"சமீப காலத்தில் மார்க்சியத் தத்துவார்த்த இலக்கியத்தில் ஆராயப்பட்டுள்ள (ஸ்டாலின் கட்டுரை இங்கு பிரதான இடத்தைப் பெற்றுள்ளது ) ஆகவே இக்கட்டுரையில் முழுக்க முழுக்க கட்சிக் கண்ணோட்டத்திலிருந்து இப்பிரச்சனையை எடுத்துக் கூறுவோரும் ---  -லெனின்-தே.இ.பி.பா.வ.ச. - பக்-7-

ஸ்டாலின் வரையறை மார்க்ஸ்- எங்கல்ஸ் வழியில் வந்ததை லெனின் ஏற்றுக் கொண்டு அதைப்பாராட்டியது தான் உண்மை. ஆனால் அ.மார்க்ஸ் கும்பல் அதைத் திரித்துப் புரட்டிப் போடுவது உண்மையில் ஏகாதிபத்திய உலகமயமாதலை ஊக்குவிக்க, தேசங்களின் உண்மையான வரையறைகளை மறுப்பதன் மூலம் போராட்டங்களை சிதைக்க முனைகின்றனர்.


மார்க்ஸ் சரி, ஏங்கல்ஸ் சரி எடுக்கும் வௌவேறு விடையம் தொடர்பாக தௌளத் தெளிவான ஆயுவுகளை நடத்தியவர்கள் அது எப்படி ஏன் ஏதற்காக எனப் பலவாக ஆராய்ந்து முடிவுகளை முன்வைத்தார்கள். அவர்களின் அடிப்படை முடிவுகளை பொதுவானவையாக குறித்து விடையத்தின் அடிப்படை விடயமாகவும் இருந்தன. அது இன்று மிகச் சரியானதாகவும், அடிப்படையானவையாகவும் உள்ளன.


மார்க்ஸ்-ஏங்கல்ஸ் இருந்த காலத்தில் தேசம், தேசியம் ஒரு பிரச்சனையாக பெரிதாக இருக்காததாலும், அப்போது தான் பல நாடுகளில் தேசம் உருவாகி வந்ததாலும், அவர்கள் தேசத்தை ஒரு தனியான ஆய்வாக செய்தது இல்லை. செய்யாததால் அவர்கள் அதை நிராகரித்ததுமில்லை. சில பிரச்சனைகள் மீது மட்டும் தான் அவர்கள் அந்நிலையை ஒட்டி கருத்துக் கூறி உள்ளனர். எனவே மார்க்ஸ்-ஏங்கல்ஸ் ஒரு வரையறையைக் கொடுக்க வில்லை என்பது பொய். ஏன் எனின் அவர்கள் அதை ஒரு பிரச்சனையாக முன்னெடுத்து ஆய்வு செய்யவில்லை. அவர்களீன் முழு வாழ்வையும் மார்க்சியத்தை கோட்பாடாக முன்வைப்பதிலும், அதன் சரியான சமூக விஞ்ஞானத் தன்மையை நிறுவுவதுமே பணியாக இருந்தது.

 
லெனின் காலம் தான் புரட்சி எப்படி நடத்துவது என்ற கேள்விக்கும், அரசு, மற்றும் சமூகத்தின் பல்வேறு பிரச்சனைகளை புரட்சியில் அதன் பங்கு தொடர்பான ஆய்வு தேவையானதாக இருந்தது. இந்த வகையில் தான் லெனின்-ஸ்ராலின் பங்களிப்பு வருகின்றது. ஆகவே மார்க்ஸ்-ஏங்கல்ஸ் கொடுக்கவில்லை எனக் கூறுவது அவர்கள் முன் ஆய்வுக்கு வராததையே வந்ததாகக் காட்டி கரடி விட்டு சேறடித்து லெனின்-ஸ்ராலினின் ஆய்வை மறுப்பதாகும்.


ஸ்ராலின் முன்வைத்த நான்கு அடிப்படை உள்ளடக்கம் ஒரு தேசம் உருவாக வேண்டின் இவை கட்டாயம் இருக்க வேண்டும், ஸ்ராலின் விரும்பினாலும், லெனின் விரும்பினாலும், அந்தோனிசாமி மார்க்ஸ் விரும்பினாலும் இந்த நாலில் ஒன்று இன்றி ஒருக்காலும் ஒரு தேசத்தை உருவாக்க முடியாது. அப்படி உருவாக்க வேண்டும் எனின் திட்ட மிட்ட குடியேற்றம், இன்னொரு தேசியத்தை அழித்து உருவாக்க முடியம். அதற்கு உலகில் சிறந்த உதாரணமாக இருப்பது இஸ்ரேல் என்ற நாடு . அது இன்னமும் ஒரு ஆக்கிரமிப்பு தேசமாக உள்ளது.


இதை ஸ்டாலின் கூறும் போது " ஒரு தேசம் என்பது, ஒரு பொதுவான மொழி, பிரதேசம், பொருளாதாரவாழ்வு மற்றும் பொதுக்கலாச்சாரத்தில் வெளிப்படும் பொதுவான மனவியல்பு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு வரலாற்று ரீதியாக உருவாகிய நிலையான மக்கள் சமூகமாகும். எல்லா வரலாற்று நிகழ்வுகளையும் போலவே தேசமும் மாற்றல் விதிக்குட்படுவது என்பது சொல்லாமலே விளங்கக்கூடிய ஒன்றாகும். அது அதற்கேயுரிய வரலாற்றையும் தொடக்கத்தையும் முடிவையும் கொண்டிருக்கும். மேலே கூறப்பட்ட அம்சங்களில் எதையும் தனியாக எடுத்துக்கொண்டு ஒரு தேசத்தை விளக்க முடியாது. மேலும் மேலே சொன்னவற்றில் ஒரு அம்சம் குறைந்தாலும் தேசம் என்பது தேசமாக இருக்க முடியாது. ' - மார்க்சியமும் தேசிய இனப்பிரச்சனையும் - -ஸ்டாலின்-

 

எனவே ஒரு தேசத்தின் அடிப்படை உள்ளடக்கம் இன்றி ஒன்று உருவாகும் என அறுதியிட்டு வாதிட முனையும் நிறப்பிரிகை உண்மையில் தேசத்தினதும், ஒரு வளரும் இனத்தினதும், உதிரி மக்கள் கூட்டத்தினதும் அடிப்படை உரிமைகளை மறுத்து ஏகாதிபத்திய உலக மயமாதலுக்கு சேவை செய்ய முனைவதாகும்.


அடுத்து மார்க்ஸ்-ஏங்கல்ஸ் சில நாடுகளை தேசமாகப் பார்க்காது, காட்டு மிராண்டித் தனமாகப் பார்த்தது, நாகரீகத்தின் உரிமை என எல்லோரும் காட்டும் ஆய்வின் முழுமையான சாரம்சத்தை திட்டமிட்டு அ.மார்க்ஸ் மறைத்தபோதும் அவர்களின் ஆய்வுகள் வெற்றிடத்தில் இருந்து எழுந்தது அல்ல.