Tue06252019

Last update10:02:19 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back முன்பக்கம்

ஏகாதிபத்திய எதிர்ப்பு போராளி தியாகத் தோழர் பகத்சிங் கின் 75 - வது நினைவு நாள்!

  • PDF

04_2006.gif

ஏகாதிபத்திய எதிர்ப்பில் உறுதி, சாதிமத அடையாளங்களை முற்றாக விலக்கிய மதச்சார்பின்மை, சோசலிசத்தின் மீது ஆழ்ந்த பற்றும் நம்பிக்கையும்  என தியாகத் தோழர் பகத்சிங் தோற்றுவித்த புரட்சிகர கம்யூனிச பாரம்பரியத்தை என்றென்றும் கட்டிக் காப்போம்; ஏகாதிபத்தியத்துக்கு எதிராகப் போராடி நாட்டுக்காகவும் மக்களுக்காகவும் தனது இன்னுயிரை ஈந்த அளப்பரிய தியாகம்,

 காலனியாதிக்கவாதிகளைக் கதிகலங்க வைத்த மாவீரம், போராட்டத்தில் உறுதி, நாட்டு விடுதலையின் மீது மாளாக் காதல்  ஆகிய அவரது உயரிய கம்யூனிச பண்புகளை வழுவாமல் பின்பற்றுவோம்; ஏகாதிபத்தியத்தையும் மறுகாலனியாதிக்கத்தையும் வீழ்த்தி நாட்டை விடுதலை செய்யும் மகத்தான பணியில் எம்மை அர்ப்பணித்துக் கொள்வோம் என்று இந்நாளில் உறுதியேற்கிறோம்!

தியாகத்தோழர் பகத்சிங்கிற்கு

எமது வீரவணக்கம்!

ஓங்கட்டும் பகத்சிங்கின் புகழ்!

ஒழியட்டும் மறுகாலனியாதிக்கம்!

 ஆசிரியர் குழுபுதிய ஜனநாயகம்.