பி.இரயாகரன் - சமர்

ஈராக்கில் உள்ள ஆக்கிரமிப்புப்படை ஓரு நிமிடம் விலகினாலேயே, ஆட்சியில் நீடிக்க முடியாத ஒரு கூலிக் கும்பலின் பெயரில், சதாமுக்கு வழங்கிய மரணதண்டனை. அமெரிக்கா மற்றும் பிரிட்டிஸ் ஆக்கிரமிப்பாளர்கள் ஊதும் மகுடிக்கு ஏற்ப ஜனநாயக வேசம் கட்டி ஆடுபவர்கள் தான் இன்றைய ஈராக்கிய ஆட்சியாளர்கள்.

அமெரிக்காவின் டொலரைக் கொண்டு கூலிப் பொலிஸ் படையை வைத்துக் கொண்டு, அமெரிக்கா இராணுவத்தின் துணையில் மனித வேட்டை நடத்துகின்றனர்.

 

இப்படி வளர்ப்பு நாயாக பழக்கி வளர்க்கப்பட்ட ஒரு கொலைகாரக் கும்பல் தான் ஆட்சியில் உள்ளது. ஜனநாயகம் கிலோ என்ன விலை என்று விலைபேசி விற்பவர்கள். இவர்களின் நாய் வேசம் இன்றைய ஏகாதிபத்தியங்களின் கொலையையும், கொள்ளையையும் பார்த்து வாலாட்டுவது தான். இதுதான் இவர்களின் ஜனநாயகம் கூட.

 

 

இந்த ஜனநாயகம் தான் உருவாக்கிய சர்வதேச விசாரணைக்கே சதாமை உட்படுத்த மறுத்தது. உலக நீதிமன்றம், உலக ஜனநாயகம் பேசும் இவர்கள் நடத்திய கூட்டுச் சதிதான், இந்த மரணதண்டனை. உலகின் குற்றவாளிகள் சேர்ந்து நடத்திய

 கொலைதான், இந்த மரணதண்டனை.

 

சொந்தக் கொலைகார முகம் உலகுக்கு தெரியக்கூடாது என்பதால் கமுக்கமாக நடத்திய விசாரணை நாடகத்தின் முடிவு, முன் கூட்டியே தீர்மானிக்கப்பட்டது. புஸ்சின் கொலைவெறித் தனம் தான், உலக மக்களின் எதிர்ப்பை மீறி கொன்று போட்டது.

 

ஈராக் எண்ணை வயல்களில் காய்க்கும் டொலர் நோட்டுக்களை அள்ளிச் செல்லும் அமெரிக்காவின் ஆளும் கும்பல், நடத்துகின்ற தொடர் மனித வேட்டைகளில் சதாமும் ஒருவர்.

 

இதன் மூலம் உலகை அடிமைப்படுத்திவிடலாம் என்று நம்புகின்ற அதிகார வர்க்கத்தின் திமிர், இது போன்ற வக்கிரங்களால் மக்களை அடிமைப்படுத்திவிட முடியாது. கொள்ளையும் கொலையுமாக மக்களின் உழைப்பையே சூறையாடித் தின்னுகின்ற இந்த ஜனநாயகம், மக்களின் அதிகாரம் நிறுவப்படும் போது தகர்ந்தேபோகும்.

 

அன்றாடம் கொலையை கேட்டும், தெரிந்து வாழ்கின்ற துரதிஸ்டவசமான எமது நிலையில், சதாமின் கொலை ஒரு கணம் அதிரவைத்தது.

 

ஒருபுறம் ஆத்திரம், கோபம் ஒருங்கே எழுகின்றது. மக்களை ஏமாற்றி நடத்தும் சதிகளுக்கு எதிராக, இந்த கொலைகார ஏகாதிபத்தியத்தை பழிவாங்க வேண்டும் என்ற அவா இயல்பாகவே எழுகின்றது. மக்களின் மண்டையோடுகளை அடுக்கி அதன் மேல் நடாத்தும் அராஜகமே இது. மக்களை கொள்ளையடித்து மாடமாளிகைகளை கட்டுகின்ற இந்த வக்கிரத்தை, மன்னிக்கவும் மறக்கவும் முடியாது.

சர்வதேச குற்:றங்களின் மொத்த ஊற்று மூலம் இந்த ஏகாதிபத்தியங்கள் தான். சதாமுக்கு பிந்தைய ஈராக்கில் நடந்த குற்றங்களின் அளவுக்கு, சதாம் குற்றம் இழைக்கவில்லை.

 

இலட்சக்கணக்கான மரணத்தில் தான் அமெரிக்க ஆட்சியாளர்களின் வங்கிக் கணக்குகள் வீங்குகின்றது. அமெரிக்காவை ஆளுகின்ற ஒரு ரவுடியின் தனிப்பட விரும்பம் கூடத்தான் இந்த மரணதண்டனை.

 

சதாம் போன்ற சர்வாதிகார மக்கள் விரோதிகள் உலகில் பலர் உள்ளனர். அவர்கள் அமெரிக்காவின் ஆதரவுடன் தான் இயங்குகின்றனர். அவர்களுக்கெல்லாம் ஜனநாயக நாய் வேசம் போட்டு ஆட்டுவிக்கும் ஏகாதிபத்தியங்கள், சதாம் போன்றவர்களைக் கொண்டு தான் உலகையே ஆளுகின்றனர்.

 

சதாம் ஆட்சியின் பின்னால் இருந்ததே அமெரிக்காவும், மற்ற ஏகாதிபத்தியங்களும் தான். பற்பல தொடர் கொலைக்கு ஆயுதமும் ஆலோசனையும் வழங்கியது அமெரிக்கா தான்.

 

வளர்ப்பு நாயை உறும அதையே எஜமான் வேட்டை ஆடுவதுபோல், சதாமும் வேட்டையாடப்பட்டவர். வேட்டை ஆடுவது நாயின் தொழில். ஆட்டுவிப்பது எஜமான் தொழில். இதைத்தான் அமெரிக்கா செய்தது. பழைய நாயை, புதிய நாயைக் கொண்டு வேட்டை ஆடினர்.

 

இந்தப் படுகொலையை நியாயப்படுத்த ஒரு நீதிமன்றம்;. அன்று ஈராக்கை ஆக்கிரமிக்க அமெரிக்கா பொய்யையும் புரட்டையும் சொல்லி ஐ.நாவையே விபச்சாரம் செய்தவர்கள். இன்று நீதியின் பெயரில் அதை மீண்டும் செய்துள்ளனர். இது அமெரிக்க ஜனநாயகம்; மட்டுமல்ல சுதந்திரமும் கூட. இதுவே உலகினதும் என்கின்றனர். நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள். இதை எப்போது மக்களாகிய நாம் கணக்கு தீர்க்கப் போகின்றோம்.

 

இந்த பாசிச அமெரிக்காவை, அதன் சுதந்திரத்தை, அதன் ஜனநாயகத்தை விரிவாக தெரிந்து கொள்ள கீழ் உள்ள இணைப்புகளை அழுத்துக.

மரணதண்டனைக்குரிய முதல் குற்றவாளியே புஸ் தான்

 

1. வியட்நாம் மைலாய்! ஈராக்கில் ஹதிதா! அமெரிக்காவில் தொடரும் போர்குற்றங்கள்

2. வியட்நாம், ஈராக் மீதான ஆக்கிரமிப்புப் போரில் அமெரிக்கச் சதிகள்

3. அமெரிக்காவின் போர் குற்றங்கள:; அன்று வியட்நாம் இன்று ஈராக்

4. அமெரிக்கர்களின் மனசாட்சியை உலுக்கும் ஒரு தாயின் போராட்டம்!

5. அமெரிக்கா வழங்கிய ஜனநாயகம் அல்லற்படும் ஈராக்கிய மக்கள்

6.அபு கிரைப் சித்திரவதையின் நோக்கம்