lankasri.comகுருட்டுத் தன்மை ஏற்படக் காரணமான இரு பிரச்சினைகளை சீர் செய்யும் மருந்தொன்றை கண்டுபிடித்துள்ளதாக அமெரிக்க விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர். மேற்படி மருந்தானது, பார்வை இழப்புக்கு வழிவகுக்கும் கண்ணிலான இரத்தக் குழாய் சிதைவைத் தடுக்கக் கூடிய புரதத்தை செயலூக்கம் பெறச்செய்வதாக உதாஹ் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

ஆரம்ப கட்டமாக இம்மருந்தை எலிகளில் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை வெற்றியளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கண்களிலுள்ள இரத்தக் குழாய்களிலுள்ள தசைகள் பலவீனமடைதல் மற்றும் நீரிழிவின் தாக்கம் என்பனவற்றால் குருதிக் குழாய்கள் சிதைவடைவது வயதானவர்களில் காணப்படும் பொதுவான பிரச்சினையாகவுள்ளது என கூறும் இவ்விஞ்ஞானிகள், இதன் காரணமாக கண்ணுக்குள் இரத்தம் கசிவடையவும் வழமைக்கு மாறான புதிய இரத்தக் குழாய்கள் உருவாகவும் வழியேற்படுவதாக தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் மேற்படி விஞ்ஞானிகளால் அடையாளங் காணப்பட்டுள்ள "ரொபோ 4' புரதமானது இரத்தக் குழாய்களை உறுதியடையச் செய்வதிலும் அதன் செயற்பாட்டை சீர்ப்படுத்துவதிலும் முக்கிய வகிபாகம் வகிப்பதாக கூறப்படுகிறது.

 

http://www.lankasritechnology.com/index.php?subaction=showfull&id=1205777589&archive=&start_from=&ucat=2&