பாலிக் அமிலம் மனித உடம்புக்கு சத்தூட்டும் ஒரு பொருள். பாலிக் அமிலச்சத்து உள்ள உணவு வகைகளை பெண்கள் பிரவக் கோளாறுகளைத் தவிர்ப்பதற்காக பரவலாக உண்கின்றன. இப்போது இதன் இன்னொரு பயன்பாடும் தெரிய வந்துள்ளது. இது ரத்த நாளங்களின் இறுக்கத்தை தளர்த்துவதால் பெண்களுக்கு மிகைப்பதற்றும் ஹைப்பர் டென்ஷன் ஏற்படுவதில்லை என்று ஆராய்ச்சியாளர்கல் கண்டு பிடித்துள்ளநர். இந்த பாலிக் அமிலச்சத்து ஆரஞ்சச்சாறு, பசுமையான இலக்காய்கறிகள் போன்றவற்றில் இயற்கையாகக் கிடைக்கிறது. ஆனால் ரத்த அழுத்தத்தில் மாற்றம் ஏற்பட வேண்டுமானால் இந்தச் சத்து உடம்பில் பெருமளவுக்குச் சேர வேண்டுமாம்.

 

நுண்ணோக்கிப் படிம் நுட்பம் என்று ஒருவகையான ஆய்வு முறையை அறிவியல் அறிஞர்கள் உருவாக்கியுள்ளனர். மூளையின் உள்புறம் எவ்வாறு செயல்படுகிறது என்பதைக் கண்டறிய இது உதவுகிறது. இதனால் காக்கா வலிப்பு, நினைவு மறாதி நோய், நடுக்குவாத நோய் போன்ற சிக்கலான நோய்களைப் பற்றி நன்கு புரிந்துகொள்ள முடியும். இதை முளையைப் பார்க்கும் முறை என்று நரம்பியல் துறைப் பேராசிரியர் ஆர்.கிளே ரீட் கூறுகிறார். இவரும், இவருடைய ஆய்வுக் குழுவினரும் அண்மையில் ஒரு எலியின் மூளையில் நியூரான்களின் செயல்பாடு பற்றி முதன்முறையாக ஆராய்ந்தனர்.

 

http://tamil.cri.cn/1/2005/11/08/This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.