உழைக்கும் மக்கள் காறி உமிழும் பார்ப்பனிய சுரண்டல் அமைப்புத்தான், மனித பிரக்ஞை முதல் மானுட ஒழுக்கம் வரையிலான அனைத்து சமூக இழிவையும் புகுத்துகின்றது.

 

மனித உழைப்பு சார்ந்த இந்த உண்மையை மறுப்பது கருத்து முதல்வாதம்.

 அரவிந்தன் நீலகண்டனின் "மார்க்சியமும் அறிவியலும்" என்ற கட்டுரை வெற்று அலட்டல். கருத்தியல் ரீதியாக விமர்சிக்க, அதில் எந்தக் கருத்துமில்லை. மார்க்சியத்தை தாக்க, சில சம்பவங்களை பொறுக்கியெடுத்து செம்மறி மந்தைகள் போல் ஓடி மேய்கின்றார். நிகழ்ச்சிகளையும் சம்பவங்களையும் மூலவேரில் இருந்து வெட்டியெடுத்து, அதை அறிவியலாக வித்தைகாட்ட முனைகின்றார்.

 

இதன் பின்னுள்ள அவரின் மையமான அரசியல் நோக்கம் தெளிவானது. பொருள் முதல்வாதத்தை மறுப்பது, கருத்து முதல்வாதத்தை திணிப்பது அவரின் பூணூல் கனவு. இதன் மூலம்

 

1. மனிதனை மனிதன் சுரண்டுவதைப் பாதுகாக்க வேண்டும்

 

2. பார்ப்பனர்கள் பார்ப்பனீயம் மூலம் சுரண்டும் சாதிய இந்துத்துவ அமைப்பை பாதுகாக்க வேண்டும்.

 

3. இதை எதிர்த்து அழிக்க முனையும் மார்க்சியத்தை இழிவுபடுத்த வேண்டும். இந்த வகையில் அதற்கு அக்கம் பக்கமாக செயற்படும் பெரியாரியம், அம்பேத்காரியம், பெண்ணியம் போன்ற அனைத்துக் கோட்பாடுகளையும் கொச்சைப்படுத்துவதே அவரின் நோக்கமாக உள்ளது.

 

இதுவே அவரின் மையநோக்கம். இந்த எல்லைக்குள் அறிவியலை பூணூல் வழியாக அறிவிலித்தனமாக கசிய விடுகின்றார். அதை அவர்

 

1. பரம்பரை ரீதியானதும், பிறப்பு ரீதியானதுமான மரபுசார் தன்மையை முதன்மைப்படுத்துகின்றார்.

 

2. இயற்கை மற்றும் சமூக சார் முரண்பாட்டின் விதியை மறுதலிக்கின்றார்.

 

3. மனித வாழ்வியல் வேறுபாடுகள் இயற்கையானதாகவும், அதை மாற்ற முடியாததாக கற்பிக்க முனைகின்றார்.

 

4. பொருளுக்கு வெளியில் கருத்து இருக்க முடியும் என்பதை சொல்ல முனைகின்றார்.

 

5. பொருள்முதல்வாதம் கட்டாயமாக உண்மையாக இருக்கவேண்டியதல்ல, கருத்து முதல்வாதமும் உண்மையா இருக்க முடியும் என்கின்றார்.

 

இதுவே அறிவாக கூறிக் கொண்டு முன்வைத்த குப்பைக்குள், உள்ளார்ந்தமாக வெளிப்படுகின்றது. இதை அவர் நிறுவ எந்த அறிவியல் அடிப்படையையும் தன் கட்டுரையில் கொண்டிருக்கவில்லை. பார்ப்பனீய சூழ்ச்சியையும் சதியையும் அடிப்படையாக கொண்டு, செம்மறி மந்தையாக சம்பவங்கள் மீது ஒடி மேய்கின்றார். இதற்கு "மார்க்சியமும் அறிவியலும்"என்று பூணூல் பாணித் தலைப்பு வேறு.

 

உண்மையில் மார்க்சிய அறிவியல் தளத்தை, அதன் அடிப்படை சமூகக் கூறுகளை அடிப்படையின்றி எழுந்தமானமாக மறுதலிக்கின்றது அவர் கட்டுரை. மனிதனின் அறிவை மறுதலிக்கின்ற, மாற்றாக இருக்கின்ற பிற்போக்கான சமூக அமைப்பின் மாற்றங்களை மறுக்கின்ற, அறிவியல் மறுப்புக் கூச்சலாகும். இதை மூடிமறைக்க கடந்த கால சம்பவங்களை தனக்கு சார்பாக திரிப்பதையே, இந்தக் கும்பல் அறிவாக பீற்றிக்கொள்கின்றது.

 

இதை நிறுவ இந்த கும்பலுக்கு பார்ப்பனீய அடையாளம் உதவுகின்றது. இந்து பாசிச பார்ப்பனிய சாதிய நாய்கள், தமது தன்மைக்கும் குணத்துக்கும் ஏற்ப குலைக்கின்றது. இந்திய சமூக அமைப்பில் தம்மை தாம் அறிவாளியாக காட்ட பூணூல் தேவைப்படுவது எவ்வளவு உண்மையோ, அது இங்கும் மறுபடியும் நிறுவப்படுகின்றது. இந்த பூணூல் உரிமையை பிறப்பால் வரையறுத்து, மொத்த சமூகத்தையும் நலமடித்த கோட்பாடு தான் பார்ப்பனியம். இந்திய மக்களின் அறிவின் அனைத்து கூறையும் சிதைத்து, சாதி என்ற எல்லைக்குள் இந்திய அமைப்பையே பாதுகாப்பது தான் பார்ப்பனியம். அறிவையே மறுக்கும் இந்த பார்ப்பனியத்தின் பூணூல்கள், உலகில் மறுக்கப்பட்டதாக கற்பிக்கும் அறிவு பற்றி உளறுவது தான் வேடிக்கை. இன்று வரை தாழ்த்தப்பட்ட சமூகம், கல்வி கற்கும் உரிமையைக் கூட அங்கீகரிக்காதவர்கள், அதை வன்முறை மூலம் ஒடுக்குபவர்கள், மார்க்சியம் அறிவை புறந்தள்ளியதாக கூறுவதானது தார்மீகப் பலம் எதுவுமற்ற உள்நோக்கம் கொண்ட பார்ப்பனிய சூழ்ச்சியின் சதியின் மீது ஆதாரம் கொள்கின்றது.

 

சக மனிதனை விடவும் தன்னை உயர்ந்தவனாக கற்பித்து, அதன் மூலம் சலுகை பெற்று வாழும் இழிந்த சமூகவிரோதக் கும்பல்கள், அதையே அரசியல் அமைப்புச்சட்டத்தில் புகுத்தி மொத்த மக்களின் அறிவை, வாழ்வை ஒடுக்குபவர்கள், மார்க்சியம் பற்றி சேறு அடிப்பதுதானே இயல்பு. இதில் என்ன ஆச்சரியம் இருக்கின்றது.

 

இந்த சேறடிப்பை "இக்கட்டுரை சட்டீஸ்கரில் மார்க்சிய பயங்கரவாதிகளால் கோழைத்தனமாக கொல்லப்பட்ட காவல்துறையினரின் குடும்பங்களுக்கு சமர்ப்பிக்கப்படுகிறது." என்கின்றார். ஆள்காட்டிகளாக, எடுபிடிகளாக நக்கித் தின்னும் கும்பல்கள் ஒன்றுசேர்ந்து, ஒன்றையொன்று பார்த்து குலைக்க முனைகின்றது. இந்த பொலிஸ் குண்டர் படையின் பாதுகாப்பில்தான், இந்திய பார்ப்பனிய சுரண்டல் அமைப்பே நீடிக்கின்றது. அதன் மீதான தாக்குதல், அதை அண்டி வாழ்கின்ற புல்லுருவிகளுக்கு அதிர்வை உருவாக்குகின்றது. அந்த அதிர்வை தான் பூணூல் வழியாக இந்த அறிவிலி வெளிப்படுத்துகின்றது. அரச பயங்கரவாதம் நடத்துகின்ற கோரமான ஒடுக்குமுறைகளின் காவலர்கள் தான், இந்த பூணூல் பேர்வழிகள். இந்திய சமூக அமைப்பில் அனைத்து சமூக கொடுமைகளுக்கும், அதன் துன்பங்களுக்கும் காரணமான ஒரு பார்ப்பனிய சுரண்டல் சமூக அமைப்பை முண்டு கொடுப்பவன் எப்படி அறிவாளியாக இருக்க முடீயும்? அறிவாளி என்பது நகைப்புக்குரியது. பூணூல் சதியையும், சூழ்ச்சியையும் ஆதாரமாக கொண்டு மேய்வது தான், அந்த அறிவின் இழிநிலையாகும். கொடூரமான மனிதவிரோதிகள் தமது சொந்த செய்கையை நியாயப்படுத்துவதையே அறிவு என்று, மக்களுக்கு எதிராகவே வாழும் வர்க்கம் ஊளையிடுவது இயல்பு. பூணூல்களின் குடும்பி சும்மா ஆடுவதில்லை.

 

1. பார்ப்பனீயம் என்னும் கொடூரமான சாதிய இந்துத்துவ கோட்பாடு ஜனநாயகத்துக்கே எதிரானது.

 

2. சக மனிதனின் உழைப்பை திருடும் சுரண்டல் அமைப்பே ஜனநாயகத்துக்கு எதிரானது.

 

3. சமூக முரண்பாடுகளை உருவாக்கி, மக்களை அங்குமிங்குமாக அதற்குள் மோத விடுவதே ஜனநாயகத்துக்கு விரோதமானது.

 

இதை கட்டிப் பாதுகாப்பதைத்தான், இந்த நீலகண்ட பூணூல்கள் புலம்பகின்றன. ஜனநாயகம் பற்றி, மனிதாபிமானம் பற்றி மூக்கால் சிந்துகின்றனர். உண்மையில் இந்த ஜனநாயக விரோத போக்கை ஒழிப்பதையே மறுத்துரைக்க விரும்புகின்றனர். ஜனநாயக விரோதத்தை தக்கவைக்கும் நிறுவனங்கள், கோட்பாடுகள், சிந்தனைகள் அனைத்தையும் தகர்ப்பதை வன்முறையாக காண்கின்றனர். இதை ஜனநாயக விரோதம் என்கின்றனர்.

 

உண்மையில் அனைத்து மக்களின் ஜனநாயகத்தை மறுப்பவர்கள், மக்களை ஓடுக்கி தாம் மட்டும் வாழ்வதை மூடிமறைக்க, பார்ப்பனிய சுரண்டல் அமைப்பையே இயல்பானதாக காட்ட முனைகின்றனர். அதை மீறுவதை ஜனநாயக விரோதம் என்கின்றனர். இந்த மக்கள் விரோத ஜனநாயக விரோத பாசிச பார்ப்பனிய இயந்திரம் மீதான தாக்குதலில் கொல்லப்பட்ட குடும்பத்துக்காக, மனிதாபிமான வேடம் போடுகின்றனர். (இதை நான் அடுத்த கட்டுரையில் விவாதிக்க உள்ளேன்.) உண்மையில் இறந்த கும்பல் பற்றிய பார்ப்பனிய சுரண்டல் அமைப்பின் எடுபிடிகளின் கருசனை போலித்தனமானது. நீலிக்கண்ணீர்.

 

மனிதாபிமானம் என்ற பிரச்னையில் உண்மையில் அக்கறை உள்ளவன், அனைத்து மனிதாபிமான பிரச்சனைiயும் பொதுவில் காண்பான். அவன் பக்கத்தில் குறைந்தபட்ச நேர்மையை நாம் தேடமுடியும். இந்தப் பூணூல் பேர்வழிகள் அப்படி எதையும் பார்ப்பதில்லை. தனது பார்ப்பனியம் சார்ந்த சாதி, தனது வர்க்கம் சார்ந்த சுரண்டல் அமைப்பு, என்று ஒரு பூதக்கண்ணாடி மூலம் பார்த்து குறுகிய வட்டத்தில் ஊளையிடுகின்றனர். இதுதான் இவர்களின் மனிதாபிமான எல்லை. கோடானுகோடி மக்கள் ஒரு நேரக் கஞ்சிக்கு இந்தப் பார்ப்பனிய ஜனநாயகத்தில் வாழவழியற்று, மரணிக்கின்றனர். இவை மீது எந்த மனிதாபிமானமும், இந்த சமூக விரோத புல்லுருவிகளுக்கு வெளிப்படுவதில்லை. இன்று உலகில் வருடாந்தம் 10 கோடி பேர் இந்த உலகமயமாதல் என்ற ஜனநாயக அமைப்பின் விளைவால் மரணிக்கின்றனர். இதன் எதிர் வினையில் செல்வந்தர்கள் பெருச்சாளிகள் போல் பெருகுகின்றனர். 10 கோடி மரணத்தில் ஐந்தில் ஒரு பகுதி இந்தியாவில் கொல்லப்படுகின்றனர். இவற்றை இயற்கையான மரணமாக காட்டுவதும், சர்வதேச விவாதங்களில் மட்டும் இதன் காரணத்தை கணக்கு காட்டுவதுமாக, இந்த ஜனநாயகம் புதை குழிக்கு மேல் உட்கார்ந்து காவல் காக்கின்றது. இந்த சமூக விரோத அமைப்புத் தேவைதானா?

 

இந்த புதை குழி காக்கும், பூணூல் காவலர்கள் தான், சோவியத் மற்றும் சீனாவின் வரலாற்று ஆவணங்கள் மேல் பூணூல் பூதக்கண்ணாடி வைத்து எதையோ தேடி அலைகின்றனர். பூணூல்கள் பூசும் விபூதி போல், அவதூறை பூச அலைகின்றனர். கிட்லர் கட்டமைத்த முன்னைய கற்பனைகள் எல்லாம் பொய்யும் புரட்டுமாக இருந்ததால், அதை நிறுவ முடியவில்லை. இதை விரிவாக தெரிந்து கொள்ள வெளிவராத எனது நூலான "இந்த மண்ணில் சொர்க்கத்தைப் படைப்போம்." என்ற நூலைப் பாக்கவும்

 

அன்றைய சோசலிச சமூகத்துக்கு எதிரான எந்த செயற்பாட்டுக்கும் தண்டனை என்பது அரசியல் அமைப்பு சட்ட ரீதியாகவே உருவாக்கப்பட்டது. ஒரு மக்கள் புரட்சி அதை தெளிவுபடுத்துகின்றது. சட்ட ரீதியாக வரையறுக்கப்பட்ட ஒரு புரட்சி, சுரண்டுவதற்கும் மற்றைய மனிதனை இழிவுபடுத்துவதையும், சமூக முரண்பாடுகளை தோற்றுவிப்பதையும், அதை கடைப்பிடிப்பதையம் அங்கீகரிப்பதில்லை. இது சோசலிச நாடுகளின் பொதுவான சட்ட விதிகள்.

 

இந்த வகையில் இச்சடடங்கள் பொருளாதார அறிவாளிகள் மற்றும் எழுத்தாளர்களுக்கும் பொருந்தும். சுரண்டலை ஆதரிக்கின்ற, கருத்தை முதன்மைப்படுத்தி முன்வைக்கின்றவர்களின் சிந்தனைகள், கருத்துகளை அவரவர் வைத்திருப்பதை பற்றி எந்தப் பிரச்னையுமில்லை. ஆனால் அதை சமூகத்தின் முன் எடுத்துச்செல்லுவதற்கு முடியாது. தன்னை ஒடுக்க முனைவதை அந்த சமூகம் மறுக்கின்றது. இதை அனுமதிப்பது என்பது, சமூகத்தை பிளக்கின்ற, சமூகத்தை சுரண்டுகின்ற ஒன்றாகி விடுன்றது. அதை மீறிக் கொண்டு செல்லும் போது தண்டனை இயல்பானது. இதுதான் அங்கு நடந்தது. இதில் சில தவறுகள் நடந்தன என்பதை, விமர்சனம் சுயவிமர்சனம் ஊடாகவே, அந்த வர்க்க சமூகம் செய்துள்ளது.

 

பொலிஸ்காரனின் குடும்பத்துக்காக போலியாக திடீர் மனிதாபிமானம் பேசுகின்ற பூணூல் பேர்வழிகள், அங்கு செயற்பட்ட எதிர்ப்புரட்சிகர கும்பலுக்காக வழக்காடுவது இயல்பு. அந்த வர்க்கம் அதற்காக அதை தேடுகின்றது. மக்களின் வாழ்வை மேம்படுத்திய ஒரு புரட்சிகரமான வரலாற்றினை அவதூறாக கட்டமைப்பதன் மூலம் தான், நிலவுகின்ற சொந்த பார்ப்பனிய சுரண்டல் அமைப்பை செழிப்பானதாக காட்டமுடியும் என்ற பரிதாபமான நிலையில் பூணூல் அறிவு உள்ளது.

 

முன்பு அ.மார்க்ஸ், எஸ்.வி.ராஐதுரை போன்றவர்கள் நிறையவே இந்த இழிநிலையை செய்து தோற்றவர்கள். அந்த வரிசையில் இன்று பூணூல் பேர்வழிகள் புதிதாக சொல்ல ஒன்றும் இருப்பதில்லை. இதை சொல்வதற்கு எந்த அடிப்படை அறிவு கூட குறைந்தபட்சம் இருப்பதில்லை.

 

வேதகால ரிக்வேதம் போல், இன்றும் அதே வெற்றுப் புலம்பல். பார்ப்பனிய சுரண்டல் சமூக இருப்பை தக்கவைக்க, மார்க்சியத்துக்குள் அல்லது ஜனநாயகத்தை முன்வைக்கும் கோட்பாடுகளுக்குள், அவர்கள் கற்பிக்கும் தாசித் தனத்தை புகுத்துகின்றனர். மனித வாழ்வியலைச் சார்ந்து நின்று அறிவால் வெல்ல முடியாத இந்த பூணூல்கள், சூழ்ச்சியால், சதியால், அவதூறால் காறி உமிழ்கின்றனர். இந்திய சமூக அமைப்பின் உள்ளார்ந்த மனித கொடூரங்களை விவாதிக்க வக்கற்ற இந்த பூணூல் பார்ப்பனியம், இந்திய சமூக அமைப்பை மாற்ற முனையும் மனிதர்களுக்கு எதிராக அவதூறைப் பொழிகின்றனர். அந்த வகையில் சர்வதேச ரீதியாக ஒடுக்கப்பட்ட மக்களின் போராட்டங்களை கொச்சைப்படுத்துகின்றனர். பார்ப்பனிய சாதிய மேலாண்மையை எப்படி சூழ்ச்சியால், சதியால் நிறுவினார்களோ, அந்த வழியில் தம்மை தக்கவைக்க முனைகின்றனர். இதை அறிவால், முரணற்ற ஜனநாயகத்தால் சாதிக்க முடியாது.

 

அறிவை கருத்து முதல்வாதத்தினால் ஒருநாளும் உருவாக்க முடியாது. அறிவு என்பதை பொருள்முதல் வாதத்தினால் மட்டும் தான் உருவாக்க முடியும். இதை மறுப்பது தான், பூணூல் பார்ப்பனியம். பொருளுக்கு வெளியில் உலகில் எந்த இயக்கமும் கிடையாது. பொருட்களின் இயக்கம் தான் அனைத்தும். இதற்கு வெளியில் அறிவு இருக்க முடியாது. அப்படிச் சொல்வது மக்களை முட்டாளாக்கி, அடிமைப்படுத்தி சிலர் வாழவிரும்பும் அற்பத்தனமாகும். இதுவே உள்ளடகத்தில் அறிவீலித்தனம். சிலரை மட்டும் வாழவைக்கும் எடுகோள்கள், கோட்பாடுகள் அறிவீலித்தனத்தின் உள்ளடக்கமாகும்.

 

இயற்கை மனிதனுக்கு முன்பே எப்படி இருந்ததோ, அதேபோல் தான் அது சார்ந்த உண்மையும் இயற்கையானது. இயற்கையின் பொருட்கள் பற்றிய அறிவு தான், மனித அறிவு. இயற்கையான செயற்பாடு பற்றிய அறிவும், அதன் மீதான மனித செயற்பாடும் தான் அறிவின் வளர்ச்சியாகும். இப்படித் தான் அறிவு இருக்கமுடியும்.

 

இதற்கு வெளியில் அறிவு இருக்க முடியாது. மார்க்சியம் இந்த வகையில் தான் அறிவையும், அதன் இயற்கை விதிகளுடனும் இணைந்து வழிகாட்டுகின்றது. இந்த வகையில் அனைத்து கருத்து முதல் வாதத்ததையும், பொருளற்ற புலம்பல்களையும் நிராகரிக்கின்றது. பொருளற்ற அனைத்தும், கற்பனையான கருத்து முதல்வாதம் தான்.

 

உதாரணமாக மரபு சார்ந்த அறிவியலை திரித்து, கருத்துமுதல் வாதமாக கற்பிக்கப்படுகின்ற உண்மையைப் பார்ப்போம். மரபு சார்ந்த பரம்பரைக்கூறை, புறச் சூழலின் நிகழ்ச்சிப் போக்கில் இருந்து நிராகரிக்கப்படுகின்ற கோட்பாடுகள், பலதளத்தில் கருத்துமுதல்வாதமாகவே கட்டமைக்கப்படுகின்றது. மரபுக்குரிய கூறுகளின் தனித் தன்மை, ஒரு பரம்பரைக்குரிய அல்லது ஒரு குடும்பத்துக்குரிய அல்லது ஒரு இரத்த வழிக்குரிய அல்லது ஒரு இனத்துக்குரிய தனித்தன்மையில் இருந்தும் முரண்படுகின்றது. இந்த அறிவியல் உண்மையை கருத்துமுதல்வாதம் குழிதோண்டி புதைக்கின்றது. மரபின் தனித்தன்மை, ஒரு பரம்பரைக்குரிய அலகில் நெருங்கியும், அதே நேரம் விலகியும் செல்லுகின்றது. பொருள் சார்ந்த முரண்பாட்டின் விதி அங்கிருக்கும் அறிவியல் உண்மையை மறுத்து, கருத்து முதல்வாதம் செயல்பட முனைகின்றது. இது அறிவாகவே இருப்பதில்லை.

 

இதே போல் மரபுத்தன்மை என்பது புறசூழலின் நிகழ்ச்சி போக்குக்கு ஏற்ப மாற்றத்துக்கு உள்ளாகின்றது. இந்த உண்மையை, கருத்து முதல்வாதம் மறுக்கின்றது. புறச் சூழல் என்பது, இயற்கை சார்ந்தும், சமூகம் சார்ந்தும் கூட மாறுகின்றது. இந்த உண்மையை மறுப்பது கருத்துமுதல்வாதம்.

 

அண்மைக் காலமாக மரபு சார்ந்த அறிவு மூலம், கிட்லரை மறுபடியும் உருவாக்க முடியும் என்ற கூச்சல், கருத்து முதல்வாதமாகவே வெளிப்பட்டது.. மரபு சார்ந்த அறிவைக் கொண்டு அதே ஒத்த உருவத்தை உருவாக்க முடியும் என்ற அறிவு, திரிக்கப்பட்டு கருத்து முதல்வாதமாகவே அதன் உள்ளார்ந்த அறிவு மலடாக்கப்பட்டது. இது இரண்டு விதத்தில் கருத்து முதல்வாதமாக திரிக்கப்பட்டது.

 

1. அதே தோற்றம் உடைய உருவம் எந்த மாற்றத்துக்கும் உள்ளாகாத ஒன்றாக கற்பிக்கப்பட்டது.

 

2. அதே தோற்றத்துக்குரிய முந்தைய நபரின் தன்மை அப்படியே, அதாவது மனித பிரக்ஞை முதல் மானுட ஒழுக்கம் வரையிலான அனைத்தும் கொண்டிருப்பர் என்பது

 

இவை பூணூல் வகை கருத்துமுதல்வாதக் குப்பை. அறிவீலிகளின் அலட்டல். கிட்லரின் தோற்றத்தை உற்பத்தி செய்தால், அவர் மற்றொரு கிட்லராக இருப்பார் என்பது அபத்தமானது. இதை அறிவியல் என்று கூறுவது வேடிக்கை. உண்மைக்கு புறம்பானதும், பொருளுக்கு புறம்பானதுமான கருத்து முதல்வாதமாகும். இந்தக் கருத்துமுதல் வாதத்தை நாம் அங்கீகரிப்பதோ, இதை அறிவியலாக ஏற்றுக்கொள்வதோ கிடையாது. மரபு சார்ந்த அறிவியல் உண்மை முற்றிலும் வேறானது. இதை பூணூல் அறிவீலிகளால் நினைத்துக் கூட பார்க்க முடியாது. இதையொட்டிய ஒரு மலட்டுவாதத்தைப் பார்ப்போம்.

 

"சோவியத் அரசின் வீழ்ச்சியினைத் தொடர்ந்து புதைத்து வைக்கப்பட்ட பல நிகழ்வுகள் குறித்த ஆவணங்கள் வெளிவந்தன." என்று கூறும் பூணூல் அரவிந்தன் நீலகண்டன் மரபு தொடர்பாக எடுத்து வைக்கும் "புதைந்து" கிடந்த அந்த ஆவணக் குறிப்பைப் பார்ப்போம். "புறச்சூழல் சார்ந்தவை என்பதால் மரபுவழி கடத்தப்படுவதாக அறியப்பட்ட நோய்கள் இருக்கக் கூடாதல்லவா! மேலும் மாவோ ஒரே இன செடிகள் ஒன்றோடொன்று போட்டி போடாது ஏனெனில் அவற்றுக்கு வர்க்க ஒற்றுமை இருக்கும் என கருதினார். இந்த கருத்து ஒரு அறிவியல் உண்மையாக செயற்படுத்தப்பட்டது" என்கின்றார். பூணூல் தன்னை இப்படித்தான் கருத்துமுதல்வாதமாக அறிவின்மையில் கொப்பளிக்கின்றது.

 

"புறச்சூழல் சார்ந்தவை என்பதால் மரபுவழி கடத்தப்படுவதாக அறியப்பட்ட நோய்கள் இருக்கக் கூடாதல்லவா!" என்ற வாதம் எதை மறுக்கின்றது. புறச் சூழல் ஏற்படுத்தும் மாற்றத்தை மறுக்கின்றது. இது தான் கிட்லரை உருவாக்க முடியும் என்கின்றது. கிட்லரை மட்டுமல்ல லெனினையும் கூட உருவாக்க முடியாது. இது பல அறிவியல் கூறுகளை மறுத்துத் தான், எழ முடியும்.

இந்தக் கருத்து முதல்வாதம் சரி என்றால், முதலில் மருத்துவத் துறையை இழுத்து மூடவேண்டும. அதனால் தான் பூணூல்கள் உலகமயமாதலை ஆதரிக்கின்றனரோ! மருத்துவதுறைக்கு பதில் மதத் துறையை நம்பி, வேதகால "அவி"க்குத் தான் செல்ல வேண்டும்.

 

முதலில் மரபு சார்ந்து கடத்தப்படும் நோய்கள் எப்படி உருவாகின்றது? புறநிலை சார்ந்தா? அல்லது அகநிலை சார்ந்தா? அல்லது மரபு சார்ந்தா? ஐயா பார்ப்பனிய பூணூல் நீலகண்ட பதில் சொல்லுங்கள்? மரபுசார்ந்த நோய்களும் புறநிலை மற்றும் அகநிலை சார்ந்தது. அதாவது உடல் புறநிலையில் இருந்து உருவாகும் ஒரு நோய்க்கு எதிராக, எதிர்வினையாற்றும் ஒரு நோய்க்குரிய எதிர்ப்பு சக்தியை கொண்டிருக்காத போதே நோயாகின்றது. நோய்க்குரிய மருத்துவம், புறநிலையில் எதிர்ப்பு சக்தியை அளிக்கும் ஒரு நடவடிக்கை மூலம் நோய் எதிர் கொள்ளப்படுகின்றது. இது இயற்கை சார்ந்த உணவு முதல் புறநிலை சூழலை இசைவாக்குவதன் மூலம் அல்லது நேரடியான குறிப்பான மருத்துவ வழிகள் முதல் அல்லது இவை இரண்டும் மூலம் செய்யப்படுகின்றது. இது எப்போதும் புறநிலையாகத் தான் அகநிலை மீது நிகழ்கின்றது. இயற்கையில் நாம் அறியாமல் நோயை தொடர்ச்சியாக வெற்றி கொள்கின்றது அல்லது செயற்கையுடன் இணைந்து வெற்றி கொள்கின்றது. உடலுக்குள்ளும் புறநிலைத்தன்மை உண்டு. நோய் கிருமி கூட, மற்றொரு (ஒன்றை ஒன்று சார்ந்த புறநிலை) உயிரினம் தான்.

 

மரபுசார் நோய் அந்த பரம்பரையின் முழு உறுப்பினருக்கும் ஏன் இருப்பதில்லை. அண்ணணுக்கு இருக்கும் நோய் கட்டாயம் தம்பிக்கு இருப்பதில்லை. அது மரபுக் கூறுகளில் இருந்தும், புற கூறுகளிலும் இருந்தும் மாற்றத்துக்கு உள்ளாகின்றது.

 

மரபுசார் நோய் ஏன் முழு மனித குலத்துக்கும் இருப்பதில்லை. ஒரு குரங்கு இனத்தில் இருந்து தோன்றிய மனிதன் என்பதால், அனைவருக்குமல்லவா இருக்கவேண்டும். மனித அடையாளத்துக்குரிய தன்மை எப்படி ஒன்றாக இருக்கின்றனவோ, அப்படி அல்லவா மரபு நோயும் இருக்க வேண்டும். மரபுசார் நோய் புறநிலையாக எப்படி இடையில் தோற்றுகின்றதோ, அப்படி இதையும் மாற்றுகின்றது. இந்த புறநிலை அம்சத்தில் அகநிலை அம்சமும் இணைகின்றது.

 

மனித குலம் குறித்த மரபுசார் பரம்பரை நோய்க்குள் இருப்பதில்லை. புறநிலை மாற்றத்துக்குள்ளாகி மாற்றத்துக்குள்ளாகின்றது. புறநிலைத் தாக்கத்துக்கு உள்ளாகி நோய் எதிர்ப்பு தன்மை பெற்று இசைவாக்கமடைகின்றனர். இங்கு ஒரு குரங்கு இனத்தில் இருந்து தோன்றிய மனிதன், பல சூழலுக்கு உட்பட்டு நிறம் முதல் உடலின் உட்கூறுகள் வரையாக மாற்றத்துக்கு உள்ளாகின்றான். மனிதன் புறநிலை சூழலால் சதா மாற்றத்துக்குள்ளாகி, மாறிக்கொண்டே இருக்கின்றான். மருத்துவ மற்றும் மரபு அறிவியல் இதை உறுதி செய்துள்ளது. இது போல் தான் நோயும் கூட.

 

"மாவோ ஒரே இன செடிகள் ஒன்றோடொன்று போட்டி போடாது ஏனெனில் அவற்றுக்கு வர்க்க ஒற்றுமை இருக்கும் என கருதினார். இந்த கருத்து ஒரு அறிவியல் உண்மையாக செயல்படுத்தப்பட்டது" செடிக்குள் வர்க்கம் இருப்பதிலலை என்ற உண்மை, இந்த அரைவேட்டு அறிவீலி பூணூலுக்கு நீலகண்டனுக்கு தெரிவதில்லை. மாவோவின் பெயரில் இந்த அறிவிலி கற்பிக்கின்றது. வர்க்கமற்ற இயற்கையில் வர்க்கம் இருப்பதில்லை. ஒரே இனச் செடிகள் தமக்குள் யார் பெரியவன் என்றோ, யார் அதிகம் நுகர வேண்டும் என்றோ, யார் அதிகம் சொத்துச் சேர்க்க வேண்டும் என்றோ ஒன்றோடொன்று போட்டி போடுவதில்லை. இப்படித்தான் இருப்பதாக மனிதன் தன் இழிநிலையில் இருந்து, இயற்கை மீது கற்பிப்பது கருத்து முதல்வாதம். இயற்கை விதிக்கமையவே அவை இயங்குகின்றது. இயற்கை போட்டி போட்டு வாழ்வதல்ல. இவையெல்லாம் மனிதன் கற்பிக்கும் கற்பனையான கருத்துமுதல்வாதக் கோட்பாடுகள். ரிக்வேதகால ஆரியர்கள் இயற்கை ஒன்றுடன் ஒன்று சண்டை பிடிப்பதாகவும், அதில் தமக்கு சார்பானவர்கள் தமக்கு உதவுவதாக கற்பித்து "அவி" இட்டவர்கள். அதே வழியில் மற்றைய மக்களை கொன்று செல்வத்தை அபகரித்தவாகள். இப்படி இயற்கையை கற்பித்த அதே கோட்பாடு தான் இதுவும்.

 

இயற்கை போட்டி போடாதது எப்படியோ, அப்படி ஒரே இனச் செடியும் தனக்குள் ஒன்றுடன் ஒன்று போட்டி போடாது. அங்கு வர்க்கம் இருப்பதில்லை. இது அறிவியல் உண்மை. மாவோவின் பெயரில் செடிக்குள் "வர்க்க ஒற்றுமை" என்பது, கற்பித்து அதைத் தலைகீழாக திரிப்பதாகும்.

 

"கோதுமையை அருகருகே நட்டால் அது செழித்து வளர்ந்து அதற்கு மேல் குழந்தைகள் கூட நிற்க முடியுமாம்." இதில் எந்த அறிவியல் உண்மையும் நிராகரிக்கப்படவில்லை. உழைப்பையே அறியாத பூணூல் பேர் வழிகளின் கருத்தமுதல்வாதம் இதை மறுப்பது, அதன் மலட்டுத்தனத்துக்குச் சான்று. அடர்த்தி அதிகரிக்கும் போது, ஏன் அதன் மேல் நடக்க முடியாது? நாம் நிலத்தில் தொட்டபடி நடக்கின்றோம். எமது பாதத்துக்கும் நிலத்துக்கும் இடையில் எதுவுமில்லை, அதனால் தொட்டபடி நடக்கின்றோம். இதற்குள் ஒரு பொருளை வைத்தால், அதன் மேல் நடக்கின்றோமல்லவா! இதே உண்மைதான் நெருக்கமாக ஆணி அடித்து அதன் மேல் கால்வைத்து நடக்கமுடியும். இந்த உண்மையை கடவுளின் பெயரால் ஏமாற்றலாம், அறிவின் பெயரால் சொல்லமுடியாதது என்பது பித்தலாட்டம். இதன் பின்னால் பொருள் சார்ந்த உண்மை உண்டு.

 

இதேபோல் தான் காலுக்கும் நிலத்துக்கும் இடையில், எந்த பொருளையும் வைக்க முடியும். அது எதுவாகவும் இருக்கலாம். இங்கு அதன் அடர்த்தி தான் எப்படி நடத்தல் என்பதைத் தீர்மானிக்கின்றது. இது அறிவியல் உண்மை. இங்கு கோதுமை எடுக்கப்படுகின்றது என்றால், அதன் ஒற்றைத் தன்மையில் வைத்துப் பார்த்தல், அதன் பலம் என்ற எமது அறிவீலித்தனத்தில் இருந்து, பூணூல் கண்ணால் காண்பதாகும். ஒரு செடியில் இருந்து அவை அடர்த்தியாக அடர்த்தியாக, நாம் அதன் மேல் நடக்க முடியும். கோதுமை வைக்கோலை நிமிர்த்தி வைப்பதன் மூலம், அதன் மேல் நாம் நடக்க முடியுமல்லவா. ஏன் அடர்த்தியாக வளர்க்கப்பட்ட வேலி போன்ற அமைப்பிலான (பூஞ்)செடிகள் மேல் நடக்க முடியும். இதேபோல் தான் அடர்த்தியான கோதுமை மீதும் நடக்க முடியும். இது அடர்த்தி தொடர்பான விதி. இந்த விதிதான் இன்றைய நவீன அறிவியலின் மூலமாகவும் உள்ளது.

 

பூணூல் ஊடாக அறிவைத் தேடும் பார்ப்பனிய நீலகண்டன் அறிவிலி "மனித சூழலில் இந்த பொருள்முதல்வாத முரண்பாட்டியங்கியல் உற்பத்தி உறவுகளாக பரிணமித்து அதன் அடிப்படையிலேயே அனைத்தும் (மனித பிரக்ஞை முதல் மானுட ஒழுக்கம் வரை) உற்பத்தி உறவுகளின் மீது அமைக்கப்படும் மேல்-அமைப்புகளாக காணப்படுகின்றன. இச்சித்தாந்தத்தின் மூலம் அரசு அதிகார விழைவு கொள்ளும் ஒரு இயக்கத்தில், அறிவியல் இந்த அடிப்படை உண்மையை உறுதி செய்வதாகவே அமைய வேண்டும். இந்த உறுதிப்பாடே அறிவியலின் இருத்தலுக்கான நியாயமாகும். உறுதி செய்யப்பட்ட, தீர்மானிக்கப்பட்ட உண்மைகளை மீண்டும் தன் இயக்கத்தின் மூலம் உறுதி செய்வதே அறிவியலுக்கு அளிக்கப்பட்ட ஒரே பணியாக மத்திய கால கிறிஸ்தவ உலகில் இருந்ததை போன்றதோர் நிலையே இதுவும்." வழக்கமாக மார்க்சியத்தை மறுக்க விரும்பும் கும்பல்கள், தமது கருத்து முதல்வாதக் குப்பைகளை தக்கவைக்க, தம்மை முற்போக்காக காட்டிக்கொள்ள "மத்திய கால கிறிஸ்தவ உலகில் இருந்ததை போன்றதோர் நிலையே" என்ற முத்திரை குத்துவதை இந்தப் பார்ப்பனிய பூணூலும் எடுத்து வைக்கிறது.

 

"மனித பிரக்ஞை முதல் மானுட ஒழுக்கம் வரை" எப்படி உருவாகின்றது. அதை அல்லவா விளக்க வேண்டும். மார்க்சிய சாரம் சார்ந்த "பொருள்முதல்வாத முரண்பாட்டியங்கியல் உற்பத்தி உறவுகளாக பரிணமித்து அதன் அடிப்படையிலேயே அனைத்தும் (மனித பிரக்ஞை முதல் மானுட ஒழுக்கம் வரை) உற்பத்தி உறவுகளின் மீது அமைக்கப்படும் மேல்-அமைப்புகளாக காணப்படுகின்றன." என்பதனை மறுப்பதன் மூலம், எதைச்சொல்ல முனைகின்றனர். கிறிஸ்துவ கருத்துமுதல்வாதத்தையே, ஆனால் இந்த பூணூல் பேர்வழிகள் பார்ப்பனியத்தை முன்வைக்கின்றது.

 

மனித பிரக்ஞை முதல் மானுட ஒழுக்கம் வரை இந்திய சமூக அமைப்பில் எப்படி தீர்மானிக்கப்படுகின்றது. அது பார்ப்பனிய சுரண்டல் அமைப்பியல் ஒழுங்கில் தான், அனைத்தும் தீர்மானமாகின்றது. தமிழ் மணத்தில் மனித பிரக்ஞை முதல் மானுட ஒழுக்கம் வரை, அதன் கருத்துத்தளம் அப்படித்தான் பிரதிபலிக்கின்றது. இதற்கு வெளியில் அல்ல. பெரும்பான்மையான உழைக்கும் மக்கள் காறி உமிழும் பார்ப்பனிய சுரண்டல் அமைப்புத்தான், மனித பிரக்ஞை முதல் மானுட ஒழுக்கும் வரையிலான அனைத்து சமூக இழிவையும் புகுத்துகின்றது. இதுவே அனைத்துக்குமான உண்மை.

 

குறிப்பு: கட்டுரையின் நீளம் கருதி விவாதம் சுருக்கப்பட்டுள்ளது.

 

பி. இரயாகரன்
24.03.2007