Sat10192019

Last update10:02:19 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back முன்பக்கம்
February 2009

Saturday, 28 February 2009

புலிகள் தம்மை சுயவிமர்சனம் செய்யாது எடுக்கும் எந்த முடிவும், தமிழ் மக்களுக்கு எதிரானதே PDF Print Write e-mail
Written by பி.இரயாகரன்
Saturday, 28 February 2009 09:31
பி.இரயாகரன் - சமர் / 2009

புலிகள் நிபந்தனையுடன் ஆயுதங்களைக் கையளித்த சமாதானம்! எம்மை நோக்கி எழுப்பிய கேள்விகளின் அடிப்படையில் இதை ஆராய முனைகின்றோம்.   இடைவிடாத அரசியல் கொந்தளிப்புகள், நிலைமைகளில் ஏற்படும் அதிரடி மாற்றங்கள், எம்மையும் எம்மைச் சுற்றியுள்ள நிகழ்வுகளையும் குழப்புகின்றன. எமது மாறாத கண்ணோட்டத்தையும், பார்வையையும் அதிரடியாகவே திகைப்பூட்டி திணற வைக்கின்ன்றது. ஒரு புரட்சி அல்லது அழிவில், இவை அதிரடியாக நிகழக் கூடியதுதான்.

 

Read more...
Last Updated ( Saturday, 28 February 2009 13:12 )


Friday, 27 February 2009

புலியெதிர்ப்பு ஜனநாயக அரசியல் என்பது மாமா அரசியலாகிவிட்டது PDF Print Write e-mail
Written by பி.இரயாகரன்
Friday, 27 February 2009 13:30
பி.இரயாகரன் - சமர் / 2009

நாம் புலியெதிர்ப்பு என்ற சொல்லை முதன் முதலாக அறிமுகம் செய்து பயன்படுத்திய போது, அதற்கென்று ஒரு அரசியல் அர்த்தம் இருந்தது. இதை பலரும் எம்மிடமிருந்து பெற்று,  பயன்படுத்தத் தொடங்கிய போது, நாம் பயன்படுத்திய அரசியல் அர்த்தத்தில் இருந்தும் அது திரிந்து போனது.

Read more...
Last Updated ( Friday, 27 February 2009 20:08 )

ஏகாதிபத்தியத்திடம் தமிழரின் தலைவிதியை ஒப்படைத்தல்! PDF Print Write e-mail
Written by பி.இரயாகரன்
Friday, 27 February 2009 13:21
பி.இரயாகரன் - சமர் / 2009

இப்படி ஒரு திடீர் அறிக்கையை புலிகள் விடும் அபாயம், இன்று காணப்படுகின்றது. ஓரு துரோகத்தை நோக்கிய புலிகளின் நகர்வுகள், இரகசிய பேரங்களாக திரைமறைவில் நடைபெறுகின்றது.

 

Last Updated ( Friday, 27 February 2009 13:22 )


Wednesday, 25 February 2009

புலிகள் ஆயுதத்தை கீழே வைத்தல் என்பது துரோகமே PDF Print Write e-mail
Written by பி.இரயாகரன்
Wednesday, 25 February 2009 09:11
பி.இரயாகரன் - சமர் / 2009

எம் மக்கள் போராட்டம் தவறான போராட்டமாகி, பாரிய மக்கள் அழிவை ஏற்படுத்தும் போராட்டமாகி, குறுகிய வட்டத்துக்குள் குறுகிய நலன்களுடன் நடந்த புலிப் போராட்டம் இன்று சிதைகின்றது. இது தன் மீட்சிக்கான எந்த வழியுமின்றி, ஏகாதிபத்தியம் வரை இரந்து வேண்டுகின்றது. தன்னைக் காப்பாற்றிக்கொள்ள, அது எதையும் செய்யத் தயாரான நிலையில் உள்ளது. வேறுவழியின்றி தவிக்கின்றது. தவித்த முயலை அடித்துண்ண இந்தியா முதல் ஏகாதிபத்தியம் வரை வலை வீசுகின்றது. அதில் சிக்கி விடுவார்களா என்ற கேள்வி, எம்முன் எழுகின்றது.

Read more...
Last Updated ( Wednesday, 25 February 2009 09:13 )


Tuesday, 24 February 2009

உண்மையான மனித அவலத்துக்கு எதிராக யாரும் போராடவில்லை!? PDF Print Write e-mail
Written by பி.இரயாகரன்
Tuesday, 24 February 2009 17:34
பி.இரயாகரன் - சமர் / 2009

மனிதஅவலத்தை பற்றி பேசுவது சடங்காகி சம்பிரதாயமாகிவிட்டது. இதற்குள் அரசியல் சூழ்ச்சிகள். இதற்கு அமைய அவலம் அரசியலாக்கப்பட்டு, அவையே அவர்களின் அரசியலாகின்றது. இதற்கு பின் பிழைப்புத்தனம், நக்குண்ணித்தனம் என்ற விதம்விதமான கயவர் கூட்டத்தின் பிழைப்புகள்.

Read more...
Last Updated ( Tuesday, 24 February 2009 17:37 )

மனிதத்தை அழிப்பார் மடியினில் தீயிடு! PDF Print Write e-mail
Written by தமிழரங்கம்
Tuesday, 24 February 2009 15:10
அரசியல்_சமூகம் / சிறி

இளைய தலைமுறையே  இதோ வாங்கிக்கொள்
உன் வாழ்வுக்கான வாளும் கவசமும்.


வாழ்வின் மீதான நம்பிக்கைதானே
மானுடம் கொள்ளும் உயிர் மூச்சாகும்.

நாளைய காலம் நமக்கெனவாக
உன்னுள் எழுமதை உயிரினிலேற்று !
மனிதத்தை அழிப்பார் மடியினில் தீயிடு.

 

போரே இல்லாப் பொழுது வரும்வரை
 இறப்பு என்பது இல்லாதொழிந்திட  
அமைதியே மனித நியதியாகிட
நல்ல போர் தொடு நீயே பொருதிடு
பொல்லாப் போரிடும் மனித எதிரிகள் ஒழியவே.
இப் போரினில் மடியினும் பொசுக்கிடு தீமையை.

 

குறைவிலா வளங்கள் குவிந்ததிப்பூமி
சூரியன் தரும் ஒளி சுழன்றாடும் காற்று
உலகத்தின் பசி மடிய பூமித்தாய் தரும் உணவு
இவை எல்லாம் தனித்தெவரதும் சொத்தாமெனில்
தகர்த்திடு அந்நீசரை.
அனைத்தும் நம் பொதுவுடமை.

 

போரில் செந்நீரும் பசியின் கண்ணீரும்
பூமியை நனைத்திடின் அது மக்களுக்கெதிரான
மாக்களின் சூழ்ச்சி.

 
பொதுச்சொத்தினைக் கொள்ளை கொள் பொல்லாதார் வல்லமை.
மனிதம் வாழ மாய்த்திடு இக்கொடுமையை.

 

தனித்துரிமை கொள்வோர் சாம்ராஜ்யம் சாய்ந்தழியும் வரை
நீதிக்கான போரே நியதியன்றோ.
உன்னுயிரிலும் உடலிலும் வலிமையை உருவாயேற்றி
சாவினைச் சாக வைக்கும் இச்சமரினில்  வெற்றி கொள்வோம்.


வென்றதன் பொழுதில் ஆயுதம் என்பதோர்  வெறும் அகராதிச் சொல்.
அமைதி எங்கள்  ஆயுள் உரிமையாகும்.
மானுடம் என்பதன் மகத்துவம் மலர்ந்து மணம் கமழும்.

 

ஒவ்வோரு சகோதரனுக்கும் இது பிரமாணமாகட்டும்.
அழகினைக் காவல் காப்போம் . மனிதநேசத்தில் சுவாசம் கொள்வோம்.

 
நோர்வேஜிய மொழிக் கவிதை ஒன்றின் தழுவல்.

Read more...
Last Updated ( Tuesday, 24 February 2009 17:21 )


Monday, 23 February 2009

உலகமயமாக்கலும், இலங்கையில் பாசிசமயமாகலும் சுவிற்சலாந்து கருத்தரங்கு இரயாகரன் உரை PDF Print Write e-mail
Written by தமிழரங்கம்
Monday, 23 February 2009 21:25
ஒலி/ஒளிப்பேழைகள் / விபரணங்கள்-இலங்கை(ஒளி)

<{wmvremote}http://www.tamilcircle.net/P_videos/107/GlobalisationSwitzRaja.wmv{/wmvremote}

Read more...
Last Updated ( Wednesday, 30 August 2017 06:55 )

விடுதலைப்புலிகளின் அரசியல் அறிக்கை (ஆங்கிலம்) PDF Print Write e-mail
Written by தமிழரங்கம்
Monday, 23 February 2009 13:54
ஆவணக் களஞ்சியம் / விடுதலைப் புலிகள்
{pdf=http://www.tamilcircle.net/document/ltte/programs/ltte_eng.pdf|750|800} Read more...
Last Updated ( Friday, 27 March 2009 21:52 )

விடுதலைப்புலிகளின் அரசியல் அறிக்கை (தமிழ்) PDF Print Write e-mail
Written by தமிழரங்கம்
Monday, 23 February 2009 13:51
ஆவணக் களஞ்சியம் / விடுதலைப் புலிகள்

{pdf=http://www.tamilcircle.net/document/ltte/programs/ltte_tamil.pdf|750|800}

 

Read more...
Last Updated ( Friday, 27 March 2009 21:52 )

புலிகளின் நடத்தைகளே, அவர்களுக்கு எதிரான சர்வதேச தலையீடாக மாறுகின்றது! PDF Print Write e-mail
Written by பி.இரயாகரன்
Monday, 23 February 2009 10:31
பி.இரயாகரன் - சமர் / 2009

யாரும் தனக்குத் தானே புதைகுழியை வெட்டுவார்களா! ஆம் வெட்டுவார்கள். புலிகள் அதையே இன்று செய்துள்ளனர். அதையும் பல கோணத்தில் வெட்டுகின்றனர். 'மனிதாபிமான மீட்பு" என்ற பெயரில், புலிக்கு எதிரான ஒரு சர்வதேச தலையீடு. இதைக் கோரியே எமது போராட்டங்கள் நடந்தது என்பதுதான், எமது மக்களின் சொந்த அவலம். புலியைக் கொல்ல, புலிகள் போராடியுள்ளனர். இலங்கை அரசு மட்டுமல்ல, அமெரிக்கா தலைமையில் இணைத்தலைமை நாடுகளும் சேர்ந்து புலியை கொல்லக் கோரும் போராட்டமாக நடத்தியிருக்கின்றனர் புலிகள்.

Read more...
Last Updated ( Monday, 23 February 2009 10:36 )

Page 1 of 20