book _1.jpgஎ மது தமிழ்ச் சமூகத்தில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் தலைமையிலான ஆக்கிரமிப்பைக் கூட கொச்சைத்தனமாகவே புரிந்து கொள்வது நிகழ்கின்றது. தமது குறுகிய அரசியல் நலன்களுக்குள் இதைப் பகுத்தாய்வதும், விளக்குவதும் நிகழ்கின்றது. வரைமுறையற்ற பாசிச வன்முறையில் மலடாகிப் போன எமது சமூக அறிவியல், எதிரியைக் கூட சொந்த விருப்பு வெறுப்புக்கு ஏற்ப கொச்சைத்தனமாகப் புரிந்து கொள்வது நிகழ்கின்றது.

 


ஒரு ஆக்கிரமிப்பாளனின் நோக்கம், அவனின் அரசியல் பொருளாதார இலக்குகள் பற்றி தெளிந்த ஒரு அறிவு இன்றி, நாம் அவனை ஒருநாளுமே எதிர்கொள்ள முடியாது. அதேபோல் எமது நோக்கமும், எமது அரசியல் பொருளாதார நலன்களும் ஆக்கிரமிப்பாளனுடன் எப்படி முரண்படுகின்றது என்ற தெளிவின்றி ஆக்கிரமிப்பாளனை வென்றுவிட முடியாது. அதாவது இலங்கையில் உழைத்து வாழும் ஒவ்வொரு மக்களினதும் பொருளாதார நலன்கள், அவர்களின் வாழ்வியல் நோக்கில் எப்படி ஆக்கிரமிப்பாளனின் நோக்கங்களோடு முரண்படுகின்றன என்ற தெளிவுடனான போராட்டம் தான், எதிரியை வெல்வதற்கான அடிப்படையாகும்.

 

இலங்கையில் ஏகாதிபத்தியங்கள் முதல் பல நாடுகள் தமது இராணுவங்களைக் குவித்து வருகின்றது. இந்தளவுக்குக் கடும் யுத்த பிரதேசமாக உள்ள ஈராக்கில் கூட நடக்கவில்லை. மீட்பு, மனிதாபிமான உதவி, மீள்நிர்மாணம் என்ற கோசங்களின் கீழ் நடக்கும் அன்னிய ஆக்கிரமிப்புகள், இலங்கை வரலாற்றில் மிகப் பெரிய ஒரு அன்னியத் தலையீடாகும். முரண்பட்ட ஏகாதிபத்தியங்கள் முதல், பிராந்திய நலனுக்காக ஏகாதிபத்தியத்துடன் முரண்பாடுகளைக் கொண்ட இந்தியா உள்ளிட்ட நாடுகள் வரை இலங்கையில் கால் பதித்துள்ளன. இந்த நிலையில் இலங்கையில் கடுமையாக முரண்பட்டு மோதும் மூன்று தேசிய இனங்களின் பெரும்பான்மையானோர், ஆக்கிரமிப்பாளர்களைப் பற்றி வெவ்வேறு விதமான நிலைப்பாட்டை எடுக்கின்றனர். ஆக்கிரமிப்பாளனை எதிர்கொண்டு போராட ஒன்றுபட்ட ஒருமித்த நிலைப்பாட்டைக் கொள்கை அளவில் கூட எடுக்காமையே, ஏகாதிபத்தியத் தலையீட்டின் மிகப் பிரதானமான மைய அச்சாக உள்ளது. இந்தக் கட்டுரையை நான் எழுதிக் கொண்டிருந்த வரை எந்த அரசியல் கட்சிகளும், இயக்கங்களும் இந்தத் தலையீட்டைகண்டித்து வாய் திறக்கவில்லை. வாயை உண்பதற்கு மட்டும் தான், திறந்து மூடிக் கொண்டிருந்தனர். அரசியல்வாதிகளும், இயக்கங்களும் இந்த ஆக்கிரமிப்பில் தமது பங்குக்கு ஏதாவது இலாபம் உண்டா என்ற நப்பாசையில் அங்குமிங்கும் வாலாட்டிக் கொண்டிருந்தன. இலாபங்கள் கிடைக்காது என்று திட்டவட்டமாகத் தெரிந்த பின்பே, இதை எதிர்த்துக் குலைப்பர். இந்த நிலையில்தான் புலிகளின் தலைமையும் காத்துக் கிடக்கின்றது. சுனாமி அனர்த்தத்தைப் (பேரழிவை) பயன்படுத்தி காசு பண்ணிப் பிழைக்கும் நரித்தனத்தை அம்பலம் செய்த எனது கட்டுரைதான், முதன்முதலாக ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பை நேரடியாக அம்பலம் செய்துள்ளது. மற்றபடி பத்திரிகைகள் முதல் அரசியல் பேசும் கட்சிகள் மற்றும் ஆயுதம் ஏந்திய புலி இயக்கம் வரை ஒரு நீண்ட பேச்சு மூச்சற்ற திடீர் மௌனவிரதத்தைக் கடைப்பிடிக்கின்றனர்.


சுனாமி அழிவைத் தொடர்ந்து ஏற்பட்ட சர்வதேசத் தலையீட்டின் பின்பாக, இன்று திடீர் நிகழ்ச்சிகள் அன்றாடச் செய்தியாகவும் அதிர்ச்சியூட்டுவனவாகவும் மாறிவருகின்றது. அன்னியப் படைகளின் வரவையிட்டு, எல்லா இனமக்களிடையேயும் பாரிய பிளவுகள் உருவாகி வருகின்றது. புதிய முரண்பாடுகள், ஐக்கியங்கள் உருவாகின்றன. மறுபக்கத்தில் புலியெதிர்ப்பு தமிழ்ப் பிரிவுகளிடையே ஒரு மகிழ்ச்சி தாண்டவமாடுகின்றது. இதில் புலிகளுடன் இணங்கிப்போக முடியாத பொதுமக்களிடம் கூட, ஒரு விதமான நக்கலை அடிப்படையாகக் கொண்ட நமட்டுச் சிரிப்பு ஊடாகவே தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்துகின்றனர். புலிகள் மத்தியில் ஒரு சரணடைவுப் போக்கு, தயக்கத்துடனான அங்கலாய்ப்பு, விரக்தியுடன் கூடிய காழ்ப்பு, கண்மூடித்தனமான கோபம் போன்ற பலவிதமான போக்குகள் வெளிப்படுகின்றன. சரணடைவு முதல் கண்மூடித்தனமான தனிநபர் பயங்கரவாதச் செயல்வரை கையாளும் ஒரு அதிர்வு ஏற்பட்டுள்ளது. ஜே.வி.பி. வாய்திறவாத மௌனத்தின் மூலம், பாராளுமன்றத்தில் அமெரிக்கா தலைமையில் சிங்கள இனவாதப் புரட்சி நடத்துவது பற்றி கற்பனையில் புளங்காகிதம் அடைகின்றனர். இக்கட்டுரை எழுதிமுடித்த நிலையில் ஜே.வி.பி. வெளியிட்ட அறிக்கை ஒன்றில் அன்னிய தலையீட்டை மனிதாபிமான உதவியாகப் பாராட்டியுள்ளனர். அதேநேரம் அவ்வறிக்கை ஆக்கிரமிப்பாளனின் முன் புலிகளைத் தனிமைப்படுத்துவதாகக் கூறிக் கொண்டு தமிழ் மக்கள் மீதான காழ்ப்பை வக்கிரமாகக் கொப்பளித்துள்ளனர். இலங்கையில் அதிதீவிரமான சிங்களப் பேரினவாதிகளாகத் தம்மை இனம்காட்டி வருகின்றனர். இவர்கள் அரசில் வீற்றிருக்கும்போதுதான், அமெரிக்க ஆக்கிரமிப்பு வெற்றிலை பாக்கு வைத்து வரவேற்கப்பட்டுள்ளது. இவர்கள் எதிர்க்கட்சியில் இருந்திருந்தால் என்ன அரசியல் செய்திருப்பார்கள். தீவிர அமெரிக்க எதிர்ப்பு கோசத்துடன் மக்களையே ஏமாற்றியிருப்பர். இந்த வகையில் சிங்களப் புரட்சிகரப் பிரிவுகளுக்கு, ஒரு ஆரோக்கியமான அரசியல் பாடத்தை, ஜே.வி.பி.யின் கைவருடித்தனமே சுயேட்சையாகக் கற்றுக் கொடுத்துள்ளது.


3.1. ஏகாதிபத்தியத் தலையீட்டைக் கூர்மையாகவே உள்ளிழுக்கும் நிவாரணம்


இந்நிலையில், சர்வதேச ரீதியான தலையீடுகள் நாள்தோறும் இலங்கையில் அதிகரித்து வரும் நிலையில், நிவாரணப் பொருட்களைப் பகிர்ந்து கொள்வது தொடர்பாக புலிகள் ஒருதலைப்பட்சமாக அரசின் மீது தொடர்ச்சியான குற்றச்சாட்டுகளை முன்வைத்தபடி உள்ளனர். நிவாரணம் பற்றி புலிகளின் குற்றச்சாட்டும், இதற்குப் பதிலளிக்க முன்வைக்கும் அரசின் உதவி பற்றிய அறிக்கையும், மலைக்கும் மடுவுக்கும் உள்ள சரிவால் சரிந்து கிடக்கின்றது. உண்மை நிலையைச் சுயமாகக் கண்டறிய முடியாத அளவுக்கு, செய்தித் துறைகள் முதுகெலும்பற்ற கைக்கூலிகளாகவும் எடுபிடி களாகவும் சீரழிந்துவிட்டன. புலிகளுடைய அரசின் மீதான தொடர் குற்றச்சாட்டும், அரசின் பதில்களும், நிலைமையை ஏகாதிபத்தியத்துக்குச் சார்பாக மாற்றி வருகின்றது. இந்த நிவாரணம், மீட்பு மற்றும் புனர்நிர்மாணத்தில் மூன்றாம் தரப்புகளின் நேரடித் தலையீடுகள் அன்றாடம் அதிகரிக்க இவை உதவுகின்றன. ஒருநாட்டில் உள்ள இனங்களுக்கு இடையிலான மோதல், மூன்றாம் தரப்புக்கு இலாபங்களைப் பெற்றுக் கொடுக்கின்றது. குறிப்பாக வடக்கு கிழக்கு இடையிலான (பிரபாகருணா) மோதலில், யார் அதிகம் லாபம் அடைந்தனர் என்பதையும், அடையவுள்ளனர் என்பதையும் சுயமாகச் சிந்திக்கும் ஒரு சராசரி மனிதன் இலகுவாகக் கண்டு கொள்ள முடியும். இதுவே சுனாமி புனர்நிர்மாணம் தொடர்பாக முன்வைக்கும் குற்றச்சாட்டுகளுக்கு நிகழும். நிலைமை வேகமாகவும் மோசமாகவும் மாறிவருகின்றது. புலிகள் மற்றும் அரசுகளின் கையில் இருந்து நிலைமை படிப்படியாக மூன்றாம் தரப்பிடம் மாறிச் செல்வதைத் துரிதமாக்குகின்றது.


புலிகளின் குற்றச்சாட்டுகள் அவர்களின் தனிப்பட்ட நலன்கள் சார்ந்து ஒருதலைப் பட்சமானதாகவே உள்ளது. சிங்கள இனவாத அரசு தமிழ் மக்களுக்கு நிவாரணமாக என்ன தந்துள்ளது என்பதை தமிழ் மக்களுக்கும் உலகுக்கும் சொல்வதை மூடிமறைத்து, சிங்கள அரசு சிங்கள மக்களுக்கு என்ன கொடுத்துள்ளது என்று, எந்த அடிப்படையான தரவுகளுமின்றியே குற்றம்சாட்டுகின்றனர். இங்கு பாதிக்கப்பட்ட தமிழ்சிங்கள மக்களுக்கு இடையில் திட்டமிட்டு இனவாத அடிப்படையில் பேதம் பாராட்டி நிவாரணத்தை வழங்கியிருப்பின், அதை ஆதாரமாக வைத்தே குற்றம் சாட்டவேண்டும். வெளிப்படையான உண்மைகளை அடிப்படையாகக் கொண்டு, இதைக் கையாளவேண்டும். உண்மையில் சிங்கள அரசு, எதையும் தமிழ் மக்களுக்குத் தரவில்லை என்று கூறுவதன் மூலம், புலிகள் எதைத்தான் சாதிக்க விரும்புகின்றனர். தமிழ் மக்களை ஏமாற்றி, அவர்களிடம் கறக்கக் கூடியதை கறக்கும் தந்திரத்தையே, புலிகள் தமிழ் மக்களுக்கு எதிராகச் செய்கின்றனர். கன்றைக் காட்டி பசுவிடம் பால் கறக்கும் வக்கிர உத்தியையே, புலிகள் தமிழ் மக்களிடம் செய்கின்றனர். மறுபக்கத்தில் புலிகள் சர்வதேசச் சமூகத்திடம் இப்படிக் கூறுவதன் மூலம், சர்வதேச நிவாரணங்களை நேரடியாகத் தம்மிடம் தரக்கோருகின்றனர். இதன் மூலம், நிவாரணத்தில் தமது தனிப்பட்ட லாபங்களை அடைய விரும்புகின்றனர். இதன் மூலம் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் நிவாரணத்தில் பெரும் பகுதியைச் சூறையாடவே விரும்புகின்றனர். உண்மையில் சர்வதேச நிவாரணங்கள் எப்போதும் அவர்கள் நேரடியான கண்காணிப்பில் செய்யப்படுபவைதான். இது உலகமயமாதலின் அடிப்படைக் கொள்கையும் கூட. ஏகாதிபத்தியங்களுக்கு மக்களையிட்டு உண்மையில் எந்தக் கருசனையும் இருப்பதில்லை. மாறாக நீண்டகால அரசியல் பொருளாதார நோக்கில் புனர்நிர்மாணத்தில், அதுவும் சொந்த மக்களை ஏமாற்றி திரட்டிய நிதியின் மூலம் இதில் ஈடுபட நிர்பந்திக்கின்றது. இது ஏகாதிபத்திய நலன்களை உள்ளடக்கியவை. கட்டுமானப் பணியில் இடைத்தரகராகப் புலிகள் அல்லது அரசு செயல்பட்டு ஏகாதிபத்தியத்திடம் நக்க முடியும் அவ்வளவே.


பாதிக்கப்பட்ட மக்களின் பெயரில் திரட்டப்பட்ட நிதி, எப்படி என்ன நோக்கில் கையாளப்படுகின்றது என்று பார்த்தால், அவை மக்களுக்கு எதிராகவே வினைத்திறனாற்றுகின்றது. இந்த வகையில் புலிகளும் சரி, ஏகாதிபத்தியத் தன்னார்வ நிறுவனங்களும் சரி, அரசியல் பொருளாதார நோக்கில் மக்களுக்கு எதிராகவே தமது மொத்த செயல்பாட்டையும் அடிப்படையாகக் கொண்டு செயல்படுகின்றனர். நிதியை உழைக்கும் பொதுமக்களிடம் இருந்து, மக்களின் அவலத்தைக் காட்டித் திரட்டுகின்றனர். இதன் மூலம் தம்மைத்தாம் மனித மீட்சிக்குப் பாடுபடுவதாகக் காட்டிக் கொண்டு, மக்களை மேலும் ஆழமான அடிமைத்தனத்துக்கு இட்டுச் செல்லுகின்றனர். நிதியை மக்களிடம் எடுத்துச் செல்வதில் ஏகாதிபத்தியத் தன்னார்வ நிறுவனங்களுக்கும், புலிகளுக்கும் இடையில் ஒரு அடிப்படை வேறுபாடு உண்டு. புலிகள் தாம் திரட்டிய நிதியில் பெரும் பகுதியை மக்களுக்குப் பயன்படுத்துவதில்லை. ஆனால் ஏகாதிபத்தியத் தன்னார்வ நிறுவனங்கள் தாம் திரட்டிய நிதியின் பெரும் பகுதியைப் பாதிக்கப்பட்ட மக்களிடம் எடுத்துச் செல்கின்றனர். ஆனால் அரசியல் பொருளாதார ரீதியாக இரண்டு வடிவங்களும் மக்களின் வாழ்வை மேலும் ஆழமாகச் சிதைக்கும் அரசியல் பொருளாதார உத்தியின் அடிப்படையிலேயே நிவாரணத்தைப் பயன்படுத்துகின்றனர்.


ஏகாதிபத்தியத் தன்னார்வ நிதிகள், நாட்டின் ஏற்றத்தாழ்வை எப்போதும் அகலப்படுத்துகின்றது. ஏகாதிபத்திய நிதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பகிர்ந்தளிக்க பொருட்களைக் கொள்வனவு செய்யும்போது, சிறு வர்த்தக சந்தையில் கொள்வனவுகளைச் செய்வதில்லை. மாறாகப் பெரும் வர்த்தகரிடம் பல கோடி பெறுமதியான பொருட்களை வாங்குகின்றனர். இதன் மூலம் கிடைக்கும் இலாபம் ஒரு குவியலாகத் தனிப்பட்ட ஒரு சிலருக்கே செல்கின்றது. நிவாரண நிதியின் கணிசமான பெரும்பகுதி சந்தையில் இலாபமாகச் செல்லும்போது, இவை வர்த்தக மற்றும் உற்பத்திச் சமூகத்திடம் பகிரப்படுவதில்லை. தனிப்பட்ட சில நபர்களிடமே குவிகின்றது. இதன் மூலம் தன்னார்வ ஏகாதிபத்திய நிறுவனங்கள் பெரிய பணக்கார கும்பலையே உருவாக்குகின்றது. இதன் மூலம் பரந்த ஏழைகளின் அடித்தளத்தையும் கூட உருவாக்குகின்றது. சிறு வர்த்தக மற்றும் உற்பத்தி அமைப்பையே தகர்த்து அழிக்கின்றது. இதைவிட இந்த உதவி, மொத்த அரசியல் அமைப்பையும், சமூகக் கூறுகளையும் கைகட்டி சேவகம் செய்யும் கூலிப்பட்டாளமாக்குகின்றது. (இது ஒரு விரிவான ஆழமான விளைவுகளை உள்ளடக்கிய பகுதி. இதை தனியே வேறு ஒரு சந்தர்ப்பத்தில் பார்ப்போம்).


3.2 அன்னிய ஆக்கிரமிப்பைக் கூட மூடிமறைக்கும் எமது சமூக வக்கிரம்


இந்த நிலையில், உண்மையில் இலங்கையில் ஒரு ஆக்கிரமிப்பு நிகழ்ந்துள்ளது என்பதைக் கூட சொல்ல முடியாத நிலையில், ஆக்கிரமிப்பாளன் இலங்கையின் அனைத்துத் தரப்பின் மீதும் அரசியல் பொருளாதார அதிகாரத்தைப் படிப்படியாக நிறுவி வருகின்றான். அமெரிக்கா மற்றும் பிரிட்டிஷ் படைகள் முதல் இந்தியா மற்றும் பாகிஸ்தான் படைகள் வரை இலங்கையில் தரையிறங்கியுள்ளது. மனித அழிவுகளையும், மனிதத் துயரங்களையும் பயன்படுத்திக் கொண்டு, ஒரு ஆக்கிரமிப்பை நடத்தியுள்ளனர். உண்மையில் இயற்கை அனர்த்தத்தில் வடுக்களை அகற்ற, அன்னியப் படைகள் இலங்கை வரவில்லை. இதேபோல் உதவிகளும், ஆயுதம் ஏந்திய இராணுவமும், உதவிப் பொருட்களும் ஒன்றுடன் ஒன்று கைகோர்த்து களத்தில் செயல்படுகின்றன. இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தில் தலையிட்டு முழுமையாக தமது நலனுக்கு சாதகமாக மாற்றவும், ஏகாதிபத்தியத்துக்கு இடையிலான உலகைப் பங்கிடும் ஒரு அம்சமாகவே இந்தப் படையிறக்கம் நடைபெற்றுள்ளது. அதேநேரம் தென்னாசியப் பிராந்தியம் மீதான அரசியல் பொருளாதார ஆதிக்கத்தை ஏற்படுத்தும், ஏகாதிபத்திய அதிகார வெறியும் உள்ளடங்கியது.


உலகளவில் பிரதானமாகப் பொருளாதார ரீதியாக ஆதிக்கம் பெற்ற ஏகாதிபத்தியங்களான அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் மற்றும் ஜப்பானுக்கு இடையில் நடைபெறும், இழுபறியான ஒரு பொருளாதார யுத்தத்தில், இலங்கையைப் பங்கிடுவது நேரடியான ஆக்கிரமிப்பூடாகத் தொடங்கிவிட்டது. இதற்கு இயற்கை அனர்த்தத்தைத் திட்டமிட்டே பயன்படுத்திக் கொண்டபோதும், புலிகள் பற்றிய ஏகாதிபத்தியப் பொது நிலைப்பாட்டையும் இது பயன்படுத்திக் கொண்டது. புலிகளைப் பயங்கரவாத இயக்கமாக அனைத்து ஏகாதிபத்தியங்களும் கொள்கை அளவில் வரையறுத்துப் பிரச்சாரம் செய்வதுடன், அமெரிக்கா மற்றும் பிரிட்டன் ஆகியவை தமது சொந்த நாட்டில் தடைசெய்து, சர்வதேசப் பயங்கரவாதப் பட்டியலிலும் இணைத்துள்ளது. இதனடிப்படையில் புலிகளுக்கு எதிரான பிரச்சாரத்தைத் தொடர்ச்சியாகவே கட்டமைத்து வந்தது. வருகின்றது. மற்றைய ஏகாதிபத்தியங்களிலும் புலிகள் இயக்கம் தடைசெய்யப்பட்டுள்ளதுடன், புலிகள் என்ற பெயர் பயன்படுத்த முடியாத நிலையே உள்ளது. ஆனால் புலிகளை ஒரு பயங்கரவாத இயக்கமாகக் கருதும் அதேநேரம், ஒரு மிதவாதப் போக்கையே அணுகுமுறையில் கையாளுகின்றது. இவை எல்லாம் ஏகாதிபத்திய முரண்பாடுகளுக்கு உட்பட்டது. உலகளவில் இந்த ஏகாதிபத்தியங்கள் கையாளும் பொதுவான அளவுகோல்களை அடிப்படையாகக் கொண்டே காணப்படுகின்றது.


இந்த உள்ளடக்கத்தைச் சார்ந்தே இலங்கையில் படையிறக்கம் நிகழ்ந்துள்ளது. இந்தப் படை இறக்கம் என்பது, பொதுவாகக் கூறும் அடிப்படையான மனிதாபிமானமான செயல்பாட்டுக்கு என்ற பொதுக் காரணத்தை விடவும், குறிப்பாகப் புலிகளுக்கு எதிரானதா கவே நிகழ்ந்துள்ளது. மிக விரைவில் புலிகள் பாணியில், ஏகாதிபத்தியங்கள் புலிகளைக் குற்றம்சாட்டி ஒடுக்கும் சர்வதேச பிரச்சாரமாக மாறும் நிலைமை தோன்றும் அபாயம் காணப்படுகின்றது. புலிகளைத் தனிமைப்படுத்தும் அமெரிக்க உத்தி, தவிர்க்க முடியாது ஐரோப்பா உள்ளிட்ட ஏகாதிபத்தியம் எங்கும் ஒரேவிதமாக மாறும் நிலைமை விரைவில் ஏற்படும் அபாயம் பொதுவாகக் காணப்படுகின்றது.


இந்த வகையில் புலிகளுக்கு எதிராக, ஒரு சர்வதேச ரீதியாகப் புலிகளைத் தனிமைப்படுத்தும் தீவிர முயற்சிகள் குறிப்பாகப் பின்வரும் விடையங்களுடாகவே அமையும் வாய்ப்புகள் அதிகமாகக் காணப்படுகின்றது.


1. இயற்கை அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான சர்வதேச உதவிகள் நேரடியாகச் செல்வதைப் புலிகள் தடுக்கின்றனர் என்ற குற்றச்சாட்டுகள் வைக்கப்படும். அவர்கள் அவற்றைக் கைப்பற்றி மக்களுக்குச் செல்வதைத் தடுத்து, தமக்காகக் கொள்ளையடிப்பதாகக் காட்ட முனைவர்.


2. பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் அனைத்து வழிகளும் சுதந்திரமற்றதாகவும், ஜனநாயகப் பூர்வமற்றதாகவும் இருப்பதாகக் குற்றம் சாட்டுவர். இதற்குப் புலிகள் தடையாக இருப்பதாகக் குற்றம் சாட்டிப் பிரச்சாரம் செய்வர். இலங்கையில் எங்கேயும் சென்று உதவ தடைகள் இல்லாது இருக்கும் போது, புலிகள் பகுதி அதற்குத் தடையாக இருப்பதாகக் கூறுவர். தமது பொதுவான மனிதாபிமான அணுகு முறையைச் சுட்டிக் காட்டி தம்மை நடுநிலையாளராகவே உலகுக்கு எடுத்துக் காட்டுவார்கள். இப்படி புலிகளின் அறிக்கைகள் கூறுவதையே அவர்களுக்கு எதிரான பிரச்சாரத்துக்கே பயன்படுத்துவர்.


3. மக்களுக்கான சர்வதேச நிவாரணங்களைப் புலிகள் கைப்பற்றி தமது தனிப்பட்ட தேவைக்கு எடுத்துக் கொண்டு, பாதிக்கப்பட்ட மக்களின் முதுகில் குத்துகின்றனர் என்று குற்றம் சாட்டுவார்கள்.


4. பாதிக்கப்பட்ட மக்களின் சுதந்திரமான வாழ்வுக்குத் தடையாகப் புலிகள் இருப்பதாகவும், அவர்களின் துயரத்தை அதிகரிக்க வைப்பதாகவும் குற்றம் சாட்டுவார்கள். சர்வதேச நிவாரணங்கள் அந்த மக்களுக்குக் கிடைப்பதைப் புலிகள் தாமதமடைய செய்வதாகக் குற்றம் சாட்டுவார்கள்.


5. புலிகள் சர்வதேச ரீதியாகத் திரட்டிய பெரும் நிதியைப் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கவில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைப்பர். இதனடிப்படையில் சர்வதேச ரீதியாகச் சில நடவடிக்கைகள் அந்தந்த நாடுகளில் ஏற்படலாம். இதனடிப்படையில் இலங்கையிலும் தமது இராணுவ நடவடிக்கைகளை நியாயப்படுத்தும் அடிப்படைகளை உருவாக்குவார்கள்.


6. பாதிக்கப்பட்ட மக்களின் பெயரில் மேற்கில் தமிழரைக் கடந்தும் சேகரித்த நிதியைக் கொண்டு, ஆயுதங்களை வாங்கிக் குவிப்பதாகக் குற்றச்சாட்டை முன்வைத்து ஒரு எதிர்நடவடிக்கைகள் தொடங்கப்படலாம். இதுபோல் இராணுவ நோக்கில் நிவாரணப் பொருட்களை அபகரித்து பதுக்குவதாகக் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படலாம்.


7. இயற்கையால் மனித இனமே சிதைந்துள்ள நிலையில், புலிகள் யுத்தத் தயாரிப்பில் ஈடுபடுவதாகக் கூறி, சமாதானத்துக்கு எதிராக இருப்பதாகக் கூறி, ஒரு எதிர் நடவடிக்கைகள் தொடங்கப்படலாம். இந்த யுத்தம் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வை மேலும் ஆழமாகச் சீரழிக்கும் என்று கூறி, யுத்தத்தைத் தடுக்க என்று கூறி எதிர்நடவடிக்கையில் ஈடுபடலாம்.


8. சுனாமியால் பாதிக்கப்பட்ட குழந்தைகளையும், அனாதைக் குழந்தைகளையும் கடத்திச் செல்வதாகக் குற்றம்சாட்டி ஏகாதிபத்தியத் தலையீடுகள் அதிகரிக்கும்.


9. நிவாரணம் என்ற பெயரில் அதற்குள் ஆயுதங்களைக் கடத்திச் செல்வதாகக் குற்றம் சாட்டுவார்கள். இதன் மூலம் தலையீட்டைக் குறிப்பாக்குவார்கள்.


இவைகளையும், இதனடிப்படையில் உள்ளடங்கக் கூடிய ஒரு பிரச்சாரத்தைப் புலிகளுக்கு எதிராகக் கட்டமைத்து, எதிர்நடவடிக்கை மூலம் புலிகளைத் தனிமைப்படுத்தி அழிக்க அமெரிக்கா தலைமையிலான ஏகாதிபத்தியம் விரைவில் முயலலாம். இவை அனைத்தும் மக்களின் நலன்களில் இருந்து, ஏகாதிபத்தியம் ஒரு நாளும் முன்வைக்கப் போவதில்லை. மாறாக அவர்களின் சொந்த ஏகாதிபத்திய நலன்களில் இருந்தே, இவற்றைச் செய்யும். இந்த உள்ளடக்கத்தில் ஏகாதிபத்தியங்கள் பற்பல காரணங்களைக் கூறி புலிகளை ஒடுக்கி அழிப்பதை, நாம் என்றும் எதிர்ப்போம். ஏனெனில் இவை அனைத்தும் மக்களின் நலனுக்கும் எதிராகவே கட்டமைக்கப்படும். புலிகள் பற்றிய பிரச்சினை இங்கு முதன்மையானவையல்ல. புலிகளைப் பயன்படுத்தி மக்கள் மேல் புதிய அடிமை விலங்குகளையே, தமது பாசிசப் பொம்மைகளைக் கொண்டு ஏகாதிபத்தியம் உருவாக்கும். இதை நாம் என்றும் அனுமதிக்க முடியாது.


மறுபக்கத்தில் அமெரிக்கா பாணி பிரச்சாரத்தில், புலிகள் எம்மைத் துரோகிகளாகவே சித்தரிக்கின்றனர். ஆனால் ஏகாதிபத்தியங்களை எதிர்த்துப் போராடுவதில், உலகளவில் மக்களுக்காகப் போராடிக் கொண்டிருக்கும் கம்யூனிஸ்டுகள் மட்டும்தான் உறுதியானவர்கள் என்ற வரலாற்றப் பாடத்தை மீண்டும் சுட்டிக் காட்டுவது அவசியமாகின்றது. இங்கு உலகளவில் பாராளுமன்ற போலி கம்யூனிசக் கட்சிகளின், வக்கற்ற முதலாளித்துவச் செயல்களைக் கொண்டுள்ளோரைக் குறித்து கூறவில்லை. புலிகள் மக்களின் நலன்களில் இருந்து விலகியபடி மக்களை ஒடுக்கும் அமெரிக்கா பாணி யூத அரசியலைக் கைவிட்டு, மக்களுக்காக அவர்களின் வாழ்வுடன் பொருந்தி நிற்காத வரை, மேல் சொன்ன குற்றச்சாட்டுகள் ஏகாதிபத்திய ஒடுக்குமுறையையும் தாண்டி உண்மையாகிவிடும்.


புலிகள் மக்களின் பெயரால் செய்வன அனைத்தும் தனிப்பட்ட பிரபாகரனின் நலன்கள் சார்ந்தும் அவரைச் சுற்றியுள்ள குழுநலன்கள் சார்ந்ததே. சொந்த மக்களுக்கு எதிராகச் சதிகளையும் பொய்களையும் வக்கிரப்படுத்திவிடும் புலிகள், உண்மைகளைக் குழிதோண்டி புதைத்து விடுகின்றனர். மனிதப் பிணங்கள் மேல்தான், தமது சிம்மாசனத்தை நிறுவியுள்ளனர். ஒரு அச்ச உணர்வை அடிப்படையாகக் கொண்ட, ஒரு மிரட்டல் அரசியலை ஆணையில் வைத்து தமது அரசியல் அதிகாரத்தைத் தேசியத்தின் பெயரில் தக்கவைக்கின்றனர். புலிகளைப் பயன்படுத்தி பொறுக்கித் தின்னும் கும்பல் ஒன்றால் சூழப்பட்ட நிலையில், அவர்களின் துதிபாடலுக்கு ஏற்ப அவற்றையே தமது மகுடமாகவே சூட்டிக் கொண்டுள்ளனர். இவற்றை எல்லாம் ஏகாதிபத்தியம் பயன்படுத்தி புலிகளை ஒடுக்கும் போது, புலிகளுக்காகக் குரல் கொடுக்க சொந்த மக்களே தயாராக இருக்கமாட்டார்கள். உலக மக்கள் கூட உதவ முன்வரமாட்டார்கள்.


3.3 ஏகாதிபத்தியத் தலையீட்டினை எதிர்கொள்ள முடியாத பிதற்றல்கள்


உள்ளடக்கத்தில் புலிகள் மக்களின் நலன்களில் இருந்து விலகியே இருக்கின்றனர். இவற்றையே அமெரிக்கா தலைமையிலான ஏகாதிபத்தியங்கள் இலகுவாகப் பயன்படுத்திக் கொள்ளும் வாய்ப்புகளைப் புலிகளே வழங்கிவிடுகின்றனர். இந்த நிலையில் 03.01.2005 வெக்ரோன் தொலைக்காட்சி "அமெரிக்கா தலையீடு உள்நோக்கம் கொண்டதா?' என்ற தலைப்பில் கருத்துக்களைக் கேட்கும் வாசகர் நிகழ்ச்சி ஒன்றை நடத்தினர். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் ஒவ்வொரு செக்கனுக்கும், இதில் கலந்து கொள்ள காத்திருக்கும் ஒவ்வொரு செக்கனுக்கும் தமிழ் மக்களிடமிருந்து பணம் அறவிடப்பட்டது. சுனாமி அனர்த்தத் துயரத்தைப் பயன்படுத்தி, பல லட்சம் பணத்தைத் தமிழ் மக்களிடம் இருந்து தொலைக்காட்சிகள் பலவழிகளில் இப்படிப் பணமாக்கிக் கொண்டிருந்தன. கருத்து கேட்கும் நிகழ்ச்சியை நடத்திய செல்வமயூரன் அரசியல் ரீதியில் பகுத்தறிவையே மறக்கும் ஒரு ரப்பர் பினாமி. இவரின் வக்கிரம், இந்தக் கருத்துக் களத்தை ஒருதலைப் பட்சமானதாக மாற்றும் வக்கிரம் முனைப்பாகச் செயலாற்றிக் கொண்டிருந்தது. அதேநேரம் அமெரிக்கா பற்றிய புலிசார்பு கருத்துகள் வெளிவந்தன. இந்த நிகழ்ச்சி 04.01.2005 தொடரும் என்று அறிவித்த போதும் நடக்கவில்லை. அமெரிக்கா நலன்களுடன் இணங்கி சரணடைந்துவிடும் துடுப்புச் சீட்டைக் கையில் வைத்துள்ளவர்கள்தான், இந்தக் கருத்து கேட்கும் நிகழ்ச்சியை தடுத்துவிட்டனர் என்பதையே ஊகிக்க முடிகின்றது. இந்தக் கருத்துக்களம் பலதளத்தில், பலவிதமான அபிப்பிராயங்களை உருவாக்கிக் கொண்டிருந்தது. பலரும் இதுபற்றி சிலாகித்து கதைப்பதைக் காண முடிந்தது.


இந்தக் கருத்துக்களத்தில் புலி விசுவாசம் உள்ளவர்களின் குரல்கள் பல பதிவாகின. அமெரிக்காவை எதிர்த்துப் போராடுவோம் என்று கூறும் கருத்துகளில் வெளிப்படுவது, அரசியலற்ற வெற்றுத்தனமும், உணர்ச்சிவசப்பட்ட கண்மூடித்தனமான தனிமனித வன்முறை வெறித்தனமுமே. இவற்றை நாம் விமர்சிக்க வேண்டியவராக உள்ளோம். ஏனெனில் பானையில் சோறாவதற்கு இவர்களிடம் அரிசிகள் அல்ல, வெறும் கற்களே உள்ளன. வெறும் கற்களைக் கொண்டே சோறாக்க நினைக்கின்றனர். இவற்றை விரிவாகப் பார்ப்போம்.


1. அமெரிக்காவை எதிர்த்து தலைவர் பிரபாகரனின் வழிகாட்டலில் நாம் போராடுவோம். இதில் எங்களுக்கு எந்தவிதமான அச்சமுமில்லை என்று கூறினர். இக்கூற்றை நாம் புலம்பெயர்ந்த நாட்டில், புலிகளுடன் இணையாது தப்பிவந்தவர்கள் ஊடாகவே கேட்கின்றோம். இங்கு தனிமனித தலைமை வழிபாட்டு உள்ளடக்கத்தைத் தாண்டி, அரசியல் அடிப்படையற்ற விசுவாசமே எஞ்சிக் கிடக்கின்றது. தனிமனித விசுவாசம், தலைமை வழிபாடு மட்டும் அமெரிக்காவை எதிர்த்துப் போராட போதுமானதா? இவையிரண்டும் இருந்தால் அமெரிக்கா தலைமையிலான ஏகாதிபத்தியம் தோற்றுவிடுமா? பிரபாகரன் என்ன சக்தி வாய்ந்த கடவுளா?


உண்மையில் இந்த நம்பிக்கைகள், விசுவாசங்கள் கண்மூடித்தனமானவை. அமெரிக்காவை எதிர்த்துப் போராடுவது என்பது, மக்களின் அடிப்படையான பொருளாதார அரசியல் நலன்களுடன் பின்னிப் பிணைந்ததாக இருக்க வேண்டும். இதைவிடுத்து தலைவரின் பெயரால் கருத்துரைத்து செயல்படுபவர்கள், தலைவர் துரோகம் இழைத்தால் இவர்களும் அந்தத் துரோகத்துக்கு விசுவாசமாகவே வக்காலத்து வாங்குவார்கள். தலைவர் இயற்கையாக இறந்தாலோ அல்லது விபத்தில் இறந்தாலோ அல்லது தலைவர் உள்இயக்க அதிகார மோதலில் கைது செய்யப்பட்டாலோ அல்லது படுகொலை செய்யப்பட்டாலோ என்ன நடக்கும்? தலைவரின் பெயரால் அமெரிக்காவை எதிர்த்துப் போராடுவதாகக் கூறும் இவர்களின் நிலை தான் என்ன? எல்லாவிதமான நம்பிக்கையீனத்தையும், கையாலாகாத்தனத்தையும் முதலில் இவர்கள்தான் வெளியிடுவார்கள். துரோகத்தை இவர்கள்தான் முந்தியடித்துக் கொண்டு வரவேற்பார்கள்.


2. தலைவருக்கு எல்லாம் தெரியும். சகலதும் அறிவார். அவர் சொல்வதின் படி நாம் நடப்போம். இந்தக் கூற்றுகள் மேல் கூறியது போன்று அரசியலற்ற ஒன்றாகவும், எதற்கும் சோரம் போகும் எல்லை வரை இது விரிந்து காணப்படுகின்றது. தலைவர் துரோகம் இழைத்தால் தாமும் அந்த வழிக்கு விசுவாசமாக இருப்போம் என்ற அடிமைக் கோட்பாடு காணப்படுகின்றது. அரசியல் சார்ந்து தலைவரைப் பின்பற்றும் போக்கு முற்றாகவே மறுக்கப்படுகின்றது. தங்களைத் தாங்களே வெறும் மந்தைகள் என்கின்றனர். மக்களிடம் இருந்து அன்னியமாகி, போராட்டத்தைப் பயன்படுத்தி நக்கிப் பிழைக்கும் கும்பல்களின் வாலாட்டும் குலைப்புத்தான் இவை.


சுனாமி நிகழ்ந்த பின்பு பிணங்களைக் காட்டி, ஐயோ மக்கள் அதிலும் ஐய்யய்யோ தமிழன் என்று புலம்பி நிதி சேகரித்தனர். இதில் ஈடுபட்ட பலர் புலம்பெயர் நாடுகளில் சாதிபார்த்த சமூகங்களையே சுரண்டுபவர்களும், வட்டிக்குப் பணம் கொடுத்து சுரண்டுபவர்களும் என பலவிதமான சமூக விரோதிகள்தான், நிதிசேகரிப்பின் மைய அச்சாகச் செயல்பட்டனர். சொந்த மகனுக்கே வட்டிக்குப் பணம் கொடுப்பவர்களும், பக்கத்து வீட்டõனின் சாதி என்ன என்று தோண்டி அவர்களை இழிவுபடுத்துபவர்களும்தான், ஐயோ மக்கள் என்று கூறி பணம் சேர்த்தனர். பணம் சேர்க்கும் மட்டும்தான் மனித பிணங்களை (இங்கு மனிதத் துயரங்களை அல்ல) காட்சிப் படுத்தியவர்கள், சேர்த்த பணம் அந்த மக்களுக்கு எப்படி சென்றது என்ற காட்சி மட்டும் எந்தத் தொலைக்காட்சியும் காட்டவில்லை. பி.பி.சி. தமிழ்ச் சேவையில் வெளிவந்த உண்மையான சில மனித உணர்வுகள், உண்மையில் அங்கே என்ன நடக்கின்றது என்பதை அப்பட்டமாகவே புட்டு வைக்கின்றது.


3. இந்தியா என்ற பிராந்திய விஸ்தரிப்புவாத வல்லரசை நாம் தோற்கடித்தோம். அதாவது உலகிலேயே நான்காவது பெரிய இராணுவத்தைத் தோற்கடித்தோம். அதேபோல் அமெரிக்காவையும் தோற்கடிப்போம். இந்தக் கூற்றில் ஒரு மிகை நம்பிக்கை வெளிப்படுகின்றது. உண்மையில் இந்திய ஆக்கிரமிப்பு இராணுவம், இலங்கையை விட்டு வெளியேறியதைப் புரிந்து கொள்ளவில்லை. இங்கும் புனைவு கற்பனைத் திறனுக்கு ஏற்ற விளக்கமே, தமிழ்த் தேசியமாகக் காட்டப்பட்டது. வெறுமனே புலிகளின் இராணுவத் தாக்குதல்களால்தான், இந்திய இராணுவம் தப்பியோடியதாக ஒற்றைப் பரிணாமத்தில் புரிந்து கொண்டே விசுவாசமாகக் கருத்துரைக்கின்றனர். உண்மையில் புலிகளின் இராணுவத் தாக்குதலை எதிர்கொள்ள முடியாத அச்சத்தில், இந்தியா வெளியேறவில்லை. மாறாக பல காரணங்கள் இதற்கு வெளியில் இருந்தன. புலிகளை ஒழித்துக் கட்டும் இந்தியாவின் இராணுவ நடவடிக்கையின் போது, புலிகளுடைய தலைமையின் பெரும்பகுதி, இந்தியாவின் சில குளறுபடிகளால் தான் தப்பிப் பிழைத்தது. இதில் பிரபாகரன் முதல் இன்றைய தலைவர்களான பொட்டம்மான், சூசை, .... எனப் பலரும் அடங்குவர். இவற்றைப் புலிகளின் நூலான சுதந்திரப் பறவைகள் மற்றும் முறிந்தபனை என்ற நூல் தெளிவாகவே எடுத்துக் காட்டுகின்றது. தென் இலங்கையில் ஜே.வி.பி.யால் ஏற்பட்ட கிளர்ச்சி, பிரேமதாசாவின் இந்தியாவை வெளியேற்ற விரும்பிய நிலைப்பாடு முதல் இந்தியாவில் உள்நாட்டு நிலைமைகள் தான் இந்தியா வெளியேற முக்கிய காரணம். மற்றபடி இந்தியா இலங்கையில் நீண்டகாலமாகத் தங்கிநிற்க விரும்பியது. இதனால் புலிகளின் தலைமையை முற்றாக அழிப்பதைத் தவிர்த்து, யுத்தத்தை நீடித்து வைத்திருக்க விரும்பி புலிகளின் தலைமை தப்பிக்க வைக்கும் முயற்சியில் "ரா' (கீஅஙி) — (இந்திய உளவு நிறுவனம்) ஈடுபட்டது. குறிப்பாக இந்திய இராணுவம் மற்றும் உளவு அமைப்பான "ரா'வுக்கு (கீஅஙி) இடையில் முரண்பாடுகள் பலதரம் வெளிப்பட்டன. சில இடங்களில் "ரா'வின் உத்தரவுக்கு ஏற்ப, சுற்றிவளைப்புகள் நிறுத்தப்பட்டு பின்வாங்கப்பட்ட நிகழ்வுகளும் அம்பலமாகியுள்ளது. புலிகள் மேலான அழித்தொழிப்பை மட்டுப்படுத்தியிருந்த இடைவெளியில்தான், இன்றைய புலித் தலைமை தப்பிப் பிழைத்தது. இதைவிடுத்து இந்தியா என்ற பிராந்திய ஆக்கிரமிப்பாளன், புலிகளின் சுத்த இராணுவ நடவடிக்கையால் தோற்று ஓடியதாகக் கூறுவதும், அதே பாணியில் அமெரிக்காவைத் தோற்கடிப்போம் என்று கூறுவதும் ஒரு கற்பனை சார்ந்த தனிமனித வெளிப்பாடுகளே.


இந்த நிலையில் ஐரோப்பாவில் இயங்கும், புலிகளின் நேரடிப் பினாமி வானொளியான ஐ.பி.சி.யில் சிவராம் என்ற தராக்கி ஒரு பேட்டியை வழங்கியிருந்தார். இவரைப் புலிகளும், புலிப் பினாமிகளும் "ஆய்வாளர்' என்ற கௌரவப்பட்டத்தின் ஊடாகவே வளைத்துப் பிடித்தõர்கள். இவருடன் சேர்ந்து ஒன்றாகவே சோரம் போன ஜெயபாலன் என்ற கவிஞரைப் புலிகள், விஸ்கி போத்தலை (ஞணிttடூஞு) உடைத்துக் கொடுத்தே தமது பினாமியாக்கினார்கள். இந்த பினாமியக் கலையைச் செய்தவர் யாரென்றால் புலிகளில் இருந்து பிரிந்துசென்ற கருணா என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த ஜெயபாலன் போல் சிவராமை "ஆய்வாளர்' என்று கூறி, உள்ளம் குளிரவைத்து புலிகளுக்காக எழுத வைத்துள்ளார். இவர் புலி ஆய்வுப் பேட்டியில் இந்தியா புலிகளுக்கு ஆயுதங்களை வழங்கும் என்றார். அமெரிக்காவுடனான முரண்பாட்டில், புலிகளை இந்தியா பலப்படுத்தும் என்றார். மற்றொரு ஆய்வில் ஈராக்கில் ஒரு வருடத்தில் கொல்லப்பட்ட அமெரிக்க இராணுவ வீரர்களின் எண்ணிக்கையை, புலிகள் ஒரே மாதத்தில் கொல்வார்கள் என்றார். இப்படி பலவற்றை ஆய்வாகப் புலம்பினார்.


புல்லரிக்க புலம்பெயர் பினாமிகள் ஆகா யுகப்புரட்சி என்று கொக்கரித்தனர். தமிழ் மக்களின் அரசியல் வங்குரோத்தை சிவராம் கச்சிதமாகப் பிடித்துக் கொண்டு தன்னைத் தானே ஆய்வாளராகக் காட்டிக் கொண்டார். எதார்த்தத்தை மறுத்து வக்கிரமாகப் புனைந்து காட்டும் சிவராம் என்ற தராக்கி முன்னாள் புளொட்டின் முக்கிய உறுப்பினர். புளொட் இயக்கம் 500க்கும் மேற்பட்ட உட்படுகொலைகளைச் செய்தபோது, அதற்கு அரசியல் முலாம் பூசி கோட்பாடுகளை வகுத்தளித்தவர்தான் இந்த சிவராம். பல உட்படுகொலைகளில் நேரடியாகவும், மறைமுகமாகவும் சம்பந்தப்பட்டவர். இதை மூடிமறைக்கும் பாசிச அரசியலையே தனது ஆய்வாகவும் அரசியலாகவும் அன்று செய்தவர். இன்றும் செய்கின்றார். இவரின் நேரடியான படுகொலைச் சம்பவம் ஒன்றை, சமரில் முன்பே எழுதியிருந்தேன். இதன் பின்பாக பாரிசில் நடந்த இலக்கியச் சந்திப்பு ஒன்றில், இவரும் இவரின் மற்றொரு நண்பருமான ரி.பி.சி. ராம்ராஜ் என்பவரையும் ஒன்றாகச் சந்திக்க வேண்டியநிலை ஏற்பட்டது. ரி.பி.சி. ராம்ராஜ் இந்தியக் கைக்கூலியாக இருந்ததை நான் கூறியபோது, நான் யார் என்பதை யாரிடமோ கேட்டுத் தெரிந்து கொண்டனர். இதன்போது இருவரும், என்னுடன் கதைக்க விரும்பி, அந்த மண்டபத்தின் முன்பாக என்னுடன் கதைத்தனர். அதன் போது சிவராம் அந்தக் கொலைக்கும் தனக்கும் தொடர்பில்லை என்றார். இப்படி இருவரும் சேர்ந்து கதைத்துக் கொண்டபோது, அவர்கள் என்னுடன் நிற்கும் காட்சியைப் படமும் எடுத்துக் கொண்டனர். இந்தப் படத்தை அவர்கள் எடுத்த போது, அது அரசியல் உள்நோக்கம் கொண்டது. எப்போதும் சிவராம் அரசியல் உள்நோக்கம் கொண்டே செயல்பட்டவன், செயல்படுபவன். புளொட்டில் இதே சிவராம் மார்க்சிய கல்வி என்ற பெயரில் ஆண்கள் மற்றும் பெண்களை ஒன்றாக்கி பாசறை என்ற பெயரில் நடத்தியவன். இதன் போது ஆண் பெண் உறவில் எந்தக் கட்டுப்பாட்டையும் கம்யூனிசச் சமூகம் விதிக்காது என்று கூறி, இன்றே கம்யூனிச வாழ்க்கை நீங்கள் தொடங்க முடியும் எனறு கூறி தனது காமக்களியாட்டத்தைத் தொடங்கி வைத்தவன். ஆண்களின் ஆணாதிக்கப் பாலியல் தேவைக்கு ஏற்ப, பெண்களைப் பயன்படுத்திக் கொண்டவர்களின் கும்பலுடன் இறுதிவரை கைகோர்த்து இருந்தவன். இது போன்ற மனித விரோத சுயநலப் போக்குகளை இயக்கத்தின் அரசியல் நடைமுறையாக்கிய போது, அதை எதிர்த்துப் போராடியவர்களைக் கொலை செய்யவும், தூற்றவும் எப்போதும் உமாமகேஸ்வரன் கும்பலுக்குத் துணை நின்றவன்தான் இவன்.


என்னிடம், தனக்கும் அந்தக் கொலைக்கும் எந்தத் தொடர்புமில்லை என்று மறுத்த சிவராம், இன்று புலிப்பினாமியாக நக்கித் திரிகின்றான். புலிகளின் மனித விரோத நடவடிக்கை உட்பட, மனிதப் படுகொலைகளை மூடிமறைத்தே அரசியல் பிழைப்பு நடத்துகின்றான். இதைத்தான் அப்போது புளொட் இயக்கத்திலும் நடத்தினான். நேரடி மற்றும் மறைமுகப் படுகொலைகளில் இவன் ஈடுபட்டவன்தான். குறிப்பாக உறுதிப்படுத்தப்படாத தகவல் ஒன்றின்படி, ஆய்வு என்ற பெயரில் சிவத்தம்பியும், சிவராமும் அமெரிக்காவின் சம்பளப்பட்டியலில் சிறிது காலம் இருந்ததாகத் தகவல் ஒன்று உண்டு. இந்த இடத்தில் சிவராமுக்கு, எதிர்மறையில் புலி எதிர்ப்பு அரசியலில் ஈடுபடும் ராம்ராஜ் தனது ரி.பி.சி.யில், பரந்தன் ராஜன் என்பவர். இந்தியா கைக்கூலியாகச் செயல்பட்டதையும், இன்று செயல்படுவதையும் சொல்வதில்லை. இதில் தனது முந்திய பிந்திய வரலாற்றைச் சொல்வதில்லை. சுயவிமர்சனம் செய்வதில்லை. புலிகளின் மனித விரோதத்தை மட்டும் சொல்லி அரசியல் செய்கின்றனர்.


இனி, சிவராம் வானொளியில் சொன்ன விடயத்துக்கு வருவோம். ஈராக் யுத்தத்தில் ஒரு வருடத்தில் கொல்லப்பட்ட அமெரிக்கா இராணுவ வீரர்களின் எண்ணிக்கையை, புலிகள் ஒரே மாதத்தில் கொல்வார்கள் என்றார். அமெரிக்காவை எதிர்த்து போராட உள்ளவர்கள் இவர்கள் அல்ல. புலிகள் இயக்கத்தில் இணைந்து போராடாத இவன், இயக்கத்தைப் பயன்படுத்தி நக்கிப் பிழைக்கும் புல்லரிக்கும் வக்கிரத்தையே வெளியிடுகின்றõன். எதார்த்தம் தான் என்ன? ஈராக்கில் பிரபாகரன் என்ற ஒற்றைச் சர்வாதிகாரி கிடையாது. அமெரிக்காவை எதிர்த்து சில பத்து குழுக்கள் போராடுகின்றன. இந்தப் போராட்டத்தில் வயது வேறுபாடுகள் இன்றி மக்கள் போராடுகின்றனர். ஈராக் மக்களே ஒட்டு மொத்தமாக அமெரிக்காவை எதிர்க்கின்றனர். இந்த நிலைமை புலிகளுக்குக் கிடையாது. வடக்கு கிழக்கில் இருந்து தமிழ் மக்கள் தப்பி ஓடுகின்றனர். புலிகளின் கெடுபிடியான பாஸ்போட் முறைமைகள் மட்டும்தான், தமிழ்ப் பகுதியில் தமிழ் மக்களின் வெளியேற்றத்தைத் தடுக்கின்றது. தேசப்பற்று, மண்ணில் மக்களை வாழ வைக்கவில்லை. மறுபக்கத்தில் புலிகளின் தற்கொலை குண்டுதாரிகள் கொழும்பில் புகுவதைத் தடுக்கும் சிங்கள அரசின் பாஸ்போட் வழங்கலும், தமிழ் மக்களின் வெளியேற்றத்தைத் தடுக்கின்றது. அத்துடன் ஐரோப்பிய நகரத்துக்கு நிகரான வாழ்க்கைச் செலவுகளைக் கொண்ட கொழும்பில் வாழமுடியாத வாழ்க்கை நிலைமை கூட, வடக்கு கிழக்கில் இருந்து தமிழ் மக்களின் புலம் பெயர்வைத் தடுத்து நிறுத்துகின்றது.


புலிகளின் போராட்டம் என்பது மக்களின் பொருளாதார வாழ்வியல் போக்குடன் அன்னியப்பட்டது. இந்த நிலையில் புலிகள் தமது சொந்த நலன்களை அடையும் போக்கில், மக்களை வெறும் மந்தைகளாகவும், அடிமைகளாகவும் நடத்தும் புலிகளின் சர்வாதிகார அமைப்பில், அமெரிக்காவை எதிர்த்துப் போராட எதுவும் மக்களுக்குக் கிடையாது. குறிப்பாக ஆப்கானிஸ்தானில் தலிபான் அமைப்பு எப்படி செயற்பட்டதோ, அப்படித்தான் புலிகள் உள்ளனர். அங்கு தலிபானுக்கு மத அடிப்படைவாதப் பொதுக் கோட்பாடு அவர்களின் சொந்த நடைமுறை சார்ந்து இருந்தது. ஆனால் புலிகளுக்குத் தமிழ்த் தேசியம் சார்ந்து கவ்விக் கொள்ள நடைமுறை சார்ந்த எதுவும் இருப்பதில்லை. ஈராக்கில் குறைந்த பட்சம் சதாம்உசைன் காலக் கட்டத்தில் அரசுக்கும் மக்களுக்கும் இடையில் இருந்த உறவு கூட, புலிகளுக்கும் மக்களுக்கும் இடையில் இல்லை. தலிபான் எப்படி செயல்பட்டதோ, அதேபோல் புலிகள் செயல்படுகின்றனர். மக்களுடன் ஜனநாயகப் பூர்வமான உறவைக் கொண்டிராத ஒவ்வொரு நிலையிலும், அமெரிக்கா அவற்றைப் பயன்படுத்தி புலிகளை ஒடுக்கிவிடுவர். மக்கள்தான் வரலாற்றினைத் தீர்மானிக்கின்றரே ஒழிய, புலிகள் போன்ற குழுக்கள் அல்ல. இந்த நிலையில் புலிகளை அமெரிக்கா ஒழித்துக் கட்டும் பட்சத்தில், ஆங்காங்கே சிறு தாக்குதல்கள் நடந்தாலே அது ஆச்சரியமானதே. வெறும் தலைமை வழிபாட்டில் மட்டும் கட்டப்பட்ட இயக்கத்துக்கு, இலட்சிய தாகம் என எதையும் அரசியல் பொருளாதார இலக்கில் காட்டமுடியாது. தலைவரைக் குறிவைத்து கொல்வதில் அமெரிக்கா தாக்குதல் வடிவங்கள் குறிப்பாக மாறும். இதில் தப்பிப் பிழைத்தாலும், அதியுயர் தலைமறைவு வாழ்க்கை முறைக்குச் செல்வது தவிர்க்க முடியாது. இதனால் தலைமைக் கட்டுப்பாட்டைப் படிப்படியாகப் பிரபாகரன் இழக்கும் வாய்ப்பு உருவாகிவிடும். முரண்பட்ட குழுக்களின் பண்பு அதிகரித்தது, பிளவுகள் ஆழமாகும். மக்களிடமிருந்த அன்னியமான இயக்கம், தமிழ் மக்களின் பொருளாதார வாழ்வியல் நலனுடன் தொடர்பற்ற அரசியல், தவிர்க்க முடியாது தோல்வி பெறுவதைத் துரிதமாக்கி விடும். இது அழிவின் விளிம்புக்கு அழைத்துச் செல்வதுடன், தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகள் கூட அடையாளம் காணமுடியாது சிதைக்கப்பட்டுவிடும். தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கை என்பது, புலிகளின் தலைமையிலான ஆட்சியாகக் காட்டப்பட்டுள்ள நிலையில், தமிழ் மக்களின் தமது நியாயமான ஜனநாயகக் கோரிக்கையைப் பூதக்கண்ணாடி கொண்டுதான் தேடிப் பார்க்க வேண்டும். பிறகு எப்படித்தான் தமிழ் மக்கள் போராடுவது. (தமிழ் மக்களின் நியாயமான ஜனநாயகக் கோரிக்கைகள் என்ன என்பதை, ""இலங்கை யுத்தத்தின் பரிணாமமும் உலகமயமாக்கலின் படையெடுப்பும்'' என்ற நூலிலும், ""ஏகாதிபத்திய மேலாதிக்கத்தின் கீழ் இலங்கை'' என்ற நூலிலும் விவாதிக்கப்பட்டுள்ளது. பார்க்கவும்.)


சிவராமின் நவீன புலி ஆய்வு, இந்தியா அமெரிக்கா முரண்பாட்டினால், இந்தியா புலிக்கு ஆயுதம் வழங்கும் என்கின்றார். நம்புங்கள்! இது உலக அதிசயமான ஆய்வாகிவிடும். அமெரிக்காவின் காலடியில் சுருண்டுபடுத்து குலைப்பதை மட்டும்தான் இந்தியா செய்ய முடியும். இதை அமெரிக்கஇந்திய முரண்பாடாகப் பூதக்கண்ணாடி கொண்டு தேடுகின்றனர். உலகமயமாதலின் அரிச்சுவடியே தெரியாத தமிழ் மந்தைகளுக்கு, சிவராமின் உப்புச்சப்பற்ற கண்டுபிடிப்பு கிளுகிளுப்பை ஊட்டலாம். சிவராமின் ஆய்வு உருவாக்கிய பொன்மொழிகள், பல்கலைக்கழக பட்டப்படிப்பு மாணவர்களின் பாடத்திட்டத்தில் ஒரு பாடமாகி நகைச்சுவைக்குரிய ஒன்றாகலாம். உப்புச் சப்பற்ற எடுபிடிகளாகி, வன்முறை வக்கிரத்தை மட்டும் கொண்டு தமிழ் மக்களை அடக்கியாளும் பிரிவுகளுக்கு, தமது இயலாமை மீதான நம்பிக்கையீனத்தை மூடிமறைக்கும் நப்பாசையையே சிவராம் முகிழ்ந்துவிட்டு சென்றுள்ளான். இப்படி பல.


4. இதேபோல இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் உள்ள பிராந்திய முரண்பாட்டைச் சார்ந்து நின்றும் கருத்துக்களை முன்வைத்தனர். இங்கு சொந்த அரசியல் வங்குரோத்ததை மூடிமறைக்க, இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் உள்ள முரண்பாட்டின் ஊடாக அமெரிக்காவை எதிர்க்கும் போக்கும் வெளிப்பட்டது. இதனடிப்படையில் செய்திகள், கருத்துக்கள் புனையப்படுகின்றது. அமெரிக்காவின் தலையீடு இந்தியாவுக்குப் பாதகமானதாகவும், இந்தியா ராஜதந்திரத்தின் விளைவே இந்த நிலை என்ற கண்டுபிடிப்புகள் முன்வைக்கப்பட்டது. இந்தியாவும் அமெரிக்காவும் மோதும் நிலை உருவாகும் என்ற கற்பனை, இது ஏகாதிபத்திய மோதலாகி உலகயுத்தமாக மாறும் என்ற விருப்பம் சார்ந்து கருத்துகள் முன்வைக்கப்பட்டது. பல பத்திரிகைகள், இணையங்கள் மற்றும் பினாமி ஆய்வாளர்கள் இதை முன்னிலைப்படுத்தி கருத்துக் கூறி வருகின்றனர். முரண்பாடுகளினுடைய உள்ளடக்கத்தின் வளர்ச்சி விதியை மிகவும் கொச்சைத்தனமாகப் புரிந்து கொண்டு அதை விளக்கி விடுகின்றனர். உலகமயமாதலில் என்ன நடக்கின்றது என்ற அடிப்படை அறிவின்மையின் விளைவு இது. அமெரிக்கா உலகில் முன்னணி ஏகாதிபத்தியம். பொருளாதாரம், ராணுவம் என அனைத்திலும் பலம் கொண்ட நாடு. உலகில் பல நூறு இடங்களில் இராணுவத்தளங்களை அமைத்துள்ளது. ரசியாவின் எல்லைகளிலேயே ரசியாவின் கடுமையான எதிர்ப்புக்களையும் மீறி, முன்னாள் சோவியத் பிரதேசங்களிலும் தொடர்ச்சியாகவே இராணுவத்தை நிலைநிறுத்தி வருகின்றது. இதுபோல் தான் சீனாவின் எல்லைகளைச் சுற்றி புதிய இராணுவ முகாம்களை அமைத்து வருகின்றது. ஏன் ஜப்பான், ஜெர்மனி எங்கும் அமெரிக்கப் படைகள் தமது இராணுவத் தளங்களை வைத்துள்ளதுடன், அவற்றை அகற்ற மறுக்கின்றது. மிகப் பெரிய ஏகாதிபத்தியங்களே தமது எல்லைகளில் அமெரிக்காவை எதிர் கொண்டு, என்ன செய்வது எனத் தெரியாது திணறுகின்றன.


இந்தியா போன்ற உலகிலேயே மிகப் பெரிய கடனாளி நாட்டுக்கு என எந்தச் சுயமும் கிடையாது. கடன் கொடுத்தவன் எதைச் சொல்லுகின்றானோ, அதை விசுவாசமாகத் தலைகீழாக நின்று, ஜனநாயகக் கடமையாக ஏற்றுச் செய்பவர்கள் தான் இந்தியத் தலைவர்கள். இன்றைய நிலைமைக்கு அடிப்படையாக உள்ள உலகமயமாதலுக்கான காட் ஒப்பந்தத்தில் என்ன இருக்கின்றது என்று தெரியாமலேயே அமெரிக்கத் தலைமையிலான ஏகாதிபத்தியம் சொன்ன இடங்களில் எல்லாம் விசுவாசமாக வாலாட்டியே கையெழுத்திட்டவர்கள்தான் இந்தியத் தலைவர்கள். இந்த இந்தியத் தலைவர்கள் கட்சி அரசியல் பேதமின்றி, அமெரிக்கத் தலைவர்களின் சப்பாத்துக்களை (காலணிகளை) விசுவாசமாகத் துடைத்துவிட அலைபவர்கள்தான். அவ்வளவு ஏன் இந்தியாவின் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் உத்தியோகபூர்வமாக அமெரிக்கா சென்றபோது, அவரையே விமான நிலையத்தில் நிர்வாணமாக்கிய போது, இந்தியா மக்களுக்கு அதை மூடிமறைத்தே வாலாட்டியவர்கள்தான் இவர்கள்.


இந்தியாவில், பாராளுமன்றத்தில் புரட்சி பேசும் போலி கம்யூனிஸ்டுகள் (இகஐ, இகM), ஜே.வி.பி. போல் அமெரிக்கா பற்றி புலம்பத்தான் முடியும் அவ்வளவே. உண்மையில் இந்திய மக்கள் தான், அமெரிக்க எதிர்ப்பைப் பிரதிபலிக்கின்றனர். இதற்கு வெளியில் அமெரிக்க இந்திய முரண்பாடுகள் வரையறுக்கப்பட்டவைதான். இது இந்திய மூலதனத்துக்கும், அமெரிக்க மூலதனத்துக்கும் இடையில் எந்தளவுக்கு முரண்பாடுகள் உள்ளதோ, அதற்கு உட்பட்டுதான் இந்த முரண்பாடு பிரதிபலிக்கும். இந்திய மூலதனம் அமெரிக்க மூலதனத்துடன் இணங்கிப் போகும் கொள்கையை அடிப்படையாகக் கொண்டது. இந்த நிலையில் இலங்கையில் ஏற்பட்ட அமெரிக்கா தலையீடு பகைமுரண்பாடாக வளர்ச்சியுறாது. மாறாக, அமெரிக்கப் படையுடன் கூட்டாக இயங்கவும், புலிகளை ஒடுக்கவுமே துணைபுரியும். அண்ணே உடுண்ணே நான் பாத்துக்கிறேன். அதாவது அமெரிக்கா தலைமையிலான படையில் சண்டையிட்டு மடியும் கூலிப்படையாக, இந்தியப் படைகள் மாறும். இதற்கு வெளியில் அல்ல.


5. அமெரிக்காவை எதிர்த்துப் போராட சிங்கள மக்கள் பிரபாகரனின் தலைமையில் அணிதிரள வேண்டும் என்றனர். தமிழ் சிங்கள மக்களின் ஐக்கியம் என்பது, பிரபாகரனின் தலைமையில் அமைய வேண்டும் என்றனர். அதேபோல் சிங்களவர்கள் பிரபாகரன் தலைமையில் அணிதிரளுவார்கள் என்றனர். இது மிகவும் வேடிக்கையான கருத்துக்கள்தான். புலிகளின் ஒரு பகுதியினர் இப்படிக் கூறுவது, அரசியல் ரீதியாக வக்கற்றத் தன்மையைக் காட்டுகின்றது. தமிழ் மக்களையே தனது தலைமையில் அணிதிரட்ட வக்கற்றுப்போன ஒரு பாசிசக் கட்டமைப்பை வைத்துக் கொண்டு, எப்படித்தான் சிங்கள மக்களை அணிதிரட்ட முடியும்? குறைந்தபட்சம் அன்னியரை எதிர்க்க கூடிய அனைவரையும் அணிதிரட்டக் கூடிய ஜனநாயகத்தை வழங்க மறுக்கும் போது, எப்படித்தான் போராட முடியும்? இன்று சொந்த இனமான தமிழ் மக்களுக்குள்ளேயே அதிக எதிரிகளைக் கொண்டுள்ள ஒரேயொரு இயக்கம் உலகில் புலிகள் மட்டும்தான். எதிரியை தனது இயக்கத்துக்கு வெளியில் மட்டுமல்ல, சொந்த இயக்கத்தின் உள்ளே கூட கொண்டுள்ளனர். துரோகி என்ற பெயரில் உலகில் அதிகமானவர்களைக் கொன்ற இயக்கமும் புலிகள்தான். இது புதிதாக அதிக எதிரிகளைத் தமிழ் மக்களுக்குள் அன்றாடம் உருவாக்குகின்றது. தமிழ் மக்களின் ஜனநாயகக் கோரிக்கைகளை ஏற்கவும், அதற்காகப் போராடவும் முன்வராத புலிகள், எப்படித்தான் உலக எதிரிகளை எதிர்த்துப் போராடமுடியும். ஐக்கியம் என்ற வார்த்தைக்கு அர்த்தம் தெரியாத நிலையில், எதிரிக்கு எதிராக அனைத்து சக்திகளையும் அணிதிரட்ட வக்கற்றவர்களாகவே புலிகள் உள்ளனர். புலிகள் தமக்காக மட்டும் போராடுவதாலும், மக்களை இதற்கு ஏற்ற மந்தைகளாக வைத்திருக்கும் வரை, எதிரிகளின் நயவஞ்சகமான குரூரமான தாக்குதல்களில் இருந்து தப்பிப் பிழைக்க முடியாது. சொந்தத் தமிழ் மக்களையே ஜனநாயகப்பூர்வமாக அணிதிரட்ட முடியாது வக்கற்று இருக்கும் நிலையில், சிங்கள மக்களை அணிதிரட்டுவதாகக் கற்பனை பண்ணுவது என்பது தனிப்பட்ட கற்பனைத் திறன் கொண்ட சுகானுபவம்தான்.
அமெரிக்காவையும், மற்ற ஏகாதிபத்தியங்களையும் எதிர்த்துப் போராட வேண்டும் என்றால் குறைந்தபட்சம் சில அடிப்படைகள் தெளிவாக முன்வைக்கப்பட வேண்டும்.


அமெரிக்கா தலைமையிலான ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப் போராடி தமிழீழத்தை அமைத்தால், அமெரிக்கா தலைமையிலான ஏகாதிபத்தியத்துக்கு மாற்றாக என்ன பொருளாதாரத்தைப் புலிகள் கொண்டிருப்பர். உலகமயமாதல் என்ற உலகளாவிய பொருளாதாரத்தை மறுத்து, மாற்றாக என்ன பொருளாதாரத்தைப் புலிகள் கொண்டிருப்பர். இந்தப் பொருளாதாரத்தை எப்படி, எந்த வழிகளில் தக்கவைப்பர். அமெரிக்காவைப் பகைத்து உலகில் எப்படி தனித் தமிழீழம் செயற்படும். எப்படிப்பட்ட மற்றும் எந்தப் பொருளாதாரக் கொள்கையுடன் என்ற கேள்விக்குப் பதில் தெரியாத யாரும் அமெரிக்காவை எதிர்த்து வெல்ல முடியாது.


அமெரிக்கா பாணி பொருளாதாரத்தையும், அமெரிக்கா பாணி பாசிசத்தையுமே தமது அரசியலாகக் கொண்டே புலிகள் தம்மை கட்டமைத்துள்ளனர். புலிகளின் கட்டமைப்பு தனித்துவமிக்கவையல்ல. மாறாக, அமெரிக்கா மாதிரியே. அமெரிக்காவின் பொய்கள் மற்றும் புரட்டுகளின் மாதிரி வடிவம்தான், புலிகளின் கட்டமைப்பு. உலக மனித இனத்தையே மந்தைகளாக அமெரிக்கா கருதுகின்றது என்றால், புலிகள் தமிழ் மக்களை அப்படிக் கருதுகின்றனர். உலகின் செல்வம் அனைத்தையும் அமெரிக்கா தனதாக்க முனைகின்றது என்றால், புலிகள் தமிழ் மக்களின் செல்வம் அனைத்தையும் தனதாக்க முனைகின்றனர். இந்தச் செல்வங்களைக் கூட அமெரிக்காவில் உள்ள ஒரு சிலர் சொத்தாக்கவே அமெரிக்கா முனைகின்றது என்றால், புலிகள் தமிழ் மக்களின் செல்வங்களை அனைத்தையும் புலிகளில் உள்ள ஒரு சிலர் சொத்தாக்கவே முனைகின்றனர்.


உண்மையில் அமெரிக்காவுக்கும், புலிகளுக்கும் அரசியல் பொருளாதார ரீதியாகக் கொள்கை அளவில் முரண்பாடுகள் இருப்பதில்லை. புலிகளின் தரகு பொருளாதாரம் வழிகாட்டும் நுகர்வு, அமெரிக்கப் பொருளாதாரத்தையே தமிழ்த் தேசிய பொருளாதாரமாக்கியுள்ளது. உதாரணமாக யாழ்குடா நாட்டில் ஏகாதிபத்தியத்தின் ஒரு கைத் தொலைபேசி நிறுவனம் மட்டும் 1.5 லட்சம் கைத்தொலைபேசி (ஞிஞுடூடூ) சந்தாக்களைக் கொண்டுள்ளது. (நிச்சயமாக வரியை இவர்கள் புலிக்குச் செலுத்தியிருப்பர்.) இந்த நுகர்வுப் பண்பாடு தமிழ்த் தேசிய நுகர்வாக இருக்க முடியுமா? அல்லது அமெரிக்க பண்பாட்டு நுகர்வு வடிவமாக இருக்குமா? மறுபக்கத்தில் யாழ்குடாவில் அண்ணளவாக 1.4 லட்சம் குடும்பங்கள் உள்ள அதேநேரம், 80 ஆயிரம் குடும்பங்கள் வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளனர். இங்குதான் இந்தத் தொலைபேசி நுகர்வு வெறியும் காணப்படுகின்றது. இது அனைத்து விதமான ஆடம்பரமான வெளிநாட்டு பொருள்களுக்கும் பொருந்தும். யாழ் மேட்டுக்குடியின் வாழ்க்கை முறைமை, ஐரோப்பியத் தமிழனின் வாழ்க்கை முறைமையை விட நுகர்வில் உயர்வானதாகக் காணப்படுகின்றது.


இந்த நிலையில் உலகம் முழுக்க அமெரிக்கா எதைச் செய்ய விரும்புகின்றதோ, அதைப் புலிகள் வாலாட்டி செய்கின்றனர். மறுபக்கத்தில் அமெரிக்கா எதை உலக மக்களுக்குச் செய்ய விரும்புகின்றதோ, அதைத் தமிழ் மக்களுக்குச் செய்ய புலிகள் விரும்புகின்றனர். ஜார்ஜ்புஷ் அமெரிக்கா ஜனாதிபதியாக இருந்தாலும் சரி, அந்த இடத்தில் பிரபாகரன் இருந்தாலும் சரி உலகளாவிய விளைவுகள் ஒன்றே. பிரபாகரன் இடத்தில் ஜார்ஜ் புஷ் இருந்தாலும், புலிகள் இயக்கம் இப்படித்தான் இருக்கும். புலிகள் இயக்கமும், அமெரிக்கா அரசாங்கமும் அடக்கியாளக் கூடிய மக்கள் கூட்டங்களின் மேல் ஒரேவிதமான பாசிசக் கட்டமைப்பையே கொண்டு அடக்கியாளுகின்றனர்.


இந்த நிலையில் புலிகள் மற்றும் அமெரிக்காவுக்கு இடையிலான முரண்பாடு தான் என்ன? அரசியல் பொருளாதார நோக்கில் முரண்பாடுகள் அற்ற நிலையில், என்னதான் இவர்களுக்கு இடையில் முரண்பாடுகள் உண்டு. புலிகள் உலகமயமாதலுக்கு உட்பட்ட, அமெரிக்காவின் பொருளாதாரக் கைக்கூலிகளாக இருக்க விரும்பும், வழிகளில் தான் முரண்பாட்டைக் காண்கின்றது. அமெரிக்கா ஒன்றுபட்ட இலங்கை என்ற அமைப்பில் இருந்து பொருளாதார அடிமையாகச் சேவை செய்யக் கோருகின்றது. இதைத் தேர்தல் முறை ஊடாகச் சிங்களவருடன் போட்டியிட்டு அடையக் கோருகின்றது. ஆயுதம் மூலம் உலகமயமாதல் பொருளாதார அமைப்பில் புலிகள் பங்கு கோருவதை அமெரிக்கா ஏற்றுக் கொள்ளவில்லை. புலிகள் தேர்தல் வழிகளில் தமிழ் மக்களை முழுமையாக மொட்டையடித்துச் சூறையாட முடியாத பலவீனம், அமெரிக்காவுடனான ஒரு முரண்பாடாக மாறிவிடுகின்றது. புலிப் பினாமிகள் வெளியிடும் புலிப்பிரச்சாரச் செய்திகளில், அமெரிக்கா அதிகாரவர்க்கத்தின் உறுப்புகள் புலிகள் பற்றி புலிகளுக்குச் சார்பாக எதாவது கூறிவிட்டால், அதை தலைப்புச் செய்தியாக்கிக் குதூகலிப்பதைச் சுனாமிக்குப் பின் அடிக்கடி காண முடிகின்றது. மறுபக்கத்தில் புலிக்கு எதிராக அமெரிக்கா ஏதாவது சொன்னால், புலி எதிர்ப்பு செய்திகள் குதூகலத்துடன் தலைப்புச் செய்தியாக்குகின்றன. அமெரிக்காவிடம் நக்கித் தின்ன புலிகளும், புலி எதிர்ப்பு பிரிவினரும் போட்டிபோடுவதுடன், அதற்கு விசுவாசமாக இருப்பதையே இது பிரதிபலிக்கின்றது. அமெரிக்காவின் கண் அசைவுக்கு உட்பட்ட ஒரு உடன்பாடு மட்டும்தான், இங்கு இவர்களுக்குத் தேவைப்படுகின்றது.


உண்மையில் அமெரிக்காவுக்கும் புலிகளுக்கும் இடையில் உள்ள அரசியல் பொருளாதார ஒற்றுமை, புலிகளை ஒரு சரணடைவுப் பாதைக்கு இட்டுச் செல்லும் சாத்தியப்பாடுகள் தெளிவாகக் காணப்படுகின்றது. இலங்கை அரசும், புலிகளும் அமெரிக்காவின் நேரடி மற்றும் மறைமுகக் கண்காணிப்பின் கீழ் ஒரு ஒப்பந்தத்தையே வந்தடைவார்கள். புலிகளின் துரோகம் மேல்பூச்சுகள் மூலம் மறைக்கப்பட்டு அரங்கேறும் நிலைமையே, இலங்கை அரசியல் நிலைமையில் எதார்த்தமாகக் காணப்படுகின்றது. என்றுமில்லாத ஒரு வரலாற்றுத் துரோகம் அரங்கேறும். புலிகளில் சிலர் தமிழ் மக்களிடம் வசூலித்த மிகப் பெரிய நிதியாதாரங்களுடன், பெரும் தொழிலதிபர்களாகவும் ஏகாதிபத்தியத் தரகர்களாகவும் வெளிவரும் காலம் விரைவில் அரங்கேறும். இதையே தேசியத்தின் வெற்றி என்று பீற்றும் நிலையும் தமிழ்த் தேசிய அரசியலில் அரங்கேறும்.


இதையும் மீறி, யுத்தத்துக்குள் நாடு செல்லுமென்றால் என்ன நடக்கும். புலிகள் என்றுமில்லாத தனிமைப்படுத்தலுக்கு உள்ளாவார்கள். புலிகளின் உள்ளேயே அமெரிக்கா சார்பு நிலைப்பாட்டுடன் நிச்சயமாக ஒரு அணி பிளவுறும். புலிகளின் அரசியல் பொருளுதாரப் போக்கே, புலிகளின் பிளவுக்கு அஸ்திவாரமாக இருக்கும். புலிகளுக்கு எதிரான அணி புலிகளுக்கு வெளியிலும் பலமானதாகவே இருக்கும். அமெரிக்கா அடிவருடிகளாக இருக்கப் போவது புலிகளுக்கு எதிராக உள்ள அணியா? அல்லது புலியில் இருந்து உருவாகும் புதிய அணியா? அமெரிக்காவின் விசுவாசமான கைக்கூலியாக இருப்பது யார்? என்ற ஒரு அதிகார மோதல் நிகழும். இது புலிகள் இயக்கம் ஒட்டுமொத்தமாகச் சரணடையும் போதும் மேலும் கடுமையாகவே நிகழும்.


அன்னிய ஆக்கிரமிப்பு நிகழ்ந்துள்ள நிலையில் இலங்கை அரசியல்வாதிகள் மௌனவிரதத்தால் தம்மைப் போர்த்திக் கொள்கின்றனர். இந்த நிலையில் புதிய ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த தம்பையா என்பவர் வெக்ரோன் தொலைக்காட்சியில் அமெரிக்க எதிர்ப்பு கோசத்துடன் முன்நிறுத்தப்பட்டார். நிலைமைக்கு ஏற்ப ஆட்களைத் தேடிப் பிடிப்பதில், வெக்ரோன் சாதனையாளர்கள் தான். இலங்கையில் அமெரிக்க எதிர்ப்பை யாரும் முன்வைக்காத நிலையில், தம்பையாவைத் தமிழ் மக்களுக்கு அறிமுகம் செய்தனர். இலங்கை அரசியலில் பொம்மையாகச் செயல்படும் கட்சிதான் புதிய ஜனநாயகக் கட்சி. தமது சொந்தக் கருத்துக்களையே முன்வைக்க முடியாதவர்கள் இவர்கள். மாறாகப் புலிகளின் தாளத்துக்கு ஏற்ப கருத்துச் சொல்பவர்கள்தான். ஆனால் அதற்குச் சிவப்புசாயம் பூசிக் கொள்பவர்கள்தான் இவர்கள்.


தனது பேட்டியின் போது, சுனாமி பேரழிவில் இருந்து மீள புனர்நிர்மாணத்துக்கு அன்னிய உதவி அவசியம் என கருத்துரைக்கின்றார். ஆனால் அமெரிக்க இராணுவம் தேவையில்லை என்கின்றார். இவரின் சிவப்பு மார்க்சியம் அன்னிய நாடுகளின் உதவி இன்றி மீள் கட்டமைப்பைச் செய்ய முடியாது என்கின்றது. இவர்கள் புரட்சியை எப்படித்தான் செய்வார்கள். அன்னிய உதவி தொடர்பாக ஜே.வி.பி.க்கும் இவர்களுக்கும் என்னதான் வேறுபாடு உண்டு. இதைத்தான் புலிகளும் அரசும் கூட கூறுகின்றது. இது அனைத்துத் தரப்பினதும் ஒப்பாரியாகும். கம்யூனிசப் புரட்சி பற்றி மற்றவர்களின் தாளத்துக்கு ஏற்ப சொந்த முகமிழந்து பிரச்சாரம் செய்பவர்கள், இப்படி கூறுவது ஆச்சரியமானது அல்ல. திட்டமிட்டு அன்னியரை நாட்டுக்குள் கொண்டு வருவதற்கான பிரச்சாரங்களையே இது கொண்டுள்ளது.


சுனாமி ஏற்படுத்திய அனர்த்தத்தில் உண்மைநிலை என்ன? சுனாமி அனர்த்தம் இலங்கை மக்கள் தொகையில் ஒரு சதவிகிதத்தையே கடுமையாகப் பாதித்துள்ள நிலையில், இதன் பாதிப்பு அதிகம் போனால் இரண்டு சதவிகிதத்தைக் கொண்டது. 99 சதவீதமான மக்கள் இந்த ஒரு சதவீதமான மக்களுக்கு உதவும் உயர்ந்த ஒரு உணர்வுடன் செயல்பட்ட நிலையில், அதை மறுத்து அன்னிய உதவி வரவேற்கப்பட்டது. இதன் மூலம் தேசமும் தேசியமும் விற்கப்பட்டது. பாதிக்கப்பட்ட மக்களை விட நான்கு மடங்கு அதிகமானவர்கள், இலங்கை பிரஜாவுரிமையை இழந்து மேற்கு நாடுகளில் வாழ்கின்றனர். இவர்கள் மிகப் பெரிய உதவியை செய்தார்கள். செய்யத் தயாராக இருந்தார்கள். ஆனால் அன்னிய உதவி என்ற போர்வையில் நாட்டை அரசும் புலிகளும் ஏலம் விட்டனர். பாதிக்கப்பட்ட மக்களைவிட எட்டு மடங்கு மக்கள் தொழில் காரணமாக அரபு நாடுகளில் வாழ்ந்து வருகிறார்கள், அவர்களும் உதவத் தயாராக இருந்தார்கள். ஆனால் நாடு அன்னியரிடம் விற்கப்பட்டது.


நடந்து முடிந்த சுனாமி அனர்த்தத்தில் இருந்து மீள, மீள் கட்டுமானத்துக்கு 1.3 பில்லியன் முதல் 1.5 பில்லியன் டொலர் தேவை என அரசு அறிவித்துள்ளது. அதாவது 13,000 கோடி முதல் 15,000 (இலங்கை மதிப்பு 1 டாலர் 100 ரூபாய்) கோடி ரூபா தேவை என்று அறிவித்துள்ளது. இந்த மீள்கட்டமைப்பு அடுத்த பத்து வருடத்தில் பூர்த்தி செய்யப்படும் என்று கூறுகின்றனர். அதாவது வருடம் 1300 கோடி ரூபா தேவைப்படுகின்றது. இதை இலங்கை தனித்துவமாகச் சொந்தக் காலில் நின்றே பூர்த்தி செய்ய முடியும். இதற்கு பல வழிகள் உண்டு. இலங்கை ஒவ்வொரு ஆண்டும் கடனுக்காக ஏகாதிபத்தியத்துக்கு வட்டியாகவும் மீள் கொடுப்பனவாகவும் கொடுக்கும் தொகை, வருடாந்தம் அண்ணளவாக 6,400 கோடி ரூபாவாகும். இரண்டு வருடம் மக்களை சுரண்டிக் கொடுக்கும் வட்டித் தொகையைக் கொண்டு மீள் கட்டமைப்பை, அன்னியரின்றி செய்ய முடியும். இதைத்தான் மக்கள் நலத் தேசிய அரசுகள் செய்திருக்க வேண்டும். ஆனால் வட்டி கட்டுவதை நிறுத்தாமல் மீள் கட்டமைப்பை ஏகாதிபத்தியம் செய்யக் கோருகின்றது. இதற்குத் தேசத்தை விற்கின்றனர். இலங்கையின் மொத்தக் கடன் அணளவாக 1,20,000 கோடி ரூபா. (இந்த கடனைத்தான், கடந்த காலத்தில் ஊடகவியலாளர்கள், மக்களுக்கு உண்மை தெரியாத வகையில் கடனை உதவி என்று திரித்து எழுதினார்கள்) இந்தக் கடனில் பத்து சதவிகிதத்தை, இந்த அரசியல் அமைப்பை ஏற்றுக் கொள்பவர்கள் விலக்க கோரியிருக்கலாம். இதன் மூலம் நிவாரணத்தைக் கோரியிருக்கலாம். மற்றொரு வழியாக இலங்கை அரசின் யுத்தச் செலவாக உள்ள தொகையை, இரண்டு ஆண்டுகள் நிறுத்தினால் அதுவே போதுமானது. அன்னிய ஆக்கிரமிப்பாளனின் கால்களை நக்குவதைவிட, இலங்கை அரசும் புலிகளும் கூட்டாக புனர் நிர்மாணத்தை செய்தால், இவர்களின் இராணுவ உத்திக்கான ஒரு வருடச் செலவே போதுமானது. உண்மையில் 13,000 கோடி என்பது இடைத்தரகர்களின் சூறையாடல் முதல் இதில் இலாபங்களைச் சம்பாதிக்கும் மனிதவிரோதிகள் 50 சதவீகிதத்துக்கு மேலாக உறிஞ்சி விடுவார்கள்.


இந்த மனித அவலத்தைச் சொந்த மக்களே ஈடுசெய்யக் கூடிய பலத்தையும், உழைப்பையும் பல வழிகளில் கொண்டே இருந்தனர். இந்த அனர்த்தத்தின் ஆரம்ப மீட்புப் பணிகள் அனைத்தையும் சொந்த மக்கள்தான் செய்தனர். இங்கு ஒழுங்குபடுத்தப்படாத வகையில் செயல்பட்ட செயல்கள்தான், மக்களின் துயரத்துக்குக் கைகொடுத்தது. ஒழுங்குபடுத்தப்பட்டு இருந்த புலிகளின் கடற்படை கூட, நீரில் மிதந்த மனித உயிர்களைக் காப்பாற்ற கடலில் இறங்கவில்லை. மக்களைப் பாதுகாக்கும் ஒரு மக்கள் படையாக இல்லாத வரை, மக்களின் உயிரை ஏன்தான் காப்பாற்ற வேண்டும்? ஆனால் மக்கள் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் சிறு துடுப்புகளுடன் கடலில் இறங்கி, பல உயிர்களை ஆங்காங்கே காப்பாற்றினர். ஒழுங்குபடுத்தப்படாத மக்களை ஒழுங்குபடுத்திய வடிவில் இயக்கி, மக்களின் உழைப்பைச் செம்மைப்படுத்தியிருந்தால் மிகக் குறுகிய காலத்தில் மிகப் பெரிய ஒரு மீட்பையும், புனர்வாழ்வையும் வழங்கியிருக்க முடியும். எந்த உளவியல் மருத்துவத்தையும் விட மக்களின் ஒருங்கிணைந்த ஒன்றிணைந்த பங்களிப்பு மட்டம்தான், மீட்புக்கான ஒரேயொரு மாற்றுவழி. இதைவிடுத்து டொலர் நோட்டுகள் அல்ல. ஆனால் இவற்றை எல்லாம் நிராகரித்து கையேந்தி நிற்கும் பிச்சைக்கார நாடாக மாற்றுவது, அரசியல்வாதிகளுக்கும், நக்கி பிழைக்கும் அறிவுத் துறைக்கும் அதிக லாபங்கள் உண்டு. மக்களின் பிணங்களும், மனித அவலமும் கூட இலாபத்தை மீட்டுத் தரும் வியாபாரமாகி விட்டது. உலகமயமாதல் கட்டமைப்புக்கு நெம்புகோலாகி விடுகின்றது. டொலர் புதிய ஆக்கிரமிப்பினால் சர்வதேச சந்தையில் மதிப்பு உயர்வை அடைந்து, பல ஆயிரம் கோடி டொலரைச் சம்பாதித்தது. இலங்கை பணம் ஆக்கிரமிப்பால் ஸ்திரத்தன்மை அடைந்து, பணப் பெறுமதி அதிகரித்துள்ளது. அன்னியரின் வருகை இதன் மூலம் தெளிவாக உறுதி செய்யப்படுகின்றது.


மறுபக்கத்தில் அன்னிய நாடுகளில் இருந்து கிடைத்த உதவிகளைச் சொந்த மக்களே கண்காணிக்கவும், செலவு செய்யவும் முடியாது. அன்னிய நிதியை நிபந்தனை இன்றி வழங்கவில்லை. நிபந்தனையின் அடிப்படையில்தான், அன்னிய நிதி நாட்டில் புகுந்துள்ளது. இது இராணுவம் மற்றும் சிவில் நிர்வாகம் என அனைத்து அன்னிய நிதிக்கும் விதிவிலக்கின்றி பொருந்தும். இதைச் சொல்லி ஏகாதிபத்திய நாடுகளில் திரட்டப்பட்ட நிதி, பல ஆயிரம் கோடி டொலராகும். இந்த நிதி புனர்நிர்மாணம் என்பதும் அதைக் கொண்டு தாமே உதவுவதாகக் கூறி இராணுவங்களை நகர்த்தி செல்ல இந்த நிதிகள் பயன்படுகின்றன. கோபி அன்னானின் விமானச் செலவு முதல், அமெரிக்க இராணுவவீரன் இலங்கை கடற்கரையில் எம் பெண்களை நுகர உள்ள செலவு வரை இந்த நிதியில் இருந்துதான் செலவு செய்யப்படும்.


உண்மையில் ஏகாதிபத்திய நாடுகளில் மக்கள் தமது உழைப்பில் இருந்தே இந்தப் பணத்தை வாரி வழங்கினர். இந்த சுனாமி என்பது ஏகாதிபத்தியத்துக்குக் கிடைத்த அதிர்ஷ்ட இலாபச் சீட்டுதான். இது பொருளாதார, இராணுவ இலக்குகளை மட்டுமின்றி, சொந்த நாட்டில் அரசியல் இலக்கினையும் பெற்றுக் கொண்டது. மக்கள் வழங்கிய நிதியில் சொந்த இராணுவச் செலவின் ஒரு பகுதியைப் பூர்த்தி செய்து கொண்டனர். அதேநேரம் புதிய ஆக்கிரமிப்பை மீட்புகளின் பெயரில் அரங்கேற்றினர். பல நாடுகளின் ஆக்கிரமிப்பு, புதிய பொருளாதார நலன்களை அடைய உதவியுள்ளது. சொந்த நாட்டு மக்களுடைய உழைப்பின் ஒரு பகுதியைத் திருடிக் கொண்ட ஏகாதிபத்தியங்கள், தம்மை உலகில் ஜனநாயகத்தினதும், மனிதாபிமானத்தினதும் அடையாளமாக காட்டிக் கொண்டனர். சொந்த மக்களை ஏமாற்ற முடிந்துள்ளதுடன், மக்களின் உதவிகளைக் கொண்டு உலகம் மீதான அதிகாரத்தை ஆழமாக நிறுவ முடிந்துள்ளது. ஏகாதிபத்தியக் கொள்கைகளை வழிநடத்தும் தன்னார்வக் குழுக்கள் மேலான நம்பிக்கைகளை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. தன்னார்வக் குழுக்கள் மூன்றாம் உலக நாடுகளை ஏகாதிபத்தியம் கொள்ளையடிக்க உதவும் ஒரு மனிதாபிமான கட்டமைப்பே. ஆனால் இதை மூடிமறைத்து போலியான ஒரு தோற்றத்தை மேற்கில் மட்டுமல்ல, பாதிக்கப்பட்ட நாடுகளிலும் ஏற்படுத்தி விட்டனர். மக்களை வேடிக்கை பார்க்கும் உயிருள்ள பிண்டமாக மாற்றி விட்டனர். எல்லாம் டொலருக்குள்ளான ஒன்றாகவும், மனித உணர்வுகள், செயலாற்றல்களும் முற்றாக நலனடிக்கப்பட்டது. தன்னெழுச்சியாகப் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் மக்கள் திரண்டு செயலாற்றி அந்தக் கணம், கனவுபோல் மாறிவிடுவதையே உலகமயமாக்குகின்றனர். ஏதோ ஏகாதிபத்திய இராணுவங்களும், ஏகாதிபத்திய நிதியாதாரங்களில் இயங்கும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுமே மனிதாபிமான பணியில் ஈடுபடுவதாக உலகுக்குக் காட்டுகின்றனர். அதாவது இந்தச் சுனாமி புதிதாக ஒருங்கிணைக்கப்பட்ட தன்னார்வச் செயல்பாட்டை உலகமயமாக்கியுள்ளது. உலகில் ஏற்படும் எந்த இயற்கை அனர்த்தத்துக்கும், அத்துமீறிய தன்னார்வக் குழுக்களின் தலையீடு உலகமயமாதலில் புதிய கொள்கையாக மாறிவிட்டது. அதாவது அன்னிய இராணுவத்தைப் போல, ஒருங்கிணைந்த ஏகாதிபத்திய ஆதரவுடன் இயங்கும் தன்னார்வக் குழுக்கள் அதிகாரம் பெற்றுவிட்டன. இதனால்தான் ஒவ்வொரு ஏகாதிபத்தியமும் போட்டிபோட்டுக் கொண்டு திட்டமிட்டே பல தன்னார்வக் குழுக்களை உருவாக்கி வருகின்றன. இவை தமது சொந்த ஆக்கிரமிப்பு வேடத்தை வெளித்தெரியாத வகையில், மனிதாபிமான உதவி என்ற புதிய ஆயுதத்துடன் பெரும் நிதியாதாரங்களுடன் களத்தில் ஏகாதிபத்தியத்தால் இறக்கிவிடப்படுகின்றன. ஏகாதிபத்திய நலன்களுக்கு வெளியில் இவர்களுக்கு என்று எந்தச் சுயமும் கிடையாது.


அன்னிய இராணுவமும், அன்னியத் தன்னார்வ அரசுசாரா ஏகாதிபத்தியச் கைக்கூலிகளும் பாதிக்கப்பட்ட நாடுகளுக்குச் சென்றபோது, அங்கு மீட்பதற்கு என எதுவும் இருக்கவில்லை. இவர்கள் மக்கள் வாரிவழங்கிய உதவித் தொகையில் உல்லாசமாகப் போய் இறங்கியவர்கள். மீட்பதற்கு என ஏதுமற்ற நிலையில், ஆங்காங்கே சில நடவடிக்கையில் ஈடுபடுகின்றனர். பல பிரதேசங்களில் உள்ளூர் மக்களே அடிப்படை நிவாரணத்தைக் குவித்துவிட்டனர். மிதமிஞ்சிய உணவு, உடை என சில பிரதேசங்களில் அளவுக்கு அதிகமாகக் குவிந்து காணப்படுகின்றது. வெளியில் இருந்து வந்தவர்கள் எதிர்கால நிர்மாணம் என்ற பெயரில் உள்நாட்டுப் பொருளாதாரத்திலும், உள்நாட்டு அரசியலிலும் தலையிடுகின்றனர். உளவு பார்க்கவும் தொடங்கிவிட்டனர். தமது சொந்த நாட்டுக் கழிவுகளை, எங்கே எப்படி உதவியாகக் கொட்டுவது என்ற ஆய்வில் ஈடுபடுகின்றனர். மேற்கின் நுகர்வு வெளித்தள்ளும் அளவுக்கு அதிகமாக மீளப் பயன்படுத்தக் கூடிய கழிவுகளை, பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கும் புதிய உலகம் தழுவிய நடைமுறை கோட்பாடுகள் அறிவுத்துறையினரால் செம்மை செய்யப்பட்டு வரையப்படுகின்றது. எதிர்காலத்தில் மேற்கத்தையவர்கள் பயன்படுத்திய பொருட்களை, மீளப் பயன்படுத்தும் வழிமுறைகள் உலகமயமாக்கலின் புதிய நடைமுறையாகியுள்ளது. இவற்றுக்குப் பெறுமதி மதிப்பிடப்பட்டு டொலரின் பெயரால் பணப் பெறுமதியிடப்படுகின்றது. மேற்கத்திய மக்களின் கழிவுகளும் திடீரென பணப்பெறுமதி பெற்றுவிடுகின்றது. உதவி எப்போதும் பொருட்களாக இருப்பதால், கழிவுகளை அகற்ற முடிகின்றது. மறுபக்கத்தில் இதற்குப் பணப் பெறுமதி இட்டு உதவியை டொலரில் அறிவிக்க முடிகின்றது. குறிப்பாக ஐரோப்பியப் பாராளுமன்றம், தமது கழிவு மீன்பிடி வள்ளங்களையே மீள் புனரமத்து, அதை உதவியாக இடமாற்றும் ஒரு விவாதத்தையும் நடத்தியுள்ளது. இப்படி தம்மை மீட்பாளராகக் காட்டி, டொலர் நோட்டுகளைக் காட்டித் தேசத்தையே விபச்சாரம் செய்ய விடும்படி, ஒவ்வொரு மனிதனையும் சொந்தப் படுக்கைக்கு அழைக்கின்றனர். அன்னிய உதவியின்றி எதையும் சாதிக்க முடியாது என்று கூறும் தேசியவாதிகளும், அரசியல் கட்சிகளும் விபச்சாரத் தரகர்களாகச் செயல்பட ஆலாய்ப் பறக்கின்றனர். அற்ப எலும்புத் துண்டுக்காக, வாலையாட்டி நாட்டையே விற்றுக் கொண்டிருக்கின்றனர். மனிதத் துயரங்கள் இப்புதிய ஆக்கிரமிப்பில் அதிகரிக்குமே ஒழிய, ஒருநாளும் குறைந்ததாக உலக வரலாற்றில் எந்தச் சரித்திரமும் கிடையாது. மக்களின் உழைப்பைச் சுரண்டும் உலகமயமாக்கல் அமைப்பில், அன்னியத் தலையீடுகள் இதற்கு வெளியில் எதையும் செய்வதில்லை.

11.01.2005