பிரான்சில் ஒருவரின் ஒரு வருடக் கலவியை (புணர்ச்சியை) அட்டவணை - 20 மூலமாகப் பார்ப்போம்.61


அட்டவணை - 20


வகை கலவியில் ஈடுபடும் நாட்கள்


சேர்ந்து வாழ்தல்                                         146
திருமணம் செய்தோர்                              118
திருமணம் செய்யவில்லை.
ஆனால் காதலன், காதலி உண்டு.     114
திருமணமும் செய்யவில்லை.
காதலன், காதலியும் இல்லை.              69

 

இறுக்கமான ஆணாதிக்கக் குடும்பம் (118) மற்றும் கட்டற்ற பாலியல் நடத்தைகள் (69) என இரண்டிலும் கலவியின் இணைவு இயல்பாகச் சேர்ந்து வாழ்பவர்களைக் (114) காட்டிலும் குறைவானதாக உள்ளது. தாமாகவே சேர்ந்து வாழ்பவர்களிடையே கலவிகள் அதிகரித்து காணப்படுவது மற்ற வடிவங்களைவிட கலவி மட்டுமே சுதந்திரத்தைத் தீர்மானிக்குமா? அதிகமாக உள்ளதைக் காட்டுகின்றது.


பாரம்பரியமான திருமண உறவில் இருக்கும் ஆணாதிக்க ஜனநாயக நெருக்கடி, சேர்ந்து வாழும் குடும்பத்தில் குறைவானதாக இருப்பதால் அதிகக் கலவியை ஆரோக்கியமாக்குகின்றது. காதலன், காதலி உள்ளோர் இடையில் கூட்டுச் சமூகக் கண்ணோட்டம் இல்லாததால் கலவி குறைந்து இருப்பதுடன் பாலியல் நெருக்கடி இயல்பானதாகின்றது. ஓர் ஆணுடன் அல்லது ஒரு பெண்ணுடன் தொடர்பற்ற கட்டற்றவர்கள் பாலியல் கலவியில் ஈடுபடமுடியாத பாலியல் நோயாளியாகின்றனர். இவர்களின் கட்டற்ற பாலியல் சுதந்திரம் கலவியின் எண்ணிக்கையைக் குறைத்து விபச்சார நிலையில் குறைந்த கலவியையே ஏற்படுத்துகின்றது. இவர்களின் இயல்பான பாலியல் தேவைகள் நலமடிக்கப்பட்ட நிலையில் விபச்சாரத் தளத்தில், கட்டற்ற சுதந்திரத்தில் இந்தப் பொருளாதார அமைப்பின் சாக்கடைக்குள் தள்ளப்பட்ட இழிநிலையில் கேவலகரமாக வாழ்கின்றனர்.


இந்தக் கலவி பற்றிய புள்ளிவிபரம் மனித நடத்தையில் பல விதங்களை எமக்கு எதார்த்தத்தில் காட்டுகின்றது. ஆண் - பெண் உறவில், வேறுபட்ட உதாரணத்தில் கூட்டுவாழ்க்கையின் ஜனநாயகத்தன்மையை எமக்குப் புரிய வைக்கின்றது. இயல்பான, கட்டுப்பாடற்ற இணைந்த வாழ்க்கை கலவியை அதிகரிக்க வைக்கும். இது மனிதச் சமுதாயத்தில் உயர்ந்த ஆரோக்கியத்தைக் கொடுக்கும்.


இன்று நிலவிவரும் ஏகாதிபத்தியப் பொருளாதார அமைப்பில் இணைந்து வாழும் வாழ்க்கையின் உன்னதப் பண்புகள் இதற்குள் மாசுபடுத்தப்பட்டுள்ளது. இருந்த போதும் இவை வாழ்க்கையின் எதிர்கால இயல்பான வாழ்க்கையின் எடுத்துக் காட்டுகளாகும். ஏகாதிபத்தியப் பொருளாதார அமைப்பு தகரும்போது இயல்பாக இணைந்த குடும்பத்தின் உயர்ந்த தரம் கொண்ட வாழ்க்கை ஏற்படுவது தவிர்க்க முடியாதது என்பதற்கு இக்கலவியின் எதார்த்தம் எம்முன் வழிகாட்டுகின்றது.


இந்தியாவில் மத்தியதர வர்க்கத்துக்கு மேற்பட்ட 3,000 ரூபாய்க்கும் அதிகமாக வருமானம் உடைய 20 வயதுக்கும் 35 வயதுக்கும் இடைப்பட்டோரிடம் 1990-இல், இந்தியா டுடே நடத்திய ஆய்வில் பாலுறவு (ளுநஒ) உங்கள் வாழ்க்கையில் முக்கியமா? என்ற கேள்வியைக் கேட்டபோது, அவர்கள் அளித்த பதில்களை அட்டவணை: 21-இல் காணலாம். (21.12.1996)34


அட்டவணை - 21


வகை                                         சதவீதம்
ரொம்ப முக்கியம்                 34 %

 

 

முக்கியம்                                  30 %
ஏதோ கொஞ்சம்                    15 %
இல்லை                                       5 %

எப்போதும் இல்லை              4 %


நீங்கள் கடந்த மாதத்தில் பாலுறவில் (ளுநஒ) ஈடுபட்டீர்களா? என்ற கேள்விக்கு அவர்கள் அளித்த பதில்களை அட்டவணை: 22-இல், காணலாம்.


அட்டவணை - 22


வகை                                                    எத்தனை சதவீதம்

உடலுறவு                                                      60 %
சுய மைதுனம்                                              5 %
வாய் வழி உறவு                                         5 %
புளு பிலிம்                                                     5 %
பாலுறவுச் சாதனங்கள்                            5 %
பாலுறவுத் தூண்டும் பொருட்கள்      5 %
சொல்லாதவர்கள்                                      20 %


இந்தியாவில் மத்தியதர வர்க்கத்தின் பிரிவும், அதற்கு மேற்பட்ட பிரிவுகளையும் உள்ளடக்கிய இவ்வாய்வு நமக்குச் சில புரிதல்களைத் தருகின்றது. ஆண் பெண் வேறுபாடின்றி பாலுறவுத் தேவையை உணர்த்தினர். அதே நேரம் கணிசமான பகுதியினர் பாலுறவைப் புறக்கணிக்கின்றனர். சமுதாயத்தின் உயர்குடிகள் சமுதாயத்தை விட்டுவிலகிச் சீரழிவது அவ்வர்க்கத்துக்கே உரிய குணாம்சமாகும். பாலுறவுக் கலவியில் ஈடுபாடு பற்றிய கேள்விக்கான பதிலில் ஆண் - பெண் உடலுறவுக்குப் புறம்பான உறவுகள் ஆணாதிக்கத்தின் விளைவைக் காட்டுகின்றது.


இயற்கையான பாலியல் உறவு மறுக்கப்படும் போது, மறுக்கும் வர்க்கமே அதன் சீரழிவில் முதலில் சிக்கிக் கொள்வதைத் தடுக்க முடிவதில்லை. பாலியலில் இயற்கை உணர்வுகளின் தேவையை உணர்பவர்கள், அதை இயற்கைக்குப் புறம்பான வழியில் தீர்த்துக் கொள்வது மேட்டுக்குடியின் பண்பாகின்றது. மறுபுறம் இந்த உணர்வுகளை மரத்துப்போகும் சமுதாய இழிமைக்குள் பழகிக் கொள்வதன் மூலம் உணர்ச்சியை நலன் அடித்து மனநோயாளியாகி விடுகின்றனர். இவை சமுதாயத்தில் இருந்து அன்னியமான கேளிக்கைகளில் தன்னை மாற்றிக் கொள்கின்றது.


இந்த வகையில் ''டேக் இட் ஈஸி பாலிசி" என்ற தலைப்பில் (கட்டுரை) இந்தியா டிஸ்கோ டான்சுகளின் (னுளைஉழ னுயnஉந) வக்கிரத்தை, உலகமயமாதலை நியாயப்படுத்த எடுத்துக் காட்டி எழுதுகின்றது. (19.8.1998)34 மேலும் ''வலையில் லீலைகள்" என்ற தலைப்பில் இணையக் (ஐவெநசநெவ) காமக் களியாட்ட வக்கிரத்தை இந்தியா டுடே எழுதுகின்றது. (1.7.1998)34 இதைத் தொடர்ந்து ''அரட்டை அரங்கில்" ''மனக்கதவே தாழ் திறவாய்" என்ற தலைப்புகளில் தொலைக்காட்சி வக்கிரத்தை நியாயப்படுத்தி எழுதியுள்ளது. அமெரிக்காவின் ''ஒப்ராலின்ஃபீரே" என்ற நிகழ்ச்சியைப் பின்பற்றி ஆண் - பெண் தமது வக்கிரத்தைக் கொட்டுகின்றனர். (6.3.1995)34 ''சொர்க்கம் அருகிலே" என்ற கட்டுரையில் ஆண்மை நோக்கி ஓடும் மனிதர்களை இந்தியா டுடே எழுதுகின்றது. (1.7.1998)34 ''நெருங்கி, விலகி, நெருங்கி" என்ற கட்டுரையில் பாலுணர்வு தன்மையை இந்தியா டுடே எழுதுகின்றது. (21.12.1996)34 ''ஆசியரகம்" என்ற தலைப்பில் ஆசிய இனப் பெண்கள் துறக்காதது இல்லை என்று இந்தியா டுடே எழுதுகின்றது. (21.6.1993)34 ''துறப்பது ஆடையை மட்டுமல்ல - நிர்வாண நங்கைகள்" என்ற தலைப்பில், ''தயக்கத்தைத் துறந்த பல பெண்களுக்கு நிர்வாண மாடலிங் கீழ்த்தரமான காரியமல்ல, உயர்வுக்கான ஏணிப்படி" என்று எழுதும் இந்தியா டுடே தொடர்ந்து பெண்களின் பாலியல் வக்கிரத்தை வெளியிடும் ''டெபோனர்" இருபது வருடத்திற்கு முன் 30,000 பிரதிகள் விற்றது என்றும் இன்று அது ஒரு இலட்சத்தை எட்டியுள்ளது என்றும் எழுதுகிறது. ''பிளேவே" (பாலியல் இதழ்) என்ற இதழ் 30,000 என்ற விற்பனையில் இருந்தது என்றும் ஆறு மாதத்திற்குப் பின் 50,000 பிரதியை விற்றது என்றும் எழுதுகிறது. (6.11.1994)34


இணையத்தில் (ஐவெநசநெவ) ''சைபர் செக்ஸ்" என்ற புதிய பாலியல் வக்கிரம் அரங்கேறுகின்றது. இணையத்தில் எதை அதிகம் ஆராய்கின்றனர்? என யாகூ (லுயுர்ழுழு.ஊழுஆ) என்ற அமைப்பு ஆராய்ந்தபோது அதிகமாகப் பாலியலையே (ளநஒ) ஆராய்கின்றனர் என்ற அதிர்ச்சியே எஞ்சியது. இணையத்தில் அதிகம் இறக்குமதி (னுழுறுNடுழுயுனு) செய்யப்பட்டது சின்டி மார்கோலிஸ்; (ஊஐNனுலு ஆயுசுபுழுடுஐளு) என்ற நீச்சல் உடைகள் தான். சின்டியின் நூறு பிரசித்திப் பெற்ற போட்டோக்கள் 7,50,000 பேர் பிரிண்ட் எடுத்துள்ளதை அமெரிக்க ஆன் லைன் அறிக்கை தெரிவிக்கின்றது. சிண்டி தனக்கு வந்த ஈ-மெயில்களில் நாற்பது சதவீதம் எப்படி உடல் அழகைப் பேணுகின்றீர்கள்? எனக் கேட்டு வருகின்றது என்கின்றார். (23.8.1998)28


சுதந்திரமான ஜனநாயக ஊடகமாகச் சித்தரிக்கப்படும் இணையத்தின் வக்கிரத்தைப் பார்ப்போம். இணையம் தொடர்பான ஆய்வு ஒன்றைச் செய்த அமெரிக்காவிலுள்ள ~கார்னெகி மெல்லோன் பல்கலைக்கழகம்| ~தகவல் மாநெடு;ஞ்சாலையில் நடக்கும் பாலுறவு வக்கிர இலக்கியங்களின் வியாபாரம்| என்றொரு தலைப்பில் ஆய்வு செய்தது. அதன்படி 18 மாதத்தில் 9,17,410 பாலுறவு வக்கிரப் படங்கள், சிறுகதைகள், சித்தரிப்புகள், ஆண்டுத் திரைப்படங்கள் இணையத்தில் புகுத்தப்பட்டதைக் குறிப்பிட்டதுடன், 83.5 சதவீதம் பேர் இதைக் கண்டு களிப்பதையும் அம்பலமாக்கியது. பல்கலைக்கழக இணைய பயன்பாட்டில் 40-க்கு 13 பாலியல் வக்கிரத்துக்குள் நீடிப்பதை வேறு அம்பலமாக்கியுள்ளது. இந்தச் சேவையை வழங்கும் அமெரிக்காவின் 5 பெரிய ஜனநாயக நிறுவனங்கள் 10 இலட்சம் டாலருக்கு மேல் இதன் மூலம் சம்பாதிக்கின்றனர். (மார்ச் 1998)54


பெண்ணின் சுதந்திரத்தில், ஆணின் ஜனநாயகத்தில் இவைகள் நியாயப்படுத்தப்படுகின்றது. இன்று பாலியல் உணர்வுகளைத் தீர்த்துக் கொள்வது என்பது தனிமனிதக் கட்டற்ற சுதந்திரத்தின் பின் வக்கிரமடைவதையே மேல் உள்ளது காட்டுகின்றது. இந்தியா டுடே போன்ற பார்ப்பனிய ஏகாதிபத்தியப் பத்திரிக்கைகள் இவைகளை எந்தக் கட்டத்திலும் விமர்சிக்கவில்லை. மாறாக ஆதரிக்கின்றது. இதைச் செய்தியாக மத்தியதரப் பிரிவுகளுக்குக் கடத்திச் செல்லுகின்றது.


இந்தியாவின் மதவாத, நிலப்பிரபுத்துவ ஆணாதிக்க வக்கிரத்தை மாற்றி ஏகாதிபத்திய ஆணாதிக்க வக்கிரத்தை ஏற்படுத்த செய்யும் முயற்சியில் பழையதை மறுப்பது (பின்நவீனத்துவவாதிகள் போல்) அரங்கேறுகின்றது. இந்த மறுப்பையே மார்க்சியப் போராட்டத்திற்கு எதிரான மாற்றாக இன்று பலர் முன் வைக்கின்றனர். இந்த வகையில் இன்று பலவிதமான பாலியல் நடத்தைகள் உருவாக்கப்படுகின்றன, நியாயப்படுத்தப்படுகின்றன. இது பாலியல் வக்கிரத்தில் பூத்துக் குலுங்குகின்றது.


இணையம் பாலியல் வக்கிரத்திலும், கேவலமான நடத்தைகளிலும் அரங்கேறுகின்றது. டிஸ்கோ கலாச்சாரம் பாலியலை விபச்சாரமாக்குகின்றது. இது முகம் பார்த்து, உடல் பார்த்து பாலியலை இரசிக்கவும், நுகரவும் பழக்கப்படுத்தப்படுகின்றது. இதைச் செய்ய பெண்களின் ஆடை அவிழ்ப்புகள் எல்லாத் தளத்திலும் கையாளப்படுகின்றது. இது மொடலாக தொடங்கி அங்கத்தை விற்பனைச் சந்தையில் பொருட்களின் சந்தையாகப் பரிணாமிக்கின்றது. இங்கு சந்தையானது அனைத்தையும் தீர்மானிக்கின்றது. அதற்கு இசைவாகப் பாலியல் போக்குகள் எதார்த்தமாகின்றது. இது வக்கிரத்தைத் தனது ஜனநாயகத் தனிமனிதச் சுதந்திரமாக எல்லைப்படுத்துகின்றது. இதைத் தான் மேலுள்ளது எமக்குத் தோலுரித்துக் காட்டுகின்றது.


பாலியல் நடத்தைகள் மோசமானப் பாலியல் மனநோயாளிகளை உற்பத்தியாக்குகின்றது. இந்தியாவில் பத்து பேருக்கு ஒருவர் ஆண்மைக் குறைவால் மன உழைச்சலுக்கு உள்ளாகின்றார். நகர்ப்புறத்தில் ஐந்து முதல் எட்டு பேருக்கு ஒருவர் ஆண்மைக் குறைவுக்கு மருந்து வாங்குகின்றனர். சண்டீகாரில் உள்ள தாம்பத்திய மனவியல்-செக்சுவல் கிளினிக் ஆய்வுகளில் தன்னிடம் மருத்துவத்திற்கு வந்தோரில் 77 சதவீதம் பேருக்கு விந்து முன் கூட்டியே வெளியேறி விடுவதாகக் கண்டறிந்துள்ளார். மும்பாய் கே.இ.எம். மருத்துவமனை ஆய்வில் ஆண்மைக் குறைவு நோய் வருடம் 15 சதவீதம் அதிகரிக்கின்றது. சென்னை தேகா இன்ஸ்டிடியூட் மருத்துவ ஆலோசகர் பத்து வருடத்தில், ஆண்மைக் குறைவுக்காக மருந்து தயாரிப்பது முன்பை விட நான்கு மடங்கு அதிகரித்துள்ளது என்கிறார். கிட்டத்தட்ட மூன்று கோடி பேர் ஆண்மைக் குறைவால் அமெரிக்காவில் அவதிப்படுவதாக நேஷனல் இன்ஸ்டிடியூட்; ஆஃப் ஹெல்த் தெரிவித்துள்ளது. சலரோக நோயால் பாதிக்கப் பட்டோரில் 28 சதவீதம் பேர் ஆண்மைக் கோளாறால் பாதிக்கப்படுகின்றனர். (29.4.1998)34


ஆணாதிக்கச் சமுதாயத்தில் ஆணாதிக்க வக்கிரம் அதிகரிக்க ஆண்மைக் குறைபாடும் அதிகரிப்பது எதார்த்தமாகின்றது. இந்நோய் உண்மையில் மனிதச் சலனத்திலும், மன உளவியலிலும் ஏற்படுகின்றது. பெண் பற்றிய ஆணின் கண்ணோட்டம், பாலியல் பற்றிய சமுதாயக் கண்ணோட்டம் விகாரமாகின்ற போது ஆணின் ஆண்மைப் போட்டியில் ஈடுகொடுக்க முடியாத நுகர்வுச் சிக்கலுக்குள் சிக்குகின்றது. இது நகரத்துக்கும், கிராமத்துக்கும் இடையில் வேறுபாட்டைப் புள்ளி விபரம் காட்டுகின்றது. இதன் மூலம் ஏகாதிபத்திய ஆணாதிக்க வக்கிரம் நகரத்தைச் சிதைக்கின்ற வேகம் கிராமத்தில் குறைவாக இருப்பது சமகால நிகழ்வாக உள்ளது. இது ஆண்மைக் குறைவை வெளிப்படுத்தும் நோய் கிராமத்துக்கும், நகரத்துக்கும் இடையில் வேறுபாட்டைத் தீர்மானிக்கின்றது. ஆணின் நிலை இந்த வகையில் உள்ள போது பெண்ணின் நிலை கணக்கிட முடியாதது. ஏனெனின் இதனால் பாதிக்கப்படும் பெண்கள் மற்றும் ஆண் சார்ந்த பாலியல் முன்னுரிமை பெண்களின் அவலத்தைச் சொல்லில் அடக்க முடியாது. ''மேற்கின் புள்ளிவிபரம் ஒன்றின்படி உடலுறவில் ஆண்கள் 100 சதவீதம் திருப்தி அடைந்தால் பெண் 30 சதவீதமே திருப்தி அடைகின்றாள் என்கிறது."62 ஆனால் அவர்கள் தமது நெருக்கடியை வெளிக் கொண்டுவர முடியாத ஆணாதிக்கச் சமுதாயத்தின் கைதிகளாக உள்ளனர். இதைக் கோருவது, கேட்பது பெண்ணின் அடக்க, ஒடுக்கத்திற்கு எதிரானது ஆகும். மீறிக் கோரினால் இந்த ஆணாதிக்கச் சமூகத்தில் வாழ தகுதியற்றவளாகக் கருதப்படுவாள்.


இன்று இந்தப் பாலியல் சிக்கலில் சிக்கிக் கொள்ளும் ஆண்களின் எண்ணிக்கை உலகமயமாதல் வேகத்துக்கு நேர்விகிதத்தில் வளர்ச்சி பெறுகின்றது. பண்பாடு, கலாச்சார ரீதியில் ஏகாதிபத்தியமயமாதல் என்பது ஆண்மைக் கோளாறின் நோய்க்குறியாகும். இந்த நோயில் பெரும்பான்மையானோரின் நோயானது விந்து முன் கூட்டியே வெளியேறுவதாகும். இது பெண் உறுப்புகள் பற்றிய சமுதாயப் புறச்சூழல் சார்ந்த பிம்பங்கள் ஆணின் விந்து முன்கூட்டியே வெளியேறுவதற்கான நிபந்தனையாகின்றது.


உறுப்பு பற்றிய ஆணாதிக்கச் சுரண்டும் வர்க்கத்தின் வக்கிரப் பார்வைகள் ஆணின் இயற்கையான செயலுக்கு முன்பே இன்பத்தைத் தூண்டுகின்றது. அதாவது பெண் சந்தையில் விற்பனைக்காக உருவகப்படுத்தப்படும் அனைத்துத் துறைசார்ந்த பிம்பத்திலும் ஆணாதிக்கத் துணைகொண்டு எப்படி உலகமயமாதலும் தீவிரம் பெற்று வளரத் தூண்டுதலாக உள்ளதோ, அதைப் போன்று பெண்ணின் உறுப்புகள் ஆணின் ஆண்மைத் தூண்டுதலை வேகப்படுத்தி அதை இழக்கப் பண்ணுகின்றது.


பெண் எவ்வளவுக்கு எவ்வளவு ஆணாதிக்க உலகமயமாதலில் கட்டற்ற சுதந்திரம் பெற்று நிர்வாணமாகின்றாளோ அவ்வளவுக்கு அவ்வளவு ஆண்மைக் கோளாறு அதிகரிக்கின்றது. இது எதிர் நிலையில் பெண்ணின் பாலியல் அவலத்திற்கு மேலும் தீர்க்கமுடியாத தூண்டுதலாகின்றது. இதன் மாற்றுத் தீர்வாக ஓரினப் புணர்ச்சி வளர்ச்சி பெறுகின்றது. பாலியலில் எதிர்பால் மீதான வெறுப்பு ஆண்மைக் கோளாறால் ஒருபுறம் தீவிரமாகின்றது. ஆணாதிக்கம் விதைத்த ஆண் - பெண் விளைவைக் காட்டிலும் எதிர் பால் வெறுப்பு ஓரினப் புணர்ச்சியில் வளர்ச்சி பெறுவது என்பது கூட்டுச் சமுதாயப் பிளவை, அதாவது ஆண் - பெண் பிளவை மேலும் ஆழமாக்குகின்றது.


இன்று ஆண்மைக் கோளாறை நிவர்த்தி செய்ய புதிய மருந்துகளைத் தேடி கண்டுபிடிப்பாளர்கள் மண்டையைப் பிளந்து கொள்கின்றனர். அந்தளவுக்குக் கண்டுபிடிப்பு ஆணாதிக்கப் பணத்தை விளையப் பண்ணும் ஆணாதிக்க வக்கிரம் கொப்பளித்தபடியுள்ளது. ஆண்மைக் கோளாறைத் தடுத்து நிறுத்த வேண்டுமாயின் பெண் பற்றிய வக்கிரமான பார்வை நிறுத்தப்பட வேண்டும். இன்றைய சந்தை உலகம், அது சார்ந்த விளம்பரங்கள் தடை செய்யப்பட வேண்டும்;. இந்தச் சந்தைப் பொருளாதாரத்தைப் பாதுகாக்க உருவாக்கப்படும், எழுத்துகள், திரைப்படங்கள்.... என அனைத்தும் ஒழித்துக் கட்டப்படவேண்டும். அதாவது மொத்தத்தில் ஆணாதிக்கச் சமூகம் தகர்க்கப்பட வேண்டும். இது இன்றைய சுரண்டல் அமைப்பைத் தகர்ப்பதில் தங்கியுள்ளது. பெண் பற்றிய ஆணாதிக்கப் பார்வையே ஆண்மைக் குறைவின் காரணம் என்பதைப் புரியாத வரை, அதை மாற்றவும் முடியாது, தடுத்து நிறுத்தவும் முடியாது.


இது இந்தியாவில் இருந்து அமெரிக்கா வரை பொது கோளாறாகின்றது. இது சமுதாயப் பிணியாகின்றது. ஆண் - பெண் பிளவைத் தீவிரமாக்குகின்றது. இயற்கைக்குப் புறம்பான பாலியல் வக்கிரத்துக்கு வித்திடுகின்றது. இதைப் பாட்டாளி வர்க்கப் புரட்சியின்றி தடுத்து நிறுத்த முடியாது.


ஜப்பானில் செய்த ஆய்வில் ஒருதார மணத்துக்கு வெளியில் ஆண்கள் 20 சதவீதமும், பெண்கள் 8 சதவீதமும் பாலியல் உறவுகளைக் கொண்டிருப்பதை ஒப்புக்கொண்டனர். பாலியல் நெருக்கடிகள், சீரழிவு விளைவுகளின் தோற்றம் ஆணாதிக்க அமைப்பின் சீழ் ஆகின்றது. நாற்றம் கண்ட இந்த ஆணாதிக்க அமைப்பும், அதன் விளைவும் இயற்கை உணர்வுகளைப் பந்தாடிச் சிதைப்பதையே இப்புள்ளிவிபரம் காட்டுகின்றது. இந்த நாற்றம் கண்ட அழுகல் வாழ்க்கை முறை ஆணாதிக்கத்திற்கு எதிரான ஆயுதத்தை உருவாக்கின்றது. இதை, இந்த ஆணாதிக்கத் தனிச்சொத்துரிமை உலகமயமாதல் தனக்கு எதிராகத் தன்னையே உருவாக்குகின்றது. இந்த வர்க்கப் போராட்டம் அனைத்துத் துறையிலும் வெடித்துக் கிளம்புவதை எந்தச் சக்தியாலும் தடுக்கமுடியாது.


பாலுறவு பற்றிய சமுதாய வக்கிரம் சிறுவர்-சிறுமிகளைகளையும் கூட விட்டுவிடவில்லை. பிரான்சில் முதல் முத்தமிடுதல் 14 வயதிலும், அணைத்தல் 15 வயதிலும் (ஆண் 15.7-வயதிலும் பெண் 11-15 வயதிலும்), உடலுறவு கொள்ளல் 17 வயதிலும் (ஆண் 17.3-வயதிலும் பெண் 17.6-வயதிலும்) நடக்கின்றது.


சுற்றுலாப் பயணத்தின் போதே 63 சதவீதமான உடலுறவு நிகழ்கின்றது. இதில் 60 சதவீதம் பெண்கள் தமது காதலனுடன் விரும்பி ஈடுபடுகின்றனர். ஆனால் ஆண் 38 சதவீதம் மட்டுமே விரும்பியவருடன் ஈடுபடுகின்றான். 5 சதவீதம் பெண்கள் பலாத்காரத்துக்கு உள்ளாக்கப்படுகின்றனர். 87 சதவீதம் பெண்களும், 70 சதவீதம் ஆண்களும் தாம் காதலிப்பவர்களுடன் உறவு கொள்கின்றனர். 93 சதவீதம் ஆண்களும் 65 சதவீதம் பெண்களும் சந்தோசத்திற்காக மட்டும் உறவு கொள்கின்றனர். 15-16 வயதுடைய ஆண்களில் 35 சதவீத ஆண்களும் 18 வயதுடைய ஆண்களில் 50 சதவீத ஆண்களும் பல காதலிகளை வைத்துள்ளனர். இது பெண்களில் முறையே 24 சதவீதமாகவும் 40 சதவீதமாகவும் உள்ளது. 15.4 சதவீதமான பெண்கள், 2.3 சதவீதமான ஆண்கள் அவர்களின் சிறு வயதில் பலாத்காரத்துக்கு உள்ளாக்கப்படுகின்றனர்.63 15 வயதுக்குக் குறைந்த 81 சதவீதம் பேருக்கு ஒரு காதலன் அல்லது காதலி உள்ளனர். இதில் முத்தத்தில் ஈடுபடுவோர் 82 சதவீதம் பேர் ஆவர். ஆகக் குறைந்த உடலுறவு 13 வயதில் நடக்கிறது.64 பதினைந்து மும்பாய் பாடசாலைகளில் மார்க்கெட்டிங் அமைப்பு எடுத்த ஆய்வில் 12 வயது முதல் 15 வயதுடையோரில் 13 சதவீதம் பேருக்குப் பாலியல் அனுபவம் உள்ளது. இதில் 75 சதவீதம் பேருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட காதலர் அல்லது காதலிகள் உள்ளனர். (23.9.1998)34 ''பிஞ்சில் பழுத்தவை" கட்டுரையில் இந்தியாவில் எட்டு தனித்தனியான ஆய்வுகளின் பின் ஐக்கிய நாடுகள் மக்கள் தொகை நிதி அறிக்கையில் பத்து ஆண் சிறுவர்களுக்கு ஒருவர் 16 வயதுக்குள் பாலியல் அனுபவம் உள்ளது எனக் குறிப்பிட்ட அறிக்கை, பெண்களைப் பற்றி குறிப்பிடவில்லை.


இது பிரான்ஸ் மற்றும் இந்தியாவில் பாலியல் நாட்டம் சிறுவயதிலேயே வீங்கி வெம்பத் தொடங்குவதைக் காட்டுகின்றது. சிலர் இதை ஏகாதிபத்தியக் கோட்பாட்டுக் கொள்கையின் அடிப்படையில் சிறுவர்களின் பாலியல் உளவியலாக நியாயப்படுத்துகின்றனர். இந்த வயதுள்ள மாணவ - மாணவிகளை ஆராயின் அவர்களிடம் பொது அறிவு என்பது கிடையவே கிடையாது. போதை வஸ்துகள், சிகரெட், மது, பாலியல், பிரபலமான நடிகர் - நடிகைகள் பற்றியதில் உள்ள அறிவும், அனுபவமும் மற்ற எந்தத் துறையிலும் இந்த இளைய தலைமுறை கொண்டிருப்பதில்லை.


சமுதாயத்தின் நுகர்வுச் சந்தை, தனது சந்தையை விரிவாக்கக் கையாளும் ஆணாதிக்கப் பாலியல் கண்ணோட்டத்தால் குழந்தைகள் பிஞ்சிலே வெதும்புகின்றன. இது ஆண் - பெண் என எந்த வேறுபாடும் இன்றி ஆணைத் தொடர்ந்து பெண்ணின் புள்ளி விபரங்கள் போட்டி போடுகின்றன. சமுதாயம் ஆணாதிக்கப் பாலியல், குடி, புகைத்தல், போதை.... போன்றவற்றில் நல்ல ஆரோக்கியமான கண்ணோட்டம் கொள்ளும் போது இவை தொடர்பான ஆரோக்கியமான மாற்றம் பெறுவது தவிர்க்கமுடியாதது. பாலியல் பற்றி அறிவார்ந்த கல்விகள் மற்றும் எதார்த்த வாழ்க்கையில் ஆண் - பெண் உறவுகள் போன்றனவற்றைச் சமுதாயம் ஆரோக்கியமாகக் காணாதவரை பாலியல் சந்தைப் பொருளாதாரத்தில் சிக்கி, சிறுவர் - சிறுமிகள் வெம்பி வெதும்பிப் போவார்கள். இதனால் சமுதாயத்தின் தலைமுறைக்குத் தலைமுறை பாலியல் பற்றிய வக்கிரக் கண்ணோட்டம் விகாரமாகி வருகின்றது.


சிறுவர் - சிறுமிகளின் சுற்றுலா என்பது கலவிக்கானப் (புணர்ச்சிக்கான) சந்தர்ப்பத்தை பெரும்பாலும் ஏற்படுத்துகின்றது. இதில் பலாத்காரமாகவும், இயல்பானதாகவும், மறைமுகமான கட்டாயத்தின் பேரிலும் நடக்கின்றது. இங்கு சொந்தக் காதலி அல்லது காதலன் அல்லாத உறவுகளும் அரங்கேறுகின்றன. அத்துடன் விரும்பிய உறவுகளும், சந்தோசத்துக்கான உறவுகளும் நிகழுகின்றன. இந்த உறவுகள் என்பது சந்தர்ப்ப வசத்தால் அநேகமாக நிகழ்வது துரதிருஷ்டமானது. மனிதனின் அன்றாட நிகழ்ச்சிகள் அனைத்துமே தற்செயலானவைகள் தான். யாரும் முன்கூட்டியே இப்படித்தான் என்று வரையறுத்து விடுவதில்லை. இந்த தற்செயலான நிகழ்வுகளைத் திட்டமிடுவதே மனிதனின் குறிப்பான உழைப்பாகும்.


இச்சிறுவர் - சிறுமிகளின் புறநிலையான நுகர்வை, வர்த்தக உலகம் வளர்த்து எடுக்கும் பாலியல் பற்றிய கண்ணோட்டத்தைச் செயல்படுத்த இந்தச் சுற்றுலாக்கள் வசதியாக மாறிவிடுகின்றது. சாதாரண வாழ்க்கையில் சாத்தியமான கலவிக்கான சூழல் இருந்தும், ஈடுபடாது விலகிய வாழ்க்கை சுற்றுலா போன்றவற்றில், சூழலால் ஈடுபடுவதை ஊக்குவிக்கின்றது. இந்த வயது என்பது கல்வியின் முக்கியமான காலக்கட்டமாகும். அறிவியல் ரீதியில் சிறுபிள்ளைத் தனத்தைக் கைவிட்டுச் சமுதாய நலனைப் புரிந்து கொண்டு கல்வியை உள்வாங்கும் காலக்கட்டமாகும். இந்தவயதில் விகாரமான ஆணாதிக்கப் பாலியலைப் பூர்த்தி செய்கின்ற போது அதன் தோல்வி அல்லது அதன் வெற்றி அக்குழந்தையின் சமூக அறிவியல் வளர்ச்சியைப் பாதிக்கின்றது. இது மேலும் புதிய உளவியல் சிக்கல்களைக் கொடுக்கின்றது.


இந்த வயதில் விழித்துக் கொள்ளும் ஆண் - பெண் பாலியல் விரிவாக்கம் அதைப் புரிந்து கொள்வதற்கு முன்பே உடலுறவை நாட வைக்கின்றது வெம்பிய நுகர்வுப் பண்பாடு. தமிழ்த் திரைப்படத்தை எடுப்பின் கதாநாயகன் அல்லது கதாநாயகியின் காதல் காட்சிகள், பாலியல் உணர்வுகள், அவர்களின் உடை, உணவு, நடத்தைகள் எல்லாவற்றையும் இவ்வயது அப்படியே அறிவியல் பூர்வமாகச் சிந்திக்காது நடைமுறைப்படுத்த நினைக்கின்றது. இது மாதிரி வாழ பின் நிற்பதில்லை. இந்தக் கற்பனையில் இருந்து அதை அடுத்த கற்பனைத் தளத்தில் தம்மை ஈடுபடுத்துகின்றனர். இது நாடு கடந்து எல்லா நாட்டிலும் பொதுவான நுகர்வுப் பண்பாடாகி பாலியல் பண்பாடாகின்றது.


இன்று உலகில் சிறுவயது வன்முறை அமெரிக்கா, பிரான்ஸ்.... என அனைத்து நாட்டிலும் கட்டுப்படுத்த முடியாத சமூக மறுப்பு கோட்பாட்டுக்கு உட்பட்டு அனைத்தையும் மறுதலித்து சமுதாயம் வன்முறையின் புகலிடமாகின்றது. இது எப்படி சிறுவர்களின் தன்மையாகியது? வன்முறை பற்றிய ஏகாதிபத்தியக் கண்ணோட்டம் அதைப் பாதுகாக்க திரைப்படம், வீடியோ, கணினி விளையாட்டுகள், நுகர்வை அதிக அளவில் கோருதல், சமுதாயத்தின் கட்டுப்பாடற்ற கட்டற்ற சிறுவர் - சிறுமிகளின் சுதந்திரம் பற்றிய கற்பனைகள், பெற்றோரின் தனிமனிதச் சுதந்திரம் பற்றிய சமுதாய மறுப்புக் கண்ணோட்டம் ஆகியவை குழந்தைகளின் வன்முறைகளுக்கு மூலமாகின்றது.


இது அடுத்த நூற்றாண்டில் மிகப்பெரிய மனித அவலமாக இருக்கும் என்பதை ஒத்துக் கொண்டு அதைப்பற்றிய விவாதத்தை இந்த நுகர்வுச் சந்தைப் பொருளாதாரத்திற்குள் ஆய்வுகளையும், விளக்கத்தையும் நடத்துகின்றனர், சட்டத்தை இறுக்குகின்றனர். ஆனால் வன்முறையைச் சமுதாயம் எப்படிப் பார்க்கின்றதோ, அதற்கு உட்பட்டே குழந்தையும் வன்முறையில் ஈடுபடுகின்றது. பிரான்சில் 1998-இல், 9,000 பொலிசார் காயங்களுக்கு உள்ளானார்கள் எனின், அது சிறுவர்களின் வன்முறையால் பெரும்பாலானவை நிகழ்ந்தன. பிரெஞ்சு சிறுவர் - சிறுமிகளுக்கும் பொலிசாருக்கும் இடையில் மோதல் நிகழ்வதையும், எதிரியாகப் பரஸ்பரம் நீடிப்பதையும் சுவர் எழுத்துகளிலும், நடைமுறையிலும் பார்க்கக்கூடியதாக உள்ளது. இதை ஒட்டிய விவாதங்களையும் பிரெஞ்சுச் சமூகம் நடத்துகின்றது.


இந்த வன்முறை எப்படித் தோற்றுவிக்கப்பட்டதோ அந்தளவுக்குப் பாலியல் பற்றிய கண்ணோட்டமும், நடத்தைகளும் தோற்றுவிக்கப்பட்டுள்ளன.


இந்த நுகர்வுக் கலாச்சாரம் ஒன்றுக்கு மேற்பட்ட காதலன், காதலிகளை வைத்திருப்பதில் காதல் சீரழிகின்றது. காதல், அன்பு என்ற ஜனநாயகத்தின் நியாயமான பண்புகள் ஏகாதிபத்தியமயமாதலில் வெறும் நுகர்வாக மாறிவிடுவதன் விளைவே ஒன்றுக்கு மேற்பட்ட கோரிக்கைகளைக் கோருகின்றது.


கட்டற்ற காதல் காதலின் ஜனநாயகப் பண்பை மறுக்கின்றது. கட்டற்ற காதல் என்பது நுகர்வாக வடிவமெடுக்கின்றது. இது ஆணாதிக்கம் பெண்ணை முன்பு பயன்படுத்தியதை விட மோசமாகப் பயன்படுகிறது. ஆண்-பெண் என இருவரும் மனித உறவுகளை மேலும் பயன்படுத்தப்படும் நுகர்வு இயந்திரமாகக் காண்பதும், செயல்படுவதும் புதிய வடிவமாகின்றது. இது சிறுவர் - சிறுமிகளின் உளவியலில் வக்கிரமாக வெளிப்படுவதையும், இதில் வெம்பி அழுகிப் போவதையும் தவிர இந்தச் சமுதாயம் வேறு எதையும் மனித நலன் சார்ந்து படைத்து விடவில்லை.


சிறுவர் - சிறுமிகள் பாலியல் கல்வியைத் தமது எதார்த்த வாழ்க்கையை ஒட்டித் தெரிந்து கொள்வதும், கற்றுக் கொள்வதும் அவசியமானது, ஆரோக்கியமானது. இது சமுதாய நலன்களில் இருந்து பாலியலைப் புரிந்து கொள்ளும் போக்கில் கற்றுக் கொள்வதும், பாலியலை அணுகுவதும் அவசியமானவை. இது விலக்கானதோ அல்லது அவசியமற்றதோ அல்ல. மாறாக இது கற்றுக் கொள்வதைச் சமுதாய நோக்கில் கோரும் அதே நேரம் ஆணாதிக்க வக்கிரப் பாலியலை விமர்சித்துக் கல்வி வளர்ச்சி பெறவேண்டும். அது இல்லாதவரை கல்வி இந்த ஏகாதிபத்திய ஆணாதிக்க எல்லைக்குள் வெம்பிப் போகப் பாலியல் கல்வி எல்லைப்படுத்தப்படும். இதற்கு எதிரான போராட்டமின்றி பாலியல் கல்வி என்பது ஆணாதிக்க வக்கிரத்தை உள்ளடக்கியதாகவே எஞ்சும். இங்கு காதல் என்பதற்குப் பதில் நுகர்வு, விபச்சாரம் என்று ஆணாதிக்கத்தால் கறைப்பட்டு ஆணும் பெண்ணும் இணைந்து அனுபவிக்கப்படும் நிகழ்வாக மாறும்.


அட்டவணை - 23


கலவியில் ஈடுபடுவோரின் நிலை.65


வகை                                                       ஆண் (சதவீதம்)                   பெண் (சதவீதம்)
முதலாவது உடல் உறவின்                 33 %                                             91 %

போது மிகவும் நேசித்தல்
சேர்ந்த கலவியில் ஈடுபடுதல்            64 %                                              90 %


ஆண் - பெண் முதல் உறவின் போது நேசித்தல் எப்படி ஆணாதிக்க நுகர்வாக இருக்கின்றது என்பதைப் புள்ளிவிபரம் அட்டவணை - 23 காட்டுகின்றது. இதில் ஆணாதிக்க நுகர்வுப் பயன்பாட்டுத் தன்மை அதிகமாக வெளிப்படுகின்றது. ஆண் தனது முதல் உறவில் ஈடுபடும் போது 33 சதவீதம் பெண்ணை நேசித்தபடியே ஈடுபட, 67 சதவீதம் பேர் நுகர்வு மற்றும் பயன்பாட்டுக் கண்ணோட்டத்தில் பெண்ணைப் பொருளாக அனுபவிக்கின்றனர். இதில் 36 சதவீதம் பேர் சேர்ந்த கலவியை விட ஒருதாரக் கண்ணோட்டத்தில் பெண்ணை ஆணாதிக்க நிலையில் இருந்து அனுபவிக்கின்றனர். இதில் பெண் தன்னை நேசித்த ஆணுடன் 91 சதவீதம் முழு ஈடுபாட்டுடனும், 90 சதவீதம் பரஸ்பர உறவுக் கண்ணோட்டத்திலும் ஈடுபடுகின்றனர். 9 சதவீதப் பெண்கள் நேசமின்றியும், 10 சதவீதப்; பெண்கள் ஒருதலைப் பட்சமாகவும் ஆணாதிக்கக் கண்ணோட்டத்திலும் பாலியலை அனுபவிக்கின்றனர். முதல் கலவியே ஆண்களில் அதிகமாகவும், பெண்களில் சற்று குறைவாகவும் நுகர்வுக் கலாச்சாரம், ஆணாதிக்கச் சுயநலக் கண்ணோட்டத்தை வெளிப்படுத்தியே அணுகுகின்றனர். அன்பு, காதல், தேவை போன்றன எந்தளவுக்கு மேற்குப் பண்பாட்டுக் கலாச்சாரத்தில் சிதைக்கப்பட்டுள்ளது என்பதை இப்புள்ளி விபரம் காட்டுகின்றது.


முதல் கலவிக்குப் பிந்திய இந்த அவலம் மேலும் அகலமாகப் பிளந்தே செல்லும் என்பதை எதார்த்தம் காட்டுகின்றது. இது விவாகரத்துக்களையும், ஓரினச் சேர்க்கைகளையும், மனநோயாளிகளையும், பாலியல் வக்கிரங்களையும் விரிவாக்கி வளர்ச்சி பெறச் செய்கின்றது. இளமைக் காலம் என்பது இந்தப் பாதாளப் பண்பாட்டுப் பாலியல் நுகர்வில் இருந்தே தோற்றம் பெறுகின்றது. உலகமயமாதலில் உள்ள ஏகாதிபத்தியக் கண்ணோட்டம் நாடுகளைச் சிதைத்து நுகர்வது போல் மனித உறவுகளைச் சிதைத்து நுகர்வதை இந்தப் பாலியல் முதல் நுகர்விலேயே தொடங்கிவிடுகின்றது. இது மூன்றாம் உலக நாடுகளில் வேகமாக வளர்ச்சி பெறுகின்றது. ''ஒரு புதிய காதல் கதை" எனத் தலைப்பிட்டுக் காதல் ஒரு கண நேரத்தின் பின் வீசும் ஒரு பொருளாகி விட்டது என இந்தியா டுடே என்ற பார்ப்பனிய ஏகாதிபத்திய ஆதரவு பத்திரிக்கையே எழுதுகின்றது. (17.2.1999)34


காதல், அன்பு, தேவை என்பன எல்லாம் நுகர்வு ஆடம்பரம் போன்ற எல்லைக்குள் கலவியை அணுகுவது இந்திய மேட்டுக்குடியின் பண்பாடாகி வருவதையே இது காட்டுகின்றது. கற்பழிப்பவனின் கணநேரத் தேவையும், நுகர்பவனின் கணநேரத் தேவையும் பண்பியல் வேறுபாட்டை மட்டும் வேறுபடுத்துகின்றது. கற்பழிப்பவன் பலாத்காரமாகவும், நுகர்பவன் பணத்தாலும் அல்லது ஏகாதிபத்திய ஆணாதிக்க நுகர்வுக் கலாச்சாரத்தாலும் அடைவதைத் தவிர வேறு வேறுபாடு இல்லை. அந்தளவுக்கு ஆண் - பெண் உறவுகள் பண்பாட்டுக் கலாச்சார நுகர்வால் சிதைந்து செல்கின்றது. பெண்ணை வெறும் பண்டமாகப் பார்த்தல் இதன் முதல் வெளிப்பாடாகும். இது பரஸ்பரம் மனித உறவில் ஆண் - பெண் வேறுபாடு இன்றி இன்று வெளிப்படுகின்றது.


இதைச் சந்தைப் பொருளாகக் காண்பதன் மூலம் இதை ஒட்டிய சந்தை வடிவங்கள் தோற்றம் பெறுகின்றன. ரஷ்யாவில் ஊழுளுஆழுPழுடுஐவுயுN என்ற பாலுணர்வுப் பத்திரிக்கை 60,000 பிரதிகள் விற்றன. இது ஒரு வருடத்தின் பின் 3,50,000 ஆக அதிகரித்துள்ளது. இப்புத்தகத்தின் விலை 4.50 டொலராகும்.28 அமெரிக்காவில் ஒரு நிமிடத்துக்கு ஒரு டொலர் செலுத்தினால் பாலியல் வக்கிரத்தைப் பெண் தொலைபேசி மூலம் சொல்லக் கேட்கலாம். இதன் வருட வருமானம் இந்திய ரூபாயில் 12,000 கோடியாகும். இது ஐரோப்பா எங்கும் உள்ளதுடன், இதற்கான விளம்பரங்களை அனைத்து மக்கள் தொடர்பு சாதனங்களும் செய்கின்றன. இது போல் ஜப்பானில் பாடசாலைக்கு அருகில் இளம் ஆண் - பெண் பயன்படுத்திய உள்ளாடைகள் வயது ரீதியாகப் போட்டுக் கடை விரித்து விற்கும் அளவுக்கு ஜனநாயகம் கொடிகட்டிப் பறக்கின்றது. (1.10.1993).6


இது நவீனப் பாலியல் சந்தை வடிவமாகும். ரஷ்யாவில் முதலாளித்துவம் ஜனநாயகத்தை மீட்டபோது மக்கள் வறுமையில் நசுங்கத் தொடங்கினர். ஆனால் ஐந்து டொலர் கொடுத்து பாலியல் வக்கிரத்தை இரசிக்கும் கூட்டம் ஜனநாயகத்தைப் பெற்றுக் கொண்டது. வசதியான இந்த மேட்டுக்குடி இது போன்ற பத்திரிக்கைகளை வாங்கிப் பாலியல் வக்கிரத்தைப் போற்றுவதும், நடைமுறைப்படுத்துவதும் அதிகரித்த அதே நேரம், மக்களின் வறுமை பலமடங்காக அதிகரித்துச் செல்லுகின்றது. வறுமைப்பட்ட மக்களின் உழைப்பைச் சுரண்டும் இந்த மேட்டுக்குடி தமது ஆணாதிக்க வக்கிரத்துக்குச் செலவு செய்யும் பணம் ரஷ்யாவைப் பொறுத்த வரை மிகப்பெரிய தொகையாகும். அது ஏனோ தெரியாது எல்லா மார்க்சிய எதிரிகளும் இதற்காகக் குரல் கொடுத்து இந்த வக்கிரத்தை, ஜனநாயகத்தைக் கோருவது என்பது இந்த ஆணாதிக்க உலக வக்கிரங்களை ஆதரித்துதான் என்பதைத் தவிர வேறொன்றும் இல்லை.


இன்று ஜனநாயகம் சந்தையில் கட்டுப்பாடற்ற சுதந்திரத்தைத் தனிமனிதப் பாலியல் சுதந்திரத்தின் பின்னால் வக்கிரத்தைச் சந்தைப்படுத்துகின்றது. இது கோடி கோடியாகப் பணத்தைத் திரட்டுவதும், இவர்கள் கம்யூனிச ஆட்சிக்கு எதிராக ஜனநாயகத்தை மீட்க போராட நிதி கொடுப்பதும், கோட்பாடு கொடுப்பதும் இன்றைய வரலாறாக உள்ளது. இவைகள் பெண்ணின் சுதந்திரமான தொழிலாகின்றது. இதை பாதுகாக்கச் சட்டங்கள் ஒழுங்குபடுத்தப்படுகின்றன.


எதிர்காலத்தில் பெரிய நடிகைகள், நடிகர்கள், மொடலிஸ்;டுகள் கண் முன்னே போட்டுவிட்டுக் கொடுக்கும் உடுப்புகள் பல கோடி விலைக்கு ஏலம் போடுவார்கள். இதன் ஊடாகப் பண்பாட்டையும் கலாச்சாரத்தையும் கூவி விற்பார்கள். இன்று டயானா, மர்லின் மன்றோ, மடோனா, கென்னடி, மைக்கேல் ஜாக்சன் போன்றவர்கள் போட்ட உடுப்புகள் சந்தையில் கோடிகளை உருவாக்கின்றது. இதைப் போல் பாடசாலை மாணவிகளின் உடுப்புக்குச் சற்றுக் குறைவாகக் கிடைக்கின்றது. அவர்களின் குரலைத் தொலைபேசியில் கேட்டால் பணம். இதை எதிர்காலத்தில் கலை அம்சம் என்று நியாயப்படுத்த இன்றையக் கம்யூனிச எதிர்ப்புக் கோட்பாட்டாளர்கள், எலும்பை நக்கும் நாய்கள் போல் பின் நிற்கப் போவதில்லை. இதைக் கட்டுப்படுத்துவது, தடை செய்வது, தண்டனை வழங்குவது எல்லாம், ஜனநாயகத்துக்கு எதிரானதாக ஒப்பாரி வைக்க ஒரு நாய்க் கூட்டமும் இருக்கத்தான் செய்கிறது, செய்யும். இந்த வக்கிர ஆணாதிக்கச் சுரண்டல் அமைப்பை ஒழித்துக்கட்ட போராடாத வரை பெண்ணின் நிலையில் என்ன மாற்றங்கள் நிகழ்ந்தாலும் ஆணாதிக்க வடிவம் மாறாது. அது பாலியலில் புதிய உத்திகளை, சுரண்டலை நோக்கிப் பரிணாமிக்கும். பெண் தனது சுதந்திரத்தின் பின்னால் இதில் பயன்படும் பொருளாகி, நுகர்வுப் பண்டமாக மேலும் மேலும் சிதைந்து சீரழிவாள்.