lankasri.comசமையலுக்கு ஒலிவ் எண்ணெய்யைப் பாவிப்பதால் சுமார் 9% புற்றுநோய் ஏற்படுவதற்கான ஆபத்தைக் குறைக்கலாம் என்று கிறீஸ் மற்றும் ஸ்பெயின் வாழ் மக்களிடம் நடத்திய ஆய்வில் இருந்து தெரியவந்துள்ளது.

ஸ்பெயின் மற்றும் கிறீஸ் மக்களிடம் புற்றுநோய் மற்றும் இதய நோய் தாக்கம் ஒப்பீட்டளவில் குறைந்திருப்பதற்கு அவர்களின் உணவுப்பழக்கமே முக்கிய காரணம் என்று அறியப்பட்டுள்ளது.

அதிகம் பழங்கள் மற்றும் மரக்கறி வகைகளையும், ஒலிவ் எண்ணொய், மீன் உணவுகளையும், சிவப்பற்ற இறைச்சிகளையும், சீரியல் வகைகளையும் மற்றைய உணவுகளை விட உண்பது புற்றுநோய் மற்றும் இதய நோய்களைக் குறைக்க உதவும் என்றும் குறித்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

ஒலிவ் எண்ணொய் அதிக அளவு நிரம்பாத கொழுப்பு அமிலங்களைக் கொண்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.


பிறிதொரு ஆய்வில் புறோக்கோலி (Broccoli) மற்றும் cruciferous வகை மரக்கறிகளை நாளாந்த உணவில் சேர்த்துக் கொள்வது ஆண்களில் புறஸ்ரேற் (prostate) புற்றுநோய் ஏற்படுவதைக் கட்டுப்படுத்துவதாக கண்டறிந்துள்ளனர். புறோக்கோலியில் உள்ள இயற்கையான இரசாயனங்கள் ஆண்களில் புறஸ்ரேற் சுரப்பியில் உள்ள மரபணுக்களில் குறிப்பாக GSTM1 எனும் மரபணு மீது செல்வாக்குச் செய்து இந்த நோய் ஏற்படுவதைக் கட்டுப்படுத்த உதவுவதாக ஆதாரபூர்வமாகக் கண்டறியப்பட்டுள்ளது.

03 Jul 2008
http://www.lankasritechnology.com/index.php?subaction=showfull&id=1215113246&archive=&start_from=&ucat=2&