால் குற்றவாளிகள் என்று தீர்ப்பளிக்கப்பட்ட அந்த எட்டு பேரும் கூட உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்து விடுதலை அடையும் வண்ணம்தான் பண்டாரா நீதிமன்றத்தின் தீர்ப்பு அமைந்திருக்கிறது.


 இந்தப் படுகொலைகளை சாதிய வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ்தான் விசாரித்து தீர்ப்பளிக்க வேண்டும் என்று அரசுத்தரப்பு வழக்குரைஞர் கோரியதை நீதிமன்றம் ஒப்புக் கொள்ளவில்லை. இதன் மூலம் இந்தக் கொலைகள் சாதிய வெறியினால் நடந்தது என்பது மறுக்கப்பட்டு,  ஏதோ தனிப்பட்ட சொத்துத் தகராறில் நடந்த கொலை போல நீதிமன்றம் எடுத்துக் கொண்டிருக்கிறது. அடுத்தது கொலை செய்வதற்கு எந்த சதியும் நடக்கவில்லை என்று வாதாடும் தீர்ப்பு சுரேகாவும் அவரது மகளும் கற்பழிக்கப்பட்டதற்கு ஆதாரமில்லை என்றும் கூறியிருக்கிறது.


 உண்மையில் இந்தப் படுகொலை நடந்த செப்டம்பர் 2006 இன் போது இதில் தப்பிப் பிழைத்த பையாலால் பூட்மாங்கேயின் வாக்குமூலம் எதுவும் சாதிய வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் முதல் தகவல் அறிக்கையில் இடம்பெறவில்லை. மேலும் இச்சம்பவம் நடப்பதற்கு முன்பு பூட்மாங்கே குடும்பத்தினர் போலீசை அணுகிய போதெல்லாம் அவர்கள் அலட்சியமாக நடத்தப்பட்டனர். எந்த வழக்கோ, விசாரணையோ நடக்கவில்லை. சம்பவம் நடந்த பிறகு கூட போலீசு சிரத்தை காட்டவில்லை. பல போராட்டங்களுக்குப் பிறகு அக்டோபர் 2006 இல்தான் உண்மையான வழக்கு பதிவு செய்யப்பட்டு போலீசு விசாரணை நடந்தது.  இப்படி உண்மை அறைந்து கூறினாலும் நீதிபதி  அவற்றையெல்லாம் சட்டை செய்யாமல் தீர்ப்பளித்திருக்கிறார். இது கீழ் வெண்மணிப் படுகொலையில் குற்றம் சாட்டப்பட்ட கோபால கிருஷ்ண நாயுடு போன்ற சமூகத்தால் மிகவும் மதிக்கப்படும் பிரமுகர் அப்படியெல்லாம் செய்திருக்க மாட்டார் என்று அன்றைய நீதிமன்றம் விலக்கு கொடுத்தது போல இருக்கிறது.


 இவ்வளவு ஓட்டைகளையும் தன்னகத்தே கொண்டிருக்கும் இந்தத்தீர்ப்பு மேல்முறையீட்டில் நிற்காது என்று தெரிந்தே வழங்கப்பட்டிருக்கிறது. நீதிமன்றமும் சாதிய மனோபாவத்திலிருந்து விடுபடவில்லை என்பதற்கு இந்தத்தீர்ப்பு ஒரு எடுத்துக் காட்டு. என்ற போதிலும் இந்த அளவு அரசுத் தரப்பு பலவீனமாக தனது வாதங்களை முன்வைத்ததும் ஒரு காரணமாகும். இவ்வளவுக்கும் இந்த வழக்கை பல்வேறு பிரிவுகளில் விசாரணை செய்தவர்களில் பலர் தலித் அதிகாரிகள் என்பது குறிப்பிடத்தக்கது. அப்படி இருந்தும் வழக்கு வெற்றி பெறவில்லை. படித்து முன்னேறிய தலித்துகள் இருந்தால் நிலைமை தலைகீழாகி விடும் என்று பிழைப்பு வாதத்தை முன்வைக்கும் தலித் அமைப்புகள் இதற்கு என்ன சொல்வார்கள்? அதிகாரி தலித்தாக இருந்தாலும் கூட அவரும் சாதிய சமூகம் விதித்திருக்கும் மன ஓட்டத்தின்படிதான் செயல்படுவார் என்பதையே கயர்லாஞ்சி எடுத்துரைக்கிறது.
 இதற்கு மேல் இந்த வழக்கில் தப்பிப் பிழைத்த ஒரே தலித்தான பையாலால் பூட்மாங்கேவுக்கு பாதுகாப்பு கொடுத்து வழக்கின் விசாரணைகள் முன்னேறுவதற்கு மராட்டியத்தின் தலித் அரசியல் கட்சிகள் மெனக்கெடவில்லை. இந்த சம்பவம் வெளியே வந்தபோது ஆர்ப்பாட்டம் செய்தவர்கள் அதன் பிறகு அடங்கிப் போனார்கள்.


 எல்லாவற்றுக்கும் மேலாக உயர் சாதி இந்துக்களைப் போல சாதிய வெறியையும், தாழ்த்தப்பட்ட மக்கள் மீதான வெறுப்பையும் கொண்டிருக்கும் பிற்படுத்தப்பட்ட சாதி இந்துக்களின் திமிரை இந்த தீர்ப்பு அடக்குவதற்குப் பதில் அது நியாயம்தான் என்பது போல  அளிக்கப்பட்டிருக்கிறது. சாதியக் கொடுங்கோன்மைக்கு பெயர் பெற்ற வட இந்தியாவின் மனசாட்சியை இந்த தீர்ப்பு எந்த விதத்திலும் தட்டி எழுப்பாது என்பதோடு அதை உரமூட்டி வளர்க்கவே செய்யும். நவீன இந்தியா கண்ட தலித் மக்களின் மீதான மோசமான வன்முறைகளின் ஒரு அத்தியாயமான கயர்லாஞ்சிக்கு நியாயம் வழங்கப்படவில்லை என்பதால் கயர்லாஞ்சிகள் தொடரத்தான் செய்யுமே ஒழிய குறையப் போவதில்லை. நீதி மறுக்கப்பட்ட இந்த நீதிமன்றத்தின் தீர்ப்பும் அதைத்தான் வழிமொழிகிறது.

 

விழ்த்துவிட்டது. விவசாயிகளும் சி.பொ.ம. எதிர்ப்புப்  பிரச்சாரத்தில் தீவிரமாக இறங்கினர். தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் கிராமம் கிராமமாகச் சென்று கலை நிகழ்ச்சிகள் நடத்தி, சி.பொ.ம.வுக்கு  எதிராகப் பிரச்சாரத்தில் ஈடுபட்டன. தேர்தலுக்குண்டான அனைத்துப் பரபரப்புகளுடனும், பலமான போலீஸ் காவலுடனும் வாக்குப்பதிவு நடந்தது.


 ராய்காட் மாவட்ட ஆட்சியர் 30,000 விவசாயிகளுக்கு வாக்குப்பதிவில் கலந்துகொள்ள அழைப்பு அனுப்பியிருந்தார். 6,000 வாக்குகள் பதிவாயின. எனினும் ஒரு விவசாயிக்கே 23 அழைப்புகள் அனுப்பப்பட்டிருந்ததால் இது அதிகபட்ச வாக்குப்பதிவுதான்.


 இதில்  82% விவசாயிகள் சி.பொ.ம.வுக்கு எதிராக, அவை தங்களுக்கு வேண்டவே வேண்டாம் என வாக்களித்துள்ளனர்.  வெகுசிலரே, 1 கோடி ருபாய்க்கு, 99 வருடக் குத்தகைக்குத் தங்களது நிலத்தைத் தருவதாகவும், அதுவும் வேலைவாய்ப்புக்கு உத்தரவாதமளித்தால் மட்டுமே தருவதாகவும் வாக்களித்துள்ளனர். ஏக்கருக்கு 10 லட்சம் தரும் ரிலையன்சின் தற்போதைய வாக்குறுதிக்கு ஆதரவாக யாரும் வாக்களித்ததாகத் தெரியவில்லை.


 இந்த வாக்கெடுப்பில் சி.பொ.ம. வுக்கு எதிராக வாக்களித்துவிட்டு வந்த தாமாஜி பட்டீல் எனும் விவசாயி, "அரசின் பக்கபலத்துடன் அம்பானி, எங்கள் நிலத்தை ஆக்கிரமித்துத் தொழிற்சாலை கட்டுவதை அனுமதிக்க நாங்கள் என்ன முட்டாள்களா? நிலத்திற்கு பணம் மாற்றாகுமா?'' என்று கேட்கிறார். நரேந்திர பரசுராம் பட்டீல் எனும் இன்னொரு விவசாயி, "இது விவசாயிகளின் போராட்டம், நாங்கள் தொடர்ந்து கடுமையாகப் போராடக்கூடியவர்கள். எங்களது நிலம் எங்கள் கைகளில் வரும் வரை எங்களின் இந்தப் போராட்டம் ஓயாது' என்று கூறினார்.


 அவர் கூறியது போலவே கடந்த இரண்டரை ஆண்டுகளாகத் தொடர்ந்து கடுமையாகப் போராடி, அரசை நிர்பந்தித்து, இப்படி ஒரு வாக்கெடுப்பை நடத்தச் செய்ததுடன், அதில் சி.பொ.ம.வுக்கு எதிரான தங்களது கருத்தைப் ஆழமாகப் பதிவு செய்துள்ளனர். ஆனால், வாக்கெடுப்பு நடந்த அன்றே அரசு அதிகாரி ஒருவர் "வாக்கெடுப்பு மக்களின் கருத்தை அறிவதற்காக மட்டும்தான் நடத்தப்பட்டுள்ளது, ஆனால், இறுதி முடிவு மாநில அரசினுடையதாக இருக்கும்'  என்று கூறியுள்ளார்.  மக்களின் முடிவை அரசு ஏற்காத பொழுது, சி.பொ.ம.வுக்கெதிரான தங்களது போராட்டம் இன்னும் அதிக வீரியத்துடன் இருக்கும் என விவசாயிகள் கூறியுள்ளனர்.


 நாடு முழுவதும் சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் அமைக்கப் பொருளாதார வல்லுநர்கள், தரகு முதலாளிகள், மைய அமைச்சர்கள், மாநில அரசுகள் என அனைவரிடமும் கருத்துக் கேட்ட இந்த அரசு, இதனால் நிலமிழந்து ஓட்டாண்டியாகப் போகும் விவசாயிகளில் ஒருவரிடம் கூடக் கருத்துக் கேட்கவில்லை. ஆனால், சிங்குரிலும், நந்திகிராமிலும், ஒரிசாவிலும், மராட்டியத்திலும் விவசாயிகள் தங்களது கருத்தைப் போராட்டங்களின் மூலமாகப் பதிவு செய்து வருகிறார்கள். சாம்ராஜ்யக் கனவுடன் தங்களது நிலங்களைக் கொள்ளையடிக்க வரும், பன்னாட்டு, தரகு முதலாளிகளைத் துரத்தியடிக்காமல்  இந்தப் போராட்டங்கள் ஓயப்போவது இல்லை.


· அழகு
·