lankasri.comமொபைல்போன் உபயோகிப்பவர்களுக்கு தோல் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது என்ற தகவல் பின்லாந்தில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது.மொபைல்போனை அதிகமாக பயன்படுத்துவோருக்கு மூளை புற்றுநோய் வரக்கூடிய வாய்ப்புகள் அதிகமாக உள்ளது என்று ஏற்கனவே பல்வேறு ஆய்வு முடிவுகள் தெரிவித்துள்ளன. இது பழைய தகவல்தான்.

ஆனால் தற்போது வெளியாகியுள்ள மற்றொரு ஆய்வு முடிவு, மொபைல் விரும்பிகளுக்கு சற்று மனக்கலக்கத்தை ஏற்படுத்தும் விதமாக உள்ளது. அதாவது, மொபைல்போன் உயயோகிப்பவர்களுக்கு தோல் பாதிப்பு ஏற்படும் வாய்ப்புகள் உள்ளதாக அந்த ஆய்வு தெரிவிக்கிறது.

பின்லாந்து நாட்டின் ஆராய்ச்சி நிறுவனத்தை சேர்ந்த டாரியூஸ் லெஜின்ஸ்கி என்ற அறிஞர் இதுதொடர்பாக ஆய்வு ஒன்றை மேற்கொண்டார். தனது ஆய்வு முடிவு குறித்து அவர் கூறியதாவது:

மொபைல்போன் கதிர்வீச்சுகள் மனிதர்களின் உடலில் ஒருசில மாற்றங்களை ஏற்படுத்துகிறது. இந்த மாற்றங்கள் சிறிய அளவிலானவை என்றபோதிலும், அவை நிகழ்கின்றன. இந்த ஆய்வில், 10 பேரை தொடர்ந்து ஒருமணிநேரம் ஜி.எஸ்.எம்., மொபைல்போன் உபயோகிக்கச்செய்தோம். பின்னர் அவர்கள் மருத்துவ சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். அவர்களின் முழங்கைப்பகுதி தோல்திசுக்கள் ஆய்வுசெய்யப்பட்டன.

இதில், உடலின் மற்ற தோல் பகுதிகளோடு ஒப்பிடுகையில் புரோட்டின் விகிதத்தில் குறிப்பிடத்தகுந்த மாற்றம் ஏற்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த ஆய்வில் செல்போன் கதிர்வீச்சால் உடல்நல பாதிப்பு ஏற்படுவற்கான சாதகம் இருப்பதாக கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால், தோல் பாதிப்பு ஏற்படக்கூடிய வாய்ப்புகள் உள்ளன,''என்றார். லண்டனில் வெளியாகும் பி.எம்.சி., என்ற பத்திரிக்கை இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

http://www.lankasritechnology.com/index.php?subaction=showfull&id=1204000314&archive=&start_from=&ucat=2&