lankasri.comபுகைப்பிடித்தால் நினைவாற்றல் குறையும் என ஆய்வில் தகவல் தெரிய வந்துள்ளது. பிரான்ஸ் நாட்டில் 35வயது முதல் 55 வயதுக்குட்பட்ட அரசு ஊழியர்களிடம் ஆய்வு நடத்தப்பட்டது. அந்த ஆய்வின் தகவல் தெரிய வந்துள்ளது.

அதில் புகைப் பிடிக்கதாவர்களை விட புகைப் பழக்கத்துக்கு ஆளானோர் நினைவுத் திறனில் பெரிதும் பின்தங்கி உள்ளனர். உரிய நேரத்தில் சிறப்பான முடிவு எடுப்பதிலும் புகைப் பிடிப்பவர்கள் மத்தியில் தடுமாற்றம் காணப்படுகிறது. புகைப்பழக்கத்துக்கும், நினைவாற்றலுக்கும் தொடர்பு இருப்பது இந்த ஆய்வில் உறுதி செய்யப் பட்டுள்ளது.

புகைப்பிடிக்கும் பழக்கத்துக்கு ஆளானோர் வயதான காலத்தில் உடல் ரீதியாகவும் பல்வேறு பிரச்சினைகளை சந்திக்கின்றனர். வேலை பார்போரில், பல்வேறு நபர்களின் பெயர்களை நினைவு வைத்திருக்க வேண்டிய பணியில் இருப்போரில் புகைப் பழக்கத்துக்கு ஆளானோர் தங்களின் பணியில் பெரிதும் பின் தங்கி உள்ளனர்.

புகைப்பழக்கத்துக்கு ஆளானோர் அதில் இருந்து விடுப்பட்டால் மீண்டும் பழைய படி நினைவாற்றல் பெறலாம் என்றும் அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

 

http://www.lankasritechnology.com/index.php?subaction=showfull&id=1213774017&archive=&start_from=&ucat=2&